நுணலும்…

நான்தான் அப்பவே சொன்னேன்ல…

என்ன சொன்ன..

மீட்டிங்ல வாய மூடிட்டு சும்மா உக்காருன்னு…

அதுக்கு என்ன இப்பொ..

ஏன்யா… கன்ஸல்டன்ட நம்ம ஹெட்-ஹெச்ஆர்   கூட்டிக்கிட்டு வரும்போதே தெரியல… அந்த ஆள் ஒரு ப்ராஜக்ட நம்ம தலயில கட்ட போறார்னு… வந்தவனோ சும்மா இல்லாம ஒரு பவர் பாய்ன்ட் பிரஸன்டேஷன போட்டு ஒரே அலப்பற வேற…   பர்பாமன்ஸ் அப்ரைஸல ஒரு  ப்ராஜக்டா எடுக்கறது  நம்மாளு மட்டுந்தான்.

ஏன் எடுக்க கூடாதா…

முண்டமே…  பெர்பாமன்ஸ் அப்ரைஸல்ங்குறது  ஹெச்ஆர் பண்ண வேண்டிய வேல.  அத அவங்க பண்ணாம வெளியே எக்ஸ்டர்னல் சர்வீஸ்க்கு குடுத்தா அவன்  எப்படி  நம்ம பெர்பாமன்ஸ மெஷர் பண்ணுவான்…

கடவுளே.. இது ஒரு ஸிஸ்டம்.  அதான் பிரஸன்டேஷன் ஆரம்பிக்கும் போதே கொட்ட எழுத்திலே போட்டிருந்ததே பெர்பானன்ஸ் மேனேஜ்மென்ட் ஸிஸ்டம்ன்னு.  அதுதான் பிஎம்எஸ். இது வரைக்கும் ஸிஸ்டம் இல்லாத இடத்திலே ஸிஸ்டத்த கொண்டு வராங்க. அத புரிஞ்சுக்கணும்.

யோவ்… சத்தியமா சொல்லு.  முதல் ஸ்லைடில் போட்டிருந்த பிஎம்எஸ்ஸ தவிர வேற ஏதாவது உனக்கு புரிஞ்சுது…

ம்… அது வந்து…

எனக்கு தெரியும் அது உனக்கு புரிஞ்சிருக்க சான்ஸே இல்லன்னு. ஏன்னா வழக்கமா மீட்டிங்குல சும்மா இருக்குற நீ இன்னிக்குன்னு பாத்து கேள்வியெல்லாம் கேட்டியே…

அப்படின்னா புரிஞ்சுதுன்னுதானே அர்த்தம்…

அப்பா காத்தவராயா… உன்ன பத்தியா எனக்கு தெரியாது. அவன் பாட்டுக்கு ஏதோ  வேல்யூசெய்ன்,   வேல்யூஅடிஷன்,   ஷேர்ஹோல்டர்வேல்யூ,   சோஷிலசெய்ன்,   பென்ஞ்ச்மார்க்கிங் அப்படி இப்படின்னு பொளந்து கட்றான்.  நீ என்னடான்னா எல்லாமே உனக்கு புரிஞ்ச மாதிரி மண்டய ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிக்கிட்டிக்கே.  சரி புரிஞ்சுதான் மண்டய ஆட்டுறியோன்னு பாத்தா  அப்புறம்தான் தெரிஞ்சுது உனக்கு நேரா உங்க பாஸ் உக்காந்திருக்காரு.  இதுல வேற கேனத்தனமா கேள்வி கேக்குற..

நான் என்ன கேட்டேன்.    “வாட்டிஸ் தி   இன்புட் அண்ட் அவுட்புட் ஆஃப் பிஎம்எஸ்” ன்னுதானே கேட்டேன்..

அதுக்கு அவன் என்ன சொன்னான்…

“திஸ் இஸ் எ வெரி குட் குஸ்டின்” னனு சொன்னான்.

அவன்கிட்ட கேள்வி கேட்ட எல்லார்கிட்டயும் தான் “திஸ் இஸ் எ வெரி குட் குஸ்டின்” அப்படின்னு சொன்னான். எவனுக்காவது விளங்கறமாதிரி அவன் பதில் சொன்னானா..

இப்ப நீ என்ன சொல்ல வர..

நீ கேட்ட கேள்வியையும் நீ மண்டய ஆட்டுனதையும் பார்த்துட்டு…

 பார்த்துட்டு…

அந்த கன்ஸல்டன்ட் நம்ம ஹெட்-ஹெச்ஆர்கிட்ட…

 ஹெட்-ஹெச்ஆர்கிட்ட…

உன்னயே இந்த ப்ராஜக்ட்டுக்கு  லீடரா போடணும்னு ரெகமண்ட் பண்ணிட்டான்…

 

Advertisements
Published in: on திசெம்பர் 30, 2009 at 6:27 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2009/12/30/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: