இடம், பொருள், ஓவல்…

‘சார்.. ஓவல் டின்ன காணல சார்’  மேலதிகாரியின் காரியதரிசி  மூச்சிரைக்க ஓடி வந்தாள்.

‘என்னம்மா ஆச்சு?’ (பாதிநேரம் இவ பிரச்சினய தீக்கறதே வேலயாபோச்சு..)

‘சார்.  ஒரு புதிய ஓவல் டின்  வாங்கி வச்சிருந்தேன். அது இப்ப காணல..’

‘ஓவல் டின்னா?  யாருக்கு?’

‘நம்ம பாஸ்க்குதான் சார்.   பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு சொல்லி பாஸ் ரூமில…’  (ஓ இது வேற நடக்குதா…)

‘ரூமில எங்க வச்ச?’

‘பாஸ் ரூமில புக் ஷெல்ப்புக்கு உள்ளார வச்சேன்’.

‘ஏம்மா அங்க கொண்டு போய் வச்ச. வக்கிறத்துக்கு வேற இடமே கெடக்கலியா? ’ என்றேன் சற்று கடுப்பாக.

 ‘சார் லாஸ்ட் டைம் பேன்ட்ரிலதான் வச்சேன். அப்ப டின் இருந்தது. பவுடர் காணலே. அதனாலதான் சேஃபா இருக்கட்டுமேன்னு பாஸ் ரூமில புக் ஷெல்ப்புக்கு உள்ளார வச்சேன்.’

‘சரி அதுக்கு நான் என்னம்மா செய்யட்டும்?’

‘இல்ல நேத்து  நீங்கதான் கடைசியா பாஸ் ரூமுக்குள்ளாற போய் வந்ததா சொன்னாங்க…’

‘ ஐய்யயோ… நா போனது ஆனுவல் ரிப்போர்ட் எடுக்க.   என்னம்மா என்னயப்போயி சொல்ற…’

‘சார் நா உங்கள சொல்லல. நீங்க பாத்தீங்களான்னுதான் கேட்டேன்…’

‘நல்லா கேட்ட போ…  அங்க ஓவலை வச்சிட்டு எனக்கு ஏவல வச்சிட்டேயேம்மா…’   ‘ பாஸ் டெய்லி ஓவல் குடிப்பாரோ?’

‘அதல்லாம் இல்ல சார்.  எப்பவாவது பசிக்கும் போது குடிப்பாரு..’

‘சரி விடு பார்க்கலாம்’ என்றேன்.  இதை ஏன் இவ்வளவு முக்கியமாக பார்க்கிறேன் என்றால் என் மேலதிகாரி யானை போனதை விட்டுவிட்டு எலி போனதுக்கெல்லாம் என்னை தும்சம் செய்வார்.  தெளிவாக சொல்லி விடுகிறேன். அவருக்கு கோபம் வந்துவிட்டால் முதலில் அவர் கூப்பிடும்  நபர் நானாகத்தான் இருக்க முடியும். அது அவரது வீட்டு  பிரச்சினையாக  இருந்தாலும் சரி ஆபீஸ்  பிரச்சினையாக இருந்தாலும் சரி அவருடைய கோபத்தை  தணிக்க அவர் அப்பாயின்மென்ட் செய்திருக்கும் ஒரே நபர் நான்தான். (அவர் வீட்டு நாய் சாப்பிடலனாக்கூட என்னயத்தான் திட்டுவார்). அவர் கோப பட்டு பேசும் போது குறுக்கே பேசிவிட்டால் அவ்வளவுதான். ஒரு முறை ஒரு முக்கியமான பைலை காணவில்லை என்று ஒரே கூப்பாடு. நான் சும்மா இல்லாமல் ‘சார் அது உங்க டேபிள் மேலேயே பார்த்தேனே என்றேன்..’  அவ்வளவுதான். என்னை  வதம் செய்து விட்டார். அன்று நான் மிகமிக அமைதியாக இருந்ததால் (வேற வழி)  இவன்தான் சரியான ஆள் என்று என்னை அக்கவுண்ட்ஸ் கம் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜராக ஆக்கிவிட்டார்  (அடிமை சிக்கிட்டான்).  அன்றிலிருந்து எனக்கு எவ்வளவு அடித்தாலும் வலிப்பதே இல்லை. 

நேரம் நகர்ந்தது.  காரியதரிசி என்னிடம் வந்து ‘சார் பாஸ் கூப்பிடறார்’ என்றாள். (போட்டுகொடுத்துவிட்டாளோ?..)

‘மே ஐ கம் இன் சார்’

எஸ் கம் இன் என்று எதிர்பார்த்தவனுக்கு ‘வாங்க உட்காருங்க’ என்று தேன் வந்து பாய்ந்தது.

உட்கார்ந்து ‘சொல்லுங்க சார்’ என்றேன்.

‘இந்த வருஷத்தோட பட்ஜட் ப்ரபோசல் ரெடியாயிடுத்தா..’ 

‘லாஸ்ட் இயரோட ஆனுவல் ரிப்போட்ட பேஸ்பண்ணி இந்த வருஷத்துக்கு ரெடி பண்ணிகிட்டிருக்கோம் சார்’. ‘இட் வில் பி கம்ப்ளிடட் டுடே ஈவினிங் சார்…’  (நேத்து ஈவினிங்தானே  ஆரம்பிச்சோம்.  அதுக்குள்ள கேட்டா எப்படி…)

‘குட்.. நாளைக்கு மார்னிங் அது என் டேபிள்ள இருக்கணும்.’

‘ஓ கே சார்.’ ( நாளைக்குத்தானே… பாக்கலாம்)

‘என்ன மிஸ்டர் டல்லாயிருக்கீங்க.  காலையில சாப்பிடலயா? ’  (என்ன ஒரு அன்பு…எனக்கு தெரியாதா உன்னப்பத்தி..)

‘பட்ஜட் ப்ரபோசல் வொர்க்குக்காக இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டேன் சார்.’   (பொய்…)

 ‘நோ நோ.. உடம்ப கெடுத்துக்காதீங்க..’  பஸ்ஸரை அழுத்தினார்.  காரியதரிசி உள்ளே வந்தாள்.

“ பிரிங் டூ கப் ஆஃப் ஓவல் இம்மிடியேட்லி…”

 

Advertisements

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/01/05/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: