தூத்துக்குடி…2

நண்பனை தட்டி எழுப்பிவிட்டு மீண்டும் கதவருகே வந்தேன்.  வெளியே மெதுவாக எட்டிப்பார்த்தேன். வளைவில் ரயில்வண்டி போய்க்கொண்டிருந்தது. தலையும் வாலும் தெளிவாக தெரிந்தது.  இரயில் வண்டியின் இந்த நிலையை படமெடுக்க செல்பேசியை துழாவினேன். காணவில்லை. மனைவியின் முகம் ஒரு முறை என் கண் முன்னே வந்து போனது. ஞாபகம் வந்தவனாய் பெர்தின் மேல் கைவிட்டேன். கடவுள் என்னை கைவிடவில்லை. அதற்க்குள் பின்னாலிருந்து நண்பன் ‘தூத்துக்குடி ஸ்டேஷன் வந்து விட்டது வா என்றான்’  என்பெட்டியை இழுத்தபடி.

வெளியே வந்தோம். என்னவொரு ஆச்சர்யம் எந்த டாக்ஸிக்காரரும் என்னருகில் வந்து ‘சார் டாக்ஸி வேணுமா சார்’ என்று கேட்கவில்லை.  பிறகுதான் தெரிந்தது அவர்கள் வெறும் கையைவீசிக்கொண்டு வரும் யாரையும் அணுகுவதில்லை என்று. முத்துநகரம் உங்களை அன்போடு வரவேற்கிறது என அழகான சிப்பிக்குள் முத்து எங்களை வரவேற்றது. கிளிக்கிக்கொண்டேன். என் நண்பனின் குரல் அழைத்தது ‘உன் பெட்டியையும் டிக்கில வச்சிரவா’. கல்யாணமாப்பிள்ளை வந்த வண்டியிலேயே நாங்களும் வந்ததால் அவர்களுள் ஒருவராக எங்களுக்கும் வண்டி ஏற்பாடாகியிருந்தது. ‘நமக்கு எங்கே ரூம் போட்டிருக்காங்க’  என்றான் நண்பன். ‘வண்டி போய் சேரும்போது தெரியும்…  அதுவரை வாயை மூடிக்கிட்டு வா’ இது நான். ஐந்து நிமிட பயணம். வண்டி ஒரு வளைவில் திரும்ப அங்கே அசல் பட ப்ளக்ஸி பேனரில் அஜீத் சுருட்டு பிடித்து கொண்டிருந்தார்.  பேனரின் கீழே ஏகத்துக்கும் கூட்டம். நண்பன் மீண்டும் ‘ஏன் இவ்வளவு பேர் இங்க நிக்கறாங்க’.  ‘எல்லாம் அஜீத் ரசிகர்களாக இருப்பார்கள்’ என்றேன். வண்டி ஒரு ஓட்டலின் போர்டிகோவில் போய் நின்றது. 

பின் கதவை திறந்துவிட்ட டிரைவர் ‘பாத்து இறங்குங்க அண்ணாச்சி’ என்றார் அன்பாக. தூத்துக்குடி வட்டாரமொழியை தூதுக்குடியிலேயே கேட்பதற்கு இன்பமாயிருந்தது. அண்ணாச்சிக்கு நன்றி சொல்லிவிட்டு எங்களுக்கு ஒதுக்கபட்டிருந்த அறை மூன்றாவது மாடி என்பதால் லிப்ட்டை  நோக்கி நகர்ந்தோம்.  செல்லடித்தது.  மனைவி. தூத்துக்குடியை அடைந்துவிட்டோம் என்று முடித்துக்கொண்டேன்.  விசாலமான அறை.  இரண்டு படுக்கைகள்.  ஏர்கண்டிஷன் மற்றும்  டிவியை ஆன் செய்தேன்.  லோக்கல் சேனலில் ஒரு பாதிரி கதைத்துக்கொண்டிருந்தார்.  மீண்டும் செல்லடித்தது. இம்முறை மணமகன்.  பத்துமணிக்கெல்லாம் நிச்சயதார்த்தம் நடக்கிற வைபோகம். சீக்கிரம் குளித்து முடித்துவிட்டு வரும்படி அன்புக்கட்டளை. நண்பனை தேடினேன்.  குளியலறையின் கதவிடுக்கின்வழியே புகை வந்துகொண்டிருந்தது.  நான் மெல்ல பால்கனி இருக்குமிடம் நோக்கி நகர்ந்தேன். வெயிலோன் வந்துவிட்டிருந்தான்.  மீண்டும் அஜீத். நான் முன்பு பார்த்த அதே பேனர் இப்போது எனக்கு நேரெதிர் கீழே.  கூட்டம் குறைந்திருந்தது.  நண்பனும் என்னுடன் சேர்ந்து கொண்டு காலை நேர சாலையின் பரபரப்பை ரசித்துக்கொண்டிருந்தான்.

….. பயணம் தொடரும்

Advertisements
Published in: on பிப்ரவரி 9, 2010 at 11:53 முப  Comments (5)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/02/09/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-2/trackback/

RSS feed for comments on this post.

5 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. பயணக்கட்டுரை நல்லா எழுதுறீங்க நண்பரே!

  2. தங்களின் வருகைக்கும் என்னை ஊக்கப்படுத்தியமைக்கும் மனமார்ந்த நன்றி. அடிக்கடி வாருங்கள்.

  3. நல்லா எழுதுறீங்க சுரேந்திரன்.

    தூத்துக்குடியில யாரக் கேட்டாலும் இந்த ஓட்டல தான் கையக் காமிப்பாங்க. ரொம்பச் சுமாராத் தான் இருக்கும்.

  4. // வெயிலோன் வந்துவிட்டிருந்தான் //

    நான் வரவேயில்லயே சுரேந்திரன் :)

  5. வெயிலோன் அவர்களின் வருகைக்கு நன்றி. நீங்க வரல. நாங்கதான் உங்கள சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருக்கோம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: