தூத்துக்குடி…8

அதிகாலையில் விழித்தேன்.  நண்பர்கள் நல்ல உறக்கத்திலிருந்தார்கள்.  அறையைவிட்டு வெளியே வந்தேன்.  சில்லென்றிருந்தது.  புகைக்கவேண்டும் போல் தோன்றியது.  படிகளில் இறங்கி ஒட்டலின் எதிரே உள்ள கடைக்கு செல்லலாமென நடந்தேன். வெளியே காக்கைகள் ஒன்றாக கூடி சத்தமிடுவது போல ஒரே ஜனங்களின் இரைச்சல்.  நான் நேற்று பார்த்த அசல் அஜீத் பேனரின் கீழேதான்.  ஆனால் ஒரு பெரிய சந்தைக்கான கூட்டம்.  விசாரித்தேன்.  அவர்கள் அனைவரும் துறைமுக ஒப்பந்த தொழிலாளர்களாம்.  தினமும் அதிகாலை அவர்கள் அங்கே கூடுவார்கள். பின்னர் அவர்களுக்குரிய ஒப்பந்ததாரரின் வண்டி வந்த உடனே அதில் வேலைக்கு சென்றுவிடுவார்களாம்.  (நேற்று இவ்வளவு கூட்டத்தையும் அஜீத் ரசிகர்கள் என்று…..) எனக்கு துறைமுகத்தை பார்க்க ஆவலாய் இருந்தது.  விசாரித்ததில் இன்று வேலைநிறுத்தம் என்று கூறினார்கள்.  நானும் பதிலுக்கு இவ்வளவுபேர் வேலைக்கு போகும் போது எப்படி வேலைநிறுத்தம் என்று சொல்லுகிறீர்கள் என்றேன்.   இது அலுவலக ஊழியர்கள் சம்பந்தப்பட்டது என்றார்கள்.  புரியவில்லை என்றாலும் புரிந்தது போல் தலையாட்டிவிட்டு அறைக்கு திரும்பினேன்.

நண்பர்கள் எழுந்துவிட்டிருந்தார்கள்.  நான் உள்ளே நுழைந்து அமைதியானேன்.  ‘இன்றைக்கு என்ன புரோகிராம்’ என்றான் நண்பன். இன்று மாலை ஏழு மணிக்குத்தான் எங்களுடைய புறப்பாடு என்பதால் ‘வெளியே எங்காவது போய் சுற்றிவிட்டு வரலாம்’ என்றேன். நண்பன் ‘திருசெந்தூர் போய்வரலாம்’ என்றான். நான் இதுவரை போனதில்லை என்பதால் அதை ஆமோதித்தேன்.  திருசெந்தூர் என ஏகமனதாக முடிவானது.  அனைவரும் புறப்பட ஆயத்தமானோம்.

அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டோம்.  திருசெந்தூர் கோவில் என்று உறுதிசெய்யுமாறு ஏற்கனவே லோக்கல் பார்ட்டிகள் சொல்லியிருந்ததால் நேராக கோவில் வாசலில் போய் நிற்க்கும் என்று நடத்துனர் கூறிய பின்னரே பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.  தனியார் நடத்தும் பேருந்து ஆதலால் நன்றாக பேருந்தை பராமரித்திருந்தார்கள்.  ஜன்னலோர இருக்கையை எனதாக்கிக்கொண்டேன்.  பேருந்து புறப்பட்டது.  தூத்துக்குடியின் பிரதான சாலைகளை கடந்து வெளியே வேகமெடுத்திருந்தது.  நான் கண்ணாடி கதவின் வழியே வேகமாக ஓடிய உப்பளங்களை கண்டேன்.  ஏற்க்கனவே சென்னையில் உப்பளங்களை பார்த்திருந்ததனால் என் மனம் அதில் லயிக்கவில்லை.  ஆனாலும் போகப்போக பிரம்மாண்டமான உப்புநிறுவனங்களின் மிகப்பெரிய கூரைகளை கண்டு வியந்தேன்.  வழியில் பல கல்லூரிகள்.  பெயர் படிப்பதற்க்கு முன்னால் ஓடி மறைந்தன.  நடுவில் நிறைய தேவாலங்களை கண்டேன்.  வேலியில்லாத வாழைத்தோப்புகள்.  சுமார் முக்கால் மணிநேரத்திற்கு பிறகு ஆத்தூரில் வண்டி நின்றது.   ஆறும் தெரிந்தது.  ஆறுமுகநேரிக்கு பிறது காயல்பட்டினம். முஸ்லிம்கள் நிறைந்த ஊர் என்று கூறுவதைவிட சின்னதுபாய் எனும் அளவிற்கு அற்புதமான வேலைப்பாடுகளுடைய உயரிய வீடுகளை கண்டேன். சின்னசின்ன கடைகளில் கூட பாய்தான்.  ரசித்தேன்.  சுமார் ஒன்றரை மணிநேர பயணத்திற்க்கு பிறகு திருச்செந்தூர் வந்தடைந்தோம்.  ஓட்டுப்போடாத எங்களுக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார் போஸ்டரில். கோவிலின் முன் இறங்கினோம்.  இம்முறை உள்வாங்காத கடற்கரை. கோவிலை நோக்கி நடந்தோம். 

….. பயணம் தொடரும்

Advertisements
Published in: on பிப்ரவரி 18, 2010 at 11:22 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/02/18/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-8/trackback/

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: