நாகராஜ் எனும் நாகு…

‘சந்தைக்கு போகணும்… ஆத்தா வையும்… காசு குடு…’ என்னும் வசனத்தை பதினாறுவயதினிலே படத்தில் சொல்லும் சப்பாணி கேரக்டரை நினைவில் கொள்ளுங்கள்.  கமல்ஹாசனை மறந்துவிடுங்கள் (அது எப்படி).  கருத்த குட்டையான உருவம்.  எண்ணெய் தடவிய மொட்டைத்தலை.  வச்சதா தேய்ச்சதா என தெரியாத அளவிற்க்கு விபூதிபட்டை.  அலைபாயும் கண்கள்.  சிறிய தொந்தி. அதற்க்குமேல் பொன்வண்டு சோப் விளம்பர கைப்பனியன்.  காக்கி டிரைளசர்.   சப்பாணிபோல் நொண்டி நொண்டி நடக்காமல் கடைசிபஸ்ஸை பிடிக்கபோவது போன்ற வேகமான நடை. வயது 40 (இருக்கலாம்..).  இதுதான் நாகராஜ் எனப்படும் நாகு (இனிமேல் நாகுதான்).

நாகு என்று விளித்தால் ப்ரேக்போட்ட பைக் போல நின்று உடனே அழைத்தவரிடம் ஓடிப்போவான். ‘மழை வர்ர மாதிரி இருக்கு… இந்த விறகு கட்டைகளை உள்ளே வைச்சுடறியா’… ‘நாகு இந்த கேஸ் சிலிண்டரை சித்த வெளியில இருக்கிற கேஸ் வண்டியில கொண்டுபோய் வை’…‘ நாகு.. கொஞ்சம் இந்த கைப்பம்பில ரெண்டு குடம் தண்ணியடிச்சு தாயேன்’… என்பது போன்ற சில பல வேலைகளை செவ்வனே செய்பவன். ஆனால் நாகு ஒரு வேலைக்காரனல்ல. வேலைக்காரனென்றால் கூலி வாங்க வேண்டுமே.  ஆனால் நாகு செய்கின்ற வேலைகளுக்கு காசு வாங்குவதில்லை.  அவன் ஒரு பரோபகாரி.  மாறாக பழைய சாதமோ (சில சமயம் புதியதாகவும்), காபியோ இல்லை டீயோ  அவ்வளவுதான்.

நாகுவை சிறுவயது முதலே எனக்கு தெரியும்.  ‘எங்கிருந்தோ வந்தான்’ ஸ்டைலில் இந்த ஊருக்கு வந்தவன்.  கோவில் மண்டபத்தில் குடியிருப்பு.  அண்ணாச்சி கடையில் மட்டும் கூட்டி பெருக்கும் வேலை (கைப்பனியனும் டிரைளசரும் அண்ணாச்சி தந்தவை).  நட்பு என்றால் பூக்காரம்மா மட்டும்தான்.  சில சமயம் விடலைகள் நாகுவின் டிரைளசரை பிடித்து இழுத்து கேலி செய்யும் போது பூக்காரம்மா துடைப்பத்தோடு அவர்களை விரட்ட நான் கண்டிருக்கிறேன்.  நாகுவிடம் எனக்கு பிடித்தது அவன் சுத்தம்.  காலையில் எழுந்ததும் குளித்து முடித்து, கந்தையானாலும் கசக்கி கட்டி பளிச்சென்றிருப்பான்.  சாப்பிடும்போது ஒரு பருக்கையைக்கூட வீணடிக்கமாட்டான்.  எப்போதும் வேலையாகவே இருப்பான்.  உயிர்களிட்த்து மிக  அன்பானவன்.  எங்கள் பகுதியில் உள்ள நாய்களுக்கு அவன்தான் பாதுகாவலன். (ஒரு முறை  அடிபட்ட நாயை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடியது நினைவிருக்கிறது).

நாகு குழந்தைகளிடம் மிக அன்பானவன்.  ஆனால் குழந்தைகள் நாகுவை பாத்து பயப்படும்.  ஏனென்றால் அழும் குழந்தைகளை ‘நாகுகிட்ட பிடிச்சு குடுத்துடுவேன்’ என பயமுறுத்திவைத்திருந்தார்கள்.  எங்கள் அம்மா சில சமயம் நாகுவை உள்ளே அழைத்து உணவளிப்பாள் (பல சமயம் வெளியே). நானும் என் தங்கையும் தூணின் மறைவிலிருந்து நாகுவை பயத்துடன் எட்டிப்பார்ப்போம் (பிடிச்சுக்கிட்டு போய்ட்டான்னா…).  அம்மா அவன் சாப்பிடும் போது ‘உங்க அம்மா அப்பால்லாம் எங்க இருக்காங்க நாகு’ என்று மெதுவாக கேட்பாள்.  சட்டென தலையை சாய்த்து ‘போக்கா.. எத்தன தடவ சொல்லியிருக்கேன்.. அதப்பத்தி கேக்காதேன்னு’   நாகுவின் முகம் வாடும்.  ‘சரிசரி… தீபாளிக்கு எங்க வீட்டுக்கு வந்துரு.. நிறைய வேலையிருக்கு’ என்றாள் அம்மா.  ‘சரிக்கா’ என்றபடி  விட்டால் போதுமனெ வேகமாக போய்விடுவான்.

இப்படிப்பட்ட நாகுவிற்க்கு சோதனை வராமலா போய்விடும்.  வந்தது.  கோவில் உண்டியலை காணவில்லை.  எல்லோரும் கூடி விவாதித்து இறுதியாக சினிமாவில் வருவதுபோலவே நாகுவை சந்தேகப்பட்டார்கள்.  போலீசும் நாகுவை அள்ளிக்கொண்டு போனது. பூக்காரம்மா மட்டும் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்தாள்.   பூஜாரியின் மகன் தான் உண்டியலை ஆட்டயப்போட்டானென்று போலீஸ் கண்டுபிடித்து அரஸ்ட் செய்தது.  பிறகு ஒருவாரத்தின் இறுதியில்  நாகுவெளியே வந்தான்.  

இப்போதெல்லாம் நாகு முன்னைப்போல் வெளியே வருவதில்லை. அண்ணாச்சி எவ்வளவு அழைத்தும் அவர்களுடைய கடையை கூட்டி பெருக்க செல்லவில்லை.  பூக்காரம்மா எவ்வளவு சொல்லியும் நாகு கேட்க்கவில்லை. கோவில் மண்டபமே கதியாக கிடந்தான். நாட்க்கள் நகர்ந்தன.

ஒருநாள் விடியற்க்காலையில் எங்கள் அம்மா வெளிக்கதவை திறந்துகொண்டு எங்கோ பதட்டத்தோடு செல்வது தெரிந்தது.  நானும் தங்கையும் எழுந்து வெளியில் வந்து அம்மா போன திசையில் பார்த்தோம்.  தூரத்தில் கோவில் மண்டபத்தைச்சுற்றி ஒரே கூட்டமாக இருந்தது. பூக்காரம்மாவின் அழுகையொலி எங்களுக்கு தெளிவாக கேட்டது.

 

Advertisements
Published in: on பிப்ரவரி 22, 2010 at 9:20 முப  Comments (5)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/02/22/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%81/trackback/

RSS feed for comments on this post.

5 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

 1. in memory of sujatha as yuvakrishna pointed out you are really making the surge ,it is going to reach some vast amount of audience with momentum.
  congrats

 2. fgbfnb;sakln amkanj kldkbd .BJHM, ,MN

 3. Thank you Arul. Thanks for comming and commenting.

 4. Hi surendran! really nice!!
  Yuvakrishna pointed out U
  Congrats

  • Thanks for coming and commeting Jee… and also thanks to Yuva…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: