பாண்டி…

‘பாண்டி வரான்டோய்’ என்ற சத்தம் கேட்டாலே  நண்பர்கள் கூட்டத்துக்கு  உற்ச்சாகம் வந்துவிடும்.  அவ்வளவு வேடிக்ககையனவன் பாண்டியன்.  சராசரி உயரம்..மா நிறம்…  முன்பல்லிரண்டு துருத்திக்கொண்டு… ரஜினி ஹேர்ஸ்டைல்(பழைய ரஜினி)..  ஜீன்ஸ்டிசர்ட் என எப்போதும் கேஷவலாகவே வலம் வருவான். வேடிக்கையாக பேசுவதே அவன் பாணி. சில சமயம் சீரியஸ் பேச்சுக்களுக்கும் குறைவில்லை. ஆனால் என்ன வசியம் செய்வானோ தெரியாது… பேசப்பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.  பேச்சின் கால்பகுதி உண்மையாகவும்  முக்கால் பகுதி உடான்ஸ்ஸாகவும் இருக்கும். இது எங்களுக்கு தெரிந்தும் நாங்கள் சீரியஸாக கேட்டுக்கொண்டிருப்போம். ‘நேத்து பீச் ரோட்ல டோனிய பாத்தேன்.. பைக்ல என்னா ஸ்பீடா போறான் தெரியுமா’.. இப்படி ஆரம்பிச்சு ‘திருவல்லிக்கேணி ரயில்வே பிரிட்ஜ்க்கு அடியில நான் போய்க்கிட்டு இருக்கிறப்போ ஒரு பிகர் என்னை கூப்பிட்டுச்சு’…‘நேத்து எம்.எல்.ஏ ஹால்டலில் எங்க  தொகுதி எம்.எல்.ஏ கூட ஒரே தண்ணி…மனுஷன் ஆப்புக்கே கவுந்துட்டான்’    என இலக்கில்லாமல் பேசுவான்.

 ‘பேச்சுலர் பாய்ஸ்’ இது அவன் தங்கியிருகும் அறைக்கு முன் உள்ள வாசகம். இவனும் இவன் ஊர்க்கார பையனும் தங்கியிருந்தார்கள்.  ஊர் மன்னார்குடி.  இங்கே சென்னையில் இவனுக்கு வேலை. இவன் சம்பாதித்து செலவு செய்வதை விட அப்பா சிங்கப்பூரிலிருந்து மாதாமாதம் தவறாமல் அனுப்பும் பணத்தினால்   இவன் செலவு செய்கிறான் என்று ஆளை பார்த்தாலே சொல்லிவிட முடியும் (ஒரு நாளைக்கு நாலு டீசர்ட்டுன்னா பாத்துக்கங்களேன்). அவன் வச்சிருக்கிற பைக் இம்போர்டட் என்பான்.  அவன் போட்டிருக்கும் கண்ணாடி போலீஸ் (police) என்பான். நாளைக்கு சிங்கப்பூர் போய்விட்டு மறு நாளே சென்னை திரும்பணும் என்பான். எதுக்காக போகிறான் என்றால் கண்ணடிப்பான்.. ஒரு எழவும் எங்களுக்கு புரியாது. ‘மாப்ள.. மாம்ஸ்… மச்சான்… பங்காளி… தாயோளி என பலதரப்பட்ட வட்டார வழக்குகளை, தமிழ் விளியல்களை அனாவசியமாக அந்தந்த இடத்திற்க்கு ஏற்றார்போல் எடுத்து வீசுவான். பயமறியான்.  ஒரு முறை குடித்துவிட்டு ஒரு போலீஸ்காரரையே அடிக்குமளவிற்க்கு போய்விட்டான் (பின்னாளில் அதே போலீற்காரருடன் உக்காந்து குடித்தது வேறு விஷயம்). ஆனால்  moneyதாபிமானம் உள்ளவன்.  ஆகையால் நாங்கள் அவனுடன் எப்போதும் இருந்தோம்.

இத்தகைய சிறப்புக்கள் பெற்ற பாண்டியனுக்கு வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு முறையாவது வரும் அது வந்தது. ஓ.. அதுன்னா தப்பாயிடுமோ… அது என்றால் காதல். முதலில் இது எங்களுக்கு தெரியாது. பின்னர் ஒரு முறை எங்களுடன் டாஸ்மாக் பாரில் அமர்ந்து ஸ்காட்ச்(சொல்லி வைப்போமே..) அடித்துக்கொண்டிருந்த போது ரொம்பநேரமாக ஆம்லட் போடும் ஸ்ட்வையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.  முதலில் நாங்களும் ஆம்லட்டின் மீதுள்ள மோகத்தினால்தான் பார்க்கிறான் என நினைத்தோம்.  ஆனால் ஸ்ட்வை அணைத்தப்பின்னும் வைத்தகண் வாங்காமல் பார்த்ததுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ‘பாண்டி’ என அழைத்தும் பதிலில்லை.  ‘பாண்டி’ என அவனை தட்டியவுடன் திடுப்பென விழிப்பவன் போல அதிர்ந்து ‘என்ன’ என்றான். ‘என்ன பாண்டி ஒரு மாதிரி இருக்கே.. உடம்பு சரியில்லையா’ என்றேன் நான்.  ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை.. வாங்க போகலாம்’ என்றான்.  எங்களுக்கு இடித்தது. மறுநாள் அவனுடைய சகாவை அன்பாக தட்டினோம். கக்கி விட்டான் காதலென்று(சினிமா டைட்டில் போல இல்ல).

நாங்கள் ஆர்வமானோம். மெதுவாக ‘யாரு பாண்டி’ என்றோம். முதலில் தயங்கியவன் பின்னர் ‘யாருன்னுதெரியாது.. நான் போற கம்பூட்டர் இன்ஸிடியூட்டுக்கு ரெகுலரா வருவாங்க… பாத்து சிரிப்பேன் அவ்வளவுதான்’ என்றான். ‘என்ன வருவாங்களா.. டே பாத்துடா.. கல்யாணம் ஆனவங்களா இருக்கப்போவுது..’ என்றான் எங்களின் சீனியர். ‘இல்ல மாப்ள.. அவங்க எனக்கு கம்பூட்டர் சொல்லி கொடுக்கிறவங்க..’ என்றான். சீனியர் பட்டென ‘சந்தேகமே இல்ல இவன் ஏதோ ஆன்டியத்தான் கரக்ட் பண்றான்.. எனக்கு புரிஞ்சுபோச்சு..’ என்றான். நான் இடைமறித்து ‘சும்மாயிருங்க… பாண்டி இன்னக்கு எங்களுக்கு உன் ஆளைக்காமி..  நாங்க பாத்து சொல்றோம்..’(என்னத்த சொல்றது) என்றேன். ‘அய்யையோ… உங்களுக்கா வேணாம் சாமீ… இத நானே டீல் பண்ணிக்கறேன்’ என்றான். பிறது வெகு நேர வற்ப்புறுத்தலுக்கு பிறகு முதலில் எங்களில் ஒருவருக்கு பாண்டியின் ஆளை காண்பிப்பதாக உறுதியளித்தான்.  அதன்பிறகு குலுக்கல் முறையில் நான் தேர்வு செய்யப்பட்டேன். நான் பாண்டியிடம் ‘எப்போ  பாக்கலாம் பாண்டி’  என்றேன்.  அவனோ ‘சாயந்திரம் என்னுடன் இன்ஸிடியூட்டுக்கு வா’ என்றான்.  வரப்போகும் அபாயம் தெரியாமல் நானும் தயாரானேன்.

….  வருவான்

Advertisements
Published in: on பிப்ரவரி 23, 2010 at 12:01 பிப  Comments (2)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/02/23/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/trackback/

RSS feed for comments on this post.

2 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. nice blog


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: