திருச்சிமலக்கோட்டடா…

என்ன.. மரியாத குறையுது என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.  என்ன செய்ய.. தலைப்பை கொஞ்சம் வித்தியாசமா போட்டாத்தான் நம்மாளுங்க நம்பள திரும்பி பாக்குறாங்க. (வேற ஒண்ணும் இல்லிங்க… திருநெல்வேலி அல்வாடா… திருச்சி மல கோட்டடா.. ன்னு ஒரு பாட்டு வருதில்ல…). சரி விஷயத்துக்கு வருவோம்.  இதுவரை திருச்சி மலைக்கோட்டைக்கு இரண்டு முறை விஜயம் செய்துள்ளேன்.  ஒன்று என் பள்ளி பருவத்தில் சுற்றுலா செல்லும் போது. மலைக்கோட்டையின் கீழே சற்றே ஏற்றம் நிறைந்த ஒரு வீதியில் எங்கள் ஆசிரியர் எங்களை வரிசையாக நிற்க்கவைத்து அழைத்துச்செல்லும்போது அந்த வீதியே வேடிக்கை பார்க்கவந்த எங்களை வேடிக்கை பார்த்தது. இரண்டாவது முறை எனக்கு திருமணமானபின் என் மனைவி மற்றும் என் மகளுடன் சமீபத்தில் சென்றது.  அதன் அனுபவம் தான் இந்தப்பதிவு.

இளம்மாலை வேளையில் நாங்கள் ஏற ஆயத்தமானோம்.  சபரிமலை சீசன் ஆதாலால் அடிவார பிள்ளையாருக்கு ஏக கிராக்கி.  கண்டும் காணாமல் தரிசித்துவிட்டு ஏற துவங்கினோம்.  சின்னஞ்சிறுசுகள் வேகமாக படிக்கட்டுகளை தாவித்தாவி ஏறின.   இது போன்ற நெட்டான மலைகளில் வயதானவர்கள் ஏறும் போது Z  என திசை மாறிக்கொண்டே ஏறினால் எளிதாக ஏறலாம் என்பதை  கண்கூடாக கண்டேன். ஒரு முதியவர்  திசை மாறி மாறி மெல்ல ஏறிக்கொண்டிருந்தார்.   ஒரு இடத்தில் ஏற்றம் கூரையால் மூடப்பட்டிருந்தது.  உள்ளே இருள் சூழ்ந்து காணப்பட்டது.  எனக்கு முன்னே ஒருவர் (அர்ச்சகர் போலும்) வேகமாக ஏறிகொண்டிருந்தார்.  ஒரு சமயத்தில் நான் என் மனைவி குழந்தை தவிர முன்னேயும் பின்னேயும் ஆட்க்களில்லை.  எங்களிடம் வேகம் குறைந்து ஓரிடத்தில் நின்றோம்.

திடீரென்று எங்கள் எதிரே ஒரு இளம் ஜோடி வேகமாக படி இறங்கியது.  எனக்கு அவர்களுடைய வேகத்தினை கண்டு பயமாயிருந்தது. விழுந்தால் அவ்வளவுதான்.  இப்போது எங்கிருந்தோ சத்தமாக யாரோ கத்துவது கேட்டது.  நாங்கள் மீண்டும் ஏற ஆரம்பித்தோம்.  சத்தம் இப்போது தெளிவாக.  வெள்ளை வேட்டி அழுக்கான சட்டையோடு ஒருவர் எங்களுக்கு முன்னால் சென்ற அர்ச்சகரோடு சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.  நாங்கள் அருகில் போய் நின்று பார்தோம்.  உண்மையில் அவரால் சத்தம் மட்டுமே போட முடிந்ததது.  பாவம் ஊமை.  ‘சித்த நேரம் சும்மாயிரு.. நா திரும்பி வந்து பாத்துக்கறேன்’ என்றார் அர்ச்சகர்.  அர்சசகர் எங்களைப்பார்த்து சிரித்துவிட்டு ‘இங்கதான் கதியேன்னு இருக்கார்.. பாவிகள் இவர் படுத்திக்கிட்டு இருக்கறதுக்கு பக்கத்திலேயே அசிங்கம் பண்றதுகள்.. அதுதான் சத்தம் போட்டு விரட்டியிருக்கார்’ என்ற படி படியேறினார்.  இப்போது எனக்கு புரிந்தது அந்த இளம் ஜோடிகள் ஏன் அவ்வளவு வேகமாக படியிறங்கினார்கள் என்று.

மேலே வந்துவிட்டிருந்தோம்.  தாகித்தது.  தரிசனம் முடிந்து பார்த்துக்கொள்ளலாமென உச்சிப்பிள்ளையாரை நோக்கிச்சென்றோம்.  நல்ல தரிசனம். பிள்ளையார் எளிமையா அருகம்புல்லால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். தரிசனம் முடிந்து கோவிலை வலம் வந்தோம்.  தூரத்தில் பாலத்தில் வண்டிகள் ஊர்வது அற்ப்புதமாக தெரிந்தது (அதாங்க.. திருடா திருடி படத்தில் தனுஷ் தன் சாக்களை சந்திக்கின்ற பாலம்தான்).  திருச்சியின் எழில் மிகு தோற்றத்தினை மலையுச்சியிலிருந்து கண்டு களித்தோம்.  ஒரிடத்தில் அமர்ந்தோம். சுற்றிலும் ஆங்காங்கே  பல இளசுகளை காண முடிந்தது. நம்ம சென்னை மாதிரி இளசுகளுக்கென்று இங்கே கடற்க்கரை இல்லாதது பெரிய குறைதான். தாகசாந்தி முடித்துவிட்டு படியிறங்கினோம்.  திரும்பும்போது வேட்டி சட்டை பெரியவரை காணவில்லை. 

Advertisements
Published in: on பிப்ரவரி 24, 2010 at 7:22 முப  Comments (4)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/02/24/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9f%e0%ae%be/trackback/

RSS feed for comments on this post.

4 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. இந்த மாதிரி ஆட்களை பார்க்கும் போது கோபம் பயங்கரமா வருது தல.(எனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமாதான் கோபம்)

    • தம்பி.. நீ சொல்லிட்ட.. நா பழசை நினைச்சிப்பாத்துட்டு அப்படியே அமைதியா போயிடறேன்..

  2. திருச்சி மலைக்கோட்டை என்றதுமே மலரும் நினைவுகள். மலைக் கோட்டை அடிவாரத்தில் எங்கள் பாட்டி வீடு (பாண்டியம் பிள்ளை சந்து) பாட்டி வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து பார்த்தால் மலை தரிசனம். .
    சுமார் 35 வருடங்களுக்கு முன்னால் திருச்சியிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தாயிற்று. திருச்சி நினைவுகள் மிக மிக மங்கலாக இருந்தாலும், அந்த ஊர் பேரைக் கேட்டதுமே சிலிர்ப்பு ஏற்படுகிறது…

    • வாருங்கள் புவனா முரளி அவர்களே. ஒரு வேளை பாண்டியம் பிள்ளை சந்தில்தான் எங்களை வரிசையாக நிறுத்திவைத்திருந்தார்களோ.. அப்போதே சிமண்ட் ரோடு.. நான் பல முறை திருச்சி சென்றிருந்தாலும் மலைக்கோட்டைக்கு சென்றது இரு முறைதான். லால்குடியில் என் நண்பன் இருந்ததால் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு திருச்சி செல்வது வாடிக்கையானது. திருச்சி எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று. நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: