பாண்டி…3

விழித்துக்கொண்டேன்.  டெமோ போய்க்கொண்டிருந்தது. தமிழ் விளக்கிக்கொண்டிருந்தாள்(விளக்கிக்கொண்டிருந்தார்). நான் புரிந்தவன் போல் தலையாட்டி விட்டு மெல்ல பாண்டியைப் திரும்பிப் பார்த்தேன். பாண்டியை காணவில்லை.  டெமோ முடிந்தது.  நான் எழுந்து நன்றி சொல்லி விட்டு  மீண்டும் ஒருநாள் சந்திப்பதாக கூறி வெளியே வந்தேன்.  பாண்டி வண்டியின் மேல் அமர்ந்திருந்தான்.  நான் மெல்ல அருகில் சென்று  ‘சிவப்பு சுரிதார் போட்ட பெண்ணா’ என்றேன்.  ‘ஆமாம்’ என்றான்.  ‘பாண்டி அந்தப்பெண்ணும் உன்ன விரும்புதா’ என்றேன்.  ‘ஆமா..  லெட்டர காட்டவா.. என்றான்.  ‘அதுகில்ல பாண்டி அவங்க அண்ணன் யார்னு உனக்கு தெரியுமா’ என்றேன்.  ‘தெரியும்.. அவங்க குடுப்பத்தப் பத்தியே சொல்லவா.. அப்பா ரிட்டையர்டு மிலிட்டரி ஆபிசர்.. அம்மா ஹவுஸ் வைப்…  சொந்த ஊரு திருநெல்வேலி… அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர்.. இன்னும் கல்யாணம் ஆகலை..  நம்மாளு தமிழ் எம்சிஏ பட்டதாரி… வீட்டில சும்மா இருக்கேன்னு  கம்பியூட்டர் சென்டர் வேலை..’ என்று அடுக்கிக்கொண்டே இருந்தான்.  ‘சரிசரி இது அவங்க வீட்டுக்கு தெரியுமா’ என்றேன். ‘தெரியாது’ என்றான் கூலாக. ‘அதுக்கில்ல பாண்டி முதல்ல இப்படித்தான் த்ரில்லா  இருக்கும்.  பின்னாடி பிரச்சினைன்னு வரும்போதுதான் அந்த வேதனை புரியும்.. நான் காதல் செய்றவங்களை நிறைய பாத்திருக்கேன்.. அடிதடி எல்லாம் ஆகி பின்னால சோகமா போயிடும்.. உன்ன பயப்படுத்துறத்துக்காக இத சொல்லல.. அண்ணங்காரன் போலீஸ்.. நமமள சும்மா விட்டுருவானா.. பாத்துக்க பாண்டி’ என்றேன். ‘அதெல்லாம் பாத்துக்கலாம்’ என்றான் பாண்டி. நாம இந்த ஸ்க்ரீனில் கண்டிப்பாக வரக்கூடாது என மனதில் நினைத்துக்கொண்டு ‘வரேன் பாண்டி’ என விடைபெற்றேன்.

மறுநாள் நண்பர்களிடத்தில் பாண்டியின் காதல் விவகாரத்தை விவரித்தேன்.  சீனியர் உடனே ‘ஐய்யயோ.. அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரோட தங்கச்சியையா பாண்டி காதலிக்கிறான்.. நேத்து ஓவர்ஸ்பீடாப்போன ஒரு லாரிக்காரனை  நடுரோட்டிலேயே போட்டு பொளந்துகிட்டிருந்தான்.. பாத்த எங்களுக்கே பீதியாயிடுச்சு.. பாண்டி வந்தா சொல்லணும்.. இது வேலைக்காகாது’ என்றான். ‘சொல்லுவோம்… எடுத்துகிறதும் எடுத்துக்காததும் அவன் இஷ்டம்..’ என்றேன் நான். பாண்டியும் வந்தான். சொன்னோம். எடுத்துக்கொள்ளவில்லை.  ‘என்னா பிரண்ட்ஸ்க்ங்கப்பா நீங்க.. காதலுக்கு உதவிசெய்வீங்கன்னு பாத்தா.. பயமாயிருந்தா போயிடுங்கப்பா’ என்றான்.  பாண்டி இதுவரை அப்படிப்பேசி நாங்கள் பார்த்தில்லை. ‘சரி பாண்டி.. உன் இஷ்டப்படியே நடக்கட்டும்.. உதவிக்கு நாங்கள் இருக்கிறோம்’ என்றான் சீனியர்.

நாட்க்கள் நகர்ந்தன.  பாண்டியை முன்னைப்போல் நான் சந்திப்பதில்லை.  ஒரு நாள் ஊர் சுற்றி விட்டு  வீட்டின் முன் சைக்கிளை நிறுத்த எத்தனித்தபோது என் அம்மா ‘டேய் ஒரு போலீஸ்காரர் உன்னை கேட்டுட்டு போனாருடா.  உன்னை  இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு உடனே வரச்சொன்னாராம்’ என்றாள். பாறாங்கல்லை முழிங்கியது போல் அப்படி ஒரு கனம் என் இதயத்தில். (பாண்டியன் மாட்டிக்கிட்டான்போல.. ப்ரண்டுன்னு சொல்லியிருப்பானோ.. நம்மள போட்டு என்ன காய்ச்சப்போறாங்களோ தெரியலியே.. இருக்கட்டும்.. நான் தான் அவன பாக்குறதே இல்லயே.. நமக்கு என்ன பயம்.. ஏற்க்கனவே அந்த பொண்ணு என்னப்பாத்திருக்கு.. ஆண்டவா..)  வேகமாக சைக்கிளை மிதித்தேன். போலீஸ் ஸ்டேஷனிம் முன் கூட்டமாயிருந்தது (எல்லாரும் வந்துட்டாங்களா..). சைக்கிளை நிறுத்திவிட்டு மெல்ல நடந்தேன்.  வெளியே பென்ஞ்சில் சில பேல் அமர்ந்திருந்தனர் (பாண்டிய காணலியே.. உள்ளப்போட்டுட்டாங்களா..).  நான் மெல்ல வாயில் படியேறி எழுத்தரிடம் சென்றேன். ‘இன்ஸ்பெக்டர் சார் என்ன வரச்சொல்லியிருந்தாருங்களாம்.. அதான்’ என்று இழுத்தேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘என்ன விஷயமா’ என்றார். ‘தெரியில’ என்றேன். ‘தெரியலியா.. உங்கபேரு’ என்றார். சொன்னேன். அப்படிப்போய் உக்காருங்க.. ஐயா உங்கள கூப்பிடுவார்’ என்றார்.  இந்த காதல், ஈவ்டீசிங் போன்ற கேஸ்களையெல்லாம் இன்ஸ்பெக்டரே நேரிடையாக பார்ப்பார் போல என நினைத்துக்கொண்டு பென்ஞ்சில் அமர்ந்தேன் (பாறாங்கல்லின் கனம் கூடிக்கொண்டிருந்தது).  சரியாக 5நிமிடம் கழித்து என்னை அழைத்தார்கள். நான் எழுந்து இன்ஸ்பெக்டர் அறையைநோக்கிச்சென்றேன்.  என் எதிரே சரத்குமார் இப்போது யூனிபார்மில்..  ‘உங்க பேரு’.. சொன்னேன். ‘எத்தன வருஷமா இந்த ஊர்ல இருக்கீங்க‘.. சொன்னேன். ‘என்ன படிச்சிருக்கீங்க’… சொன்னேன்(அடிக்கும்போது ஏதாவது சலுகை தருவாங்களோ). ‘பாஸ்போர்ட் அப்ளை பண்ணியிருந்தீங்களா’…. ‘ஆமா.. ஆமா.. சார்..’(பாறாங்கல் ஐசானது) என்றேன்.  ‘வெரிபிகேஷனுக்காகத்தான் வரச்சொன்னேன்.. நீங்க போகலாம்’ என்றார் இன்ஸ்பெக்டர்.  நான் நிமிர்ந்த நடையோடு ஸ்டேஷனைவிட்டு இறங்கினேன்.

எனக்கு பெங்களூரி(ரு)ல் வேலைக்கு ஏற்பாடாகியிருந்தது.  நான் பாண்டியனை சந்தித்து விவரத்தை சொல்லிவிட்டு வரலாமென அவன் அறைக்குச்சென்றேன்.  அங்கே அவன் சகா மட்டும் இருந்தான். ‘பாண்டியன் இல்லையா..’ என்றேன். ‘உங்களுக்கு விஷயமே தெரியாதா.. பாண்டியோட காதல் விஷயம் தமிழ் வீட்டுக்கு தெரிஞ்சுபோயிருச்சு.. அதனால பாண்டி கொஞ்சநாளாவே இங்க வர்ரதில்ல.. எங்கே இருக்கான்னு தகவலும் இல்ல..  நானும் ஊரப்பாக்க கிளம்பிக்கிட்டிருக்கேன்..’ என்றான். நான் நினைத்தது போல் நடந்துகொண்டிருந்தது.

இங்கே பெங்களூரு வந்து  9மாதங்களாகிறது.  நல்ல வேலை.  நல்ல வசதியான குடியிருப்பு.  பழைய நண்பர்களை நினைக்கக்கூட நேரமில்லை.  ஒருநாள் இரவில் எங்கள் குடியிருப்புக்கு திரும்பி உடைமாற்றும் போது கதவின் கீழே ஒரு அழைப்பிதழ் தென்பட்டது. குனிந்து எடுத்துப் பார்த்தேன். திருமண அழைப்பிதழ். மணமகன் திருநிறைச்செல்வன் பாண்டியன் என்றிருந்தது.  அட நம்ம பாண்டி… வேகமாக என் கண்கள் மணமகள் யாரெனைத்தேடியது. மணமகள் திருநிறைச்செல்வி. தமிழ்   என்றிருந்தது.

… முற்றும் என்றால் முடிந்தது என்று அர்த்தம்.

Advertisements
Published in: on பிப்ரவரி 25, 2010 at 8:11 முப  Comments (4)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/02/25/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-3/trackback/

RSS feed for comments on this post.

4 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. Really very good to read… your way of writing is very intresting

  2. உங்கள் கதை மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    • அலி அப்பாஸ் அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: