இன்று என் மெயிலில் வந்த என்னைக்கவர்ந்த செய்தி. 2மீ x 1.4மீ x 2.3மீ அளவுடைய ஸ்லீப்பாக்ஸ் என்னும் தூங்குவதற்க்கு வசதியான சொகுசு அறையைப்போன்ற பெட்டிகள் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்பெட்டிகளில் நவீன வசதிகள் யாவும் உள்ளன (நல்ல படுக்கை, நல்ல காற்றோட்டம், LCD டிவி, உங்கள் லேப்டாப்பினை வைத்து வேலைசெய்ய போதுமான இட வசதி , ரீசார்ஜ் போன் மற்றும் உடமைகள் வைக்க உள்கட்டமைப்பு). இவ்வசதி தற்போது ஏர்போர்ட் மற்றும் முக்கிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஏர்போர்ட்டிலேயே பணம்செலுத்தி இந்த வசதியினைப்பெற்றுக்கொள்ளலாம். குறைந்தது 15 நிமிடங்கள் முதல் நீங்கள் விரும்பும் சமயம் வரை இச்சேவை துவக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதியின் மூலமாக பயணிகள் ஓட்டலில் தங்கும் செலவு வெகுவாக குறைக்கப்படுகிறது. நம்ம ஊர்லயும் இதுமாதிரி வைச்சா நல்லாயிருக்குமில்ல…
ஸ்லீப் பாக்ஸ்…
Advertisements

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/03/05/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/trackback/
மறுமொழியொன்றை இடுங்கள்