முந்திரிக்காடு…

வெங்கி மெதுவாக என் முதுகில் தட்டினான்.  நான் திரும்பி ‘என்னடா’ என்றேன். ஒரு விசயம் உங்கிட்ட பேசணும்..’ என்றான்.  ‘எல்லாம் அப்புறமா.. முதல்ல கிளாஸ் முடியட்டும்’ என்றேன்.  அறிவியல் பாடம் நடத்திக்கொண்டிருந்த எங்கள் ஆசான் கரும்பலகையில் ஏதோ வட்டமிட்டுக்கொண்டிருந்தார்.  மீண்டும் அவன் என் முதுகில் கோடு கிழித்தான். எனக்கு கோபம்  கோபமாக வந்தது.  வகுப்பு முடியும்வரை காத்திருந்தேன். முடிந்தது.  அறிவியல் அறையைவிட்டு வெளியேறியதுதான் தாமதம் சட்டென அவனை பிடித்துக்கொண்டேன். ‘என்னடா அவசரம்.. அந்த ஆளுக்கு ஏற்கனவே நம்மமேல நல்ல அபிப்ராயம் இல்லன்னுதானே நம்மள தனியா பிரிச்சு உக்கார வச்சிருக்கான்..  நீ என்னடான்னா சும்மா என்ன சீண்டி நீ மாட்டறதும் இல்லாம என்னயும் மாட்டி விட்டுடுவ போல’ என்று இரைந்தேன். வெங்கி தன் இடது கண்ணை மட்டும் சிமிட்டி ‘கோவப்படாத மச்சி.. நா சொல்லப்போறத கேட்டா நீ இப்படி என்ன பேசமாட்டே’ என்று தன்னை விடுவித்துக்கொண்டான்.  வெங்கி இப்படி ஏதாவது சொன்னால் அதில் ஏதோ ஒரு சூட்சுமம்  இருக்கும் என எனக்குத்தெரியும். ‘அதுகில்லடா.. போனதடவ நீயும் நானும் கிளாஸ்ல பேசறதப்பாத்துட்டு நம்மள பின்னி பிரிச்சு ஒக்கார வச்சதே அந்த அறிவியல்தான்.. திருப்பியும் அவன்கிட்ட போய் மாட்டணுமான்னுதான்… சரி சரி.. நீ விவரத்தச்சொல்லு’ என்றேன் ஆவலுடன். ‘அதெப்படி உடனே சொல்ல முடியும.. முந்திரிக்காட்டுக்கு வா சொல்றேன்’ என்றான். நான் ‘முந்திரிக்காடா’ என்று அதிர்ந்தேன்.

சொல்கிறேன்.  முந்திரிக்காடு என்றால் ஏதோ வனவிலங்குகள் நிறைந்து அடர்த்தியான இருளடைந்த வனப்பகுதி என நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. முந்திரிக்காடு…அவ்வளவுதான். முந்திரிமரங்களை அரசாங்கம் பல நுறு ஏக்கர்களில் வளர்க்க அது காடுபோல்  அடர்த்தியாக உருவாக்கியிருந்தது.  எங்கள் பள்ளியின் பின்புறத்தில் காட்டின் எல்லை ஒட்டி வருவதால் முந்திரிக்காடே எங்களுடைய இடைவேளைகளில் இளைப்பாறும் இடமானது (சகலத்திற்க்கும்).  எங்கள் பள்ளி இருபாலர் பள்ளி (தமிழ் சரிதானே). இடைவேளையில் பெண்களுக்கு தனிப்பகுதி எனவும்..ஆண்களுக்கு தனிப்பகுதியெனவும் பள்ளியை ஒட்டிய காட்டின் எல்லை பிரிக்கப்பட்டிருந்தது (அ) யாராலோ எப்பொழுதோ வகுக்கப்பட்டிருந்தது. இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த இடைவேளையின் போது எங்களின் விளையாட்டு துறை(?) ஆசிரியர் காட்டின் எல்லைபகுதியை கண்காணித்துக்கொண்டிருப்பார். ஒரு குறிப்பிட்ட தொலைவிற்க்குமேல் நாங்கள் காட்டினுள் நுழைந்துவிட முடியாது.  அத்துமீறி நுழைபவர்களை ஆள்காட்டிகள் ஆசிரியரிடம் போட்டுகொடுத்துவிடுவார்கள். நான் ஏன் அதிர்ந்தேன் என்பதை இப்போது சொல்லி விடுகிறேன்.  சென்ற முறை இதேபோல் ஒரு விசயம் சொல்லுகிறேன் பேர்வழி என்று என்னையும் குட்டி, மொக்கை, காமகோடி எனும் என் சகாக்களையும் முந்திரிக்காட்டினுள் எங்களுக்கு வகுக்கப்பட்டிருந்த எல்லையையும் தாண்டி அழைத்துச்சென்று தமிழ்செல்வி அளித்த காதல் மடலை இதே வெங்கிதான் படித்துக்காட்டினான்.  நாங்கள் நம்பமுடியாமல் (அவள் எங்கே… இவன் எங்கே…)  வகுப்பறைக்குத்திரும்ப எங்களை ஆள்காட்டி எவனோ ஆசிரியடம் போட்டு கொடுக்க மறுநாள் காலை பள்ளி மைதானத்தில் நாங்கள் தனியே கடும் வெயிலில் இரண்டு மணிநேரம் நிற்க்கும்படி ஆயிற்று. ‘என்னடா அப்படி பாக்கறே.. லாஸ்ட் டைம் மாதிரி ஆயிடுமேன்னு பாக்கறியா..’ என்றான் வெங்கி. ‘அதுக்கில்ல விசயம் என்னன்னு தெரியாம எப்படிடா’ என்றேன்.  ‘சொல்லமாட்டேனா… முக்கியமான ஒரு பொருளை உனக்கு காட்டபோறேன்.. அதுக்காகத்தான் முந்திரிக்காடு.. இந்த முறை நீயும் நானும் மட்டுந்தான்… ஆனா நாம போகப்போற  டைமே வேற.. அதனால நீ ஒண்ணும் பயப்படாதே’ என்றான். ‘எப்ப போகப்போறோம்’  இது நான்.  ‘இன்னிக்கு ஸ்கூல் விட்டதும்’ என்றான் அவன். நான் தயாரானேன்…

ஸ்கூல் விட்டதும் போகலாம்…

Advertisements
Published in: on மார்ச் 10, 2010 at 6:52 முப  Comments (6)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/03/10/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/trackback/

RSS feed for comments on this post.

6 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. enaku school vittu 10 varusam achu boss… :)

    • சரி சரி.. விட்டுடுங்க பாஸ்.. இனிமே தொடரும்ன்னே போட்டுடறேன்..

  2. eppa thodarum??????????? unggada valithalaththukku naan puthusu pathivu ellame padichchan suppar.

  3. நல்ல பில்ட் அப்.

    • பாக்கத்தானே போறிங்க… நாளைக்கு நீங்க என்னய அடிக்கக்கூட வரலாம்…

  4. […] சுற்றுவது வரை தொடர்ந்தது ( முந்திரிக்காடு ). கடைசிவரை மஞ்சள் கயிறு மர்மத்தை […]


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: