முந்திரிக்காடு…2

ஸ்கூல் மணியடித்தது.  நான் என்னுடைய பையை எடுத்துக்கொண்டு வெங்கியைப்பார்த்தேன். புன்னகையுடன் ‘வா போகலாம்’ என்றான். பள்ளியின் நுழைவாயிலின் வழியாக வெளியேறி பின் வேறு ஒரு வழியாக பள்ளியைச்சுற்றிக்கொண்டு முந்திரிக்காட்டினுள் நுழைந்தோம்.  ‘என்ன வச்சிருக்கே.. காட்டுடா..’ என்றேன் ஆவலுடன். ‘பொறுமையா  இரு..’ என கூறியபடி   காட்டினுள் நடக்கலானான். நானும் கழுதையின் வாலில் கட்டிய ஓலை போல அவன் பின்னால் நடந்துகொண்டிருந்தேன். பிறகு ஒரு இடத்தினை தேர்வு செய்தான். அது ஒரு அடர்ந்த.. படர்ந்த.. பெரிய மரம். ஒரு வட்டமான குடில்போல் அமைந்திருந்தது. மரத்தின் மெலிந்த கிளைகளை சற்றே விலக்கி குனிந்து உள் நுழைந்தோம்.   ஒரு புறம் வெளிச்சமாகவும் மறுபுறம் வெளிச்சமில்லாமலும் இருந்தது. வெங்கி காய்ந்த முந்திரி இலைகளை தன் கால்களினால் தள்ளினான்.  உட்கார இடம் உருவானது.  நான் அவன் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  ‘வா.. வந்து இப்படி உக்காரு’ என்றான். உட்கார்ந்தேன்.  தனது பையிலிருந்து நன்கு மடிக்கப்பட்ட ஒரு பெரிய வெள்ளை தாளை எடுத்தான்.  ‘என்னடா.. இது’ என்றேன்.  தன் வாயின் மேல் கைவைத்து எனக்கு சைகை செய்து மெல்ல அந்தத்தாளை பிரித்தான். அது ஒரு பெரிய போட்டோ. 

 பார்த்தேன்.  வழவழப்பான பெரிய போட்டோப்பேப்பரில் ஒரு அழகான பெண் தன்……………மடக்கி ……….தன் இரு கைகளையும்……….முழுஉடலையும் ……….தாள்.  வயல்வெளி கிணற்றுக்குள் குதித்தெழும்போது தேகத்தில் ஏற்படும் உஷ்ணம் போல ஏதோ ஒன்று என் உடலில் பரவியது. பார்த்துக்கொண்டிருந்தேன். வெங்கி ‘சூப்பரா இல்ல’ என்றான்.  நான் பதில் சொல்லவில்லை.  இது வரை நான் இப்படி பார்த்ததில்லை. போட்டோவின் மேலிருந்து கீழே வரை நான் மெல்ல என்கண்களால்…   சட்டென வெங்கி  படத்தை மூடினான்.  ‘என்ன மச்சி.. பதிலயேக்காணம்’ என்றான்.  ‘டேய்.. உனக்கு இது எப்படிடா கிடைச்சது..’ என்றேன். ‘எல்லாம் என் அண்ணன் கைங்கர்யம்தான்.  எங்கண்ணணோட பெட்டிய எதேச்சயா நா துழாவப்போக இது கிடைச்சது.  நா உடனே என் பையில் வச்சி கொண்டுவந்திட்டேன்..’ என சொல்லிக்கொண்டே போனான்.  ‘நல்லாயிருக்கு.. இன்னுரு முற நா பாக்கறேன்’ என்று கையை நீட்டினேன்.  ‘ரொம்ப பாத்தா உடம்புக்கெட்டுடும்.. இப்ப யாராவது நம்மள பாத்தாங்கன்னா நாம தீந்தோம்.. உடனே இடத்தை காலி பண்ணுவோம்..’ என்று சொன்னபடி எழுந்தான்.  நான் விடாமல் ‘என்ன மாப்ள நமக்குள்ள.. ஒரே ஒரு முறை பாத்துட்டு அப்புறம் போயிறலாம்’ என்றேன்.  மீண்டும் பார்த்தோம்.   மனதுக்குள் செராக்ஸ் எடுத்துக்கொண்டேன்.  ‘மாப்ள இத திருப்பியும் வீட்டுக்கே கொண்டு போவியா.. படத்த காணலைன்னு உங்கண்ணன் சந்தேகப்பட்டு உன் பையில பாத்துட்டான்னா என்ன செய்வே…’ என்று கேள்வியை வீசினேன்.  இதுவரை தெளிவாக இருந்த வெங்கி  சற்றே முகம்மாறி ‘சரி இத என்ன பண்ணறது.. இத கிழிச்சி இங்கேயே மண்ணுக்குள்ள புதைச்சிடலாமா’ என்றான் எதோ பெரிய கொலை செய்துவிட்டு உடலை  எப்படி டிஸ்போஸ் செய்வது என்பது போல.  ‘அட வீணாப்போனவனே.. இப்படியொரு பொக்கிஷம்(?) நமக்கு கிடச்சிருக்கு.. இத தினம் தினம் பாத்து அனுபவிக்காம.. அத விட்டுட்டு கிழிக்கப்போறானாம்.. இங்கேயே எங்கயாவது மறைச்சி வச்சுட்டு போயிடுவோம்..’ என்றேன். ‘நல்ல ஐடியா.. ’  என்றான்.  பின் இடத்தினை தேர்வு செய்தோம்.  மரத்தின் கீழே உள்ள சிறிய புதரில் நன்றாக மடித்து உள்ளே வைத்தோம். அடயாளத்திற்க்கு ஒரு பெரிய சென்னிறமான கல்லை நகர்த்தி புதரின் அருகில் வைத்துவிட்டு உடனே இடத்தை காலி செய்தோம்.

 மறுநாள் காலையில் பள்ளிக்கு வந்த உடனே வெங்கியைத்தேடினேன்.  வரவில்லை (ஒருவேளை அவன் அண்ணனிடம் மாட்டிக்கொண்டானோ?..).   என் நினைவெல்லாம் அந்த படத்தின் மீது இருந்தது.  நேற்று வரை சலனமில்லாமல் இருந்த எனக்குள் இப்போது ச(ப)லனமிருந்தது.  என் கண்கள்  என் அனுமதியின்றி  வகுப்பின் பெண்கள் அமர்ந்துள்ள பகுதிக்கு அடிக்கடி விஜயமானது.   தமிழ்ச்செல்வி நேற்றைவிட இன்று அழகாகத்தெரிந்தாள். நான் அவளைப்பார்ப்பதை அவள் பார்க்காததால் நான் அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன் என்னை யாரும் பார்க்காதவாறு. அறிவியல் வந்து அமீபா வரைந்துகொண்டிருந்தார் (எப்போது உள்ளே வந்தார்?).  எனக்குள் என்னவோ செய்வது போலிருந்தது.  ‘எல்லோரும்  இந்த படத்தை சார்ட் பேப்பரில் வரைந்து பாகங்களை குறித்து அதற்க்குண்டான விளக்கத்தினை கீழே எழுதி கொண்டுவரவேண்டும்’  என அறிவியல் சொல்லிக்கொண்டிருந்தது என் காதில் விழவில்லை…

வருவேன்…

Advertisements
Published in: on மார்ச் 11, 2010 at 5:12 முப  Comments (2)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/03/11/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-2/trackback/

RSS feed for comments on this post.

2 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. adappaavingalaaa…. aenga palli thirakkum varai nu podalaam la

    thodarum bore adichuduchunga…

    etho sola pooreenga nu therthu…waiting

    • எங்க பள்ளி திறக்கும் வரை… சூப்பர்…
      நன்றி தன்ஸ்..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: