முந்திரிக்காடு…3

 

வகுப்பு முடிந்திருந்தது.  மொக்கை என்னை எழுப்பினான்.  ‘டேய்.. என்ன ஒரு மாதிரியிருக்க..’ என்றான்.  ‘ஒண்ணுமில்லயே’  என்றேன்.  ‘அப்படியா.. நாங்க எல்லாரும் ரெக்காட் எழுதறத்துக்கு நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருக்கோம்… நீ ஒண்ணுமே எழுதலயே.. என்ன ஆச்சு..’ என்றான் என் பிரச்சினை தெரியாமல்.  ‘ஆமா புத்தகத்துல இல்லாததயா இவரு தனியா நோட்ஸ்சா தரப்போறாரு.. போடா.. நான் புத்தகத்தைப்பாத்தே நோட்ஸ் எழுதிக்கறேன்’ என்றேன் தெனாவட்டாக.  இதை என்னிடமிருந்து எதிர்பாக்காத மொக்கை ‘அப்படிங்களா.. சரிதான்.. நான் வரேன்’ என்று என்னை ஒருமாதிரியாகப்பார்த்துவிட்டு இடத்தை காலிசெய்தான். மதிய உணவு இடைவேளை. எல்லோரும் எழுந்து வகுப்பைவிட்டு வெளியேப்போய்க்கொண்டிருந்தார்கள். மல்லிகாவும் தமிழ்ச்செல்வியும இப்போது என்னைக்கடந்து சென்றார்கள்.  மூச்சை உள்ளுக்கு இழுத்தேன். நல்ல வாசம் வந்து என்னைச்சுற்றியது.  நான் கிறக்கத்தில் இருக்க பட்டென்று என் முதுகில் ஒரு அடி விழுந்தது.

விருட்டென திரும்பினேன். வெங்கி நின்றுகொண்டிருந்தான். ‘என்னப்பா காலையில ஆளக்காணம்.. இப்ப ஸ்கூலுக்கு வந்துருக்கிறே’ என்றேன். ‘போப்பா அந்த படத்தால வெனயாயிடிச்சு..’ என்றான். ‘என்ன மாப்ள.. உங்கண்ணங்கிட்ட மாட்டிகிட்டியா’ என்றேன் பதட்டமாக.  ‘இல்லப்பா.. காலையில் கொஞ்சம் சீக்கரிமாகவே ஸ்கூலுக்கு வந்துட்டு என் பேகை இங்கே டெஸ்க்குல வச்சிட்டு நேரா முந்திரிக்காட்டுக்குப்போனேன்..’ என்றான். நான் இடைமறித்து ‘டேய் நீ அந்த போட்டோவ பாக்கத்தானே போனே..’ என்றேன்.  ‘ஆமா.. பெரிசா கண்டுபிடிச்சுட்டாரு.. மேட்டர சொல்ல விடுடா’ என்றான். அவனும் தொடர்ந்து ‘காட்டுக்குள்ளாரப்போய் நாம வச்ச கல்லை கண்டுபிடிச்சி புதரிலிருந்து அந்த போட்டோவை எடுத்துக்கிட்டு நம்ம நேத்து இருந்தமே அந்த இடத்துக்குப்போய் நா படத்தை பிரிச்சுப்பாத்தேன்… அப்ப யாரோ நடந்துவர மாதிரி  சத்தம் எனக்குக்கேட்டது.. நான் உடனே படத்த மடிச்சி என் சட்டைக்குள்ளார வச்சிக்கிட்டு மரத்துமேல மெதுவா சத்தமில்லாம ஏறிட்டேன்.. சத்தம் கிட்டாற வந்தஉடனத்தான் தெரிஞ்சது அது பாரஸ்ட்டுக்காரன். 

நான் சத்தம் போடாம அமைதியா மரத்துமேலேயே உக்காந்திருந்தேன். பாரஸ்ட்டுக்காரன்  நம்ம இடத்துகிட்ட வந்ததும் நின்னுட்டான். பேச்சுக்குரல் கேட்டது. அப்புறந்தான் தெரிஞ்சது அவன் கூட யாரோ ஒரு பொண்ணு பேசிக்கிட்டிருக்குன்னு.  பேசிக்கிட்டே இருந்தவங்க சடக்குன்னு  நா இருக்கிற மரத்துக்கு கீழே உள்ளார வந்து  தரையில உக்காந்துட்டாங்க..’ என்றான். நான் ஆர்வமானேன்..‘நிசமாவா.. அப்புறம்’ என்றேன். அவன் தொடர்ந்தான் ‘எனக்கு திக்திக்ன்னு மனசு அடிச்சுகிடிச்சு.. அந்த பொண்ணு தலைக்கு நேரா மேல நா… மரத்துக்கு மேல இருந்ததாலே அவங்க என்னப்பாக்கல.. கொஞ்சநேரம் பேசிக்கிட்டிருந்தவங்க  பட்டுன்னு படுத்துட்டாங்க’ என்றான்.  ‘படுத்துட்டாங்களா’ என்று வாய் பிளந்தேன். ‘ஆமா.. அந்த பொண்ணு மேல அவன்…  நா அந்த பொண்ணு  மூஞ்சிய உத்துப்பாத்தேன். நான் அசையவே அவ என்ன பாத்துப்புட்டா..’ என்று நிறுத்தினான். ‘பிறகு’ என்றேன் நான்.

‘அய்யோ பாத்துட்டாங்க’ என  ஒரு சத்தம்.. நா எங்கே எப்படி குதிச்சேன்னு தெரியாது.. அவ்வளவுதான்.. குதிச்சு ஓடினேன்.  என்னை யாரோ துரத்துர மாதிரி பின்னால ஓடிவர சத்தம்.  நான் திரும்பிபாக்காம வேகமா ஓடிகிட்டே இருந்தேன்.. கல்லு முள்ளு எதுவும் என் கண்ணுக்குத்தெரியல.. அப்படி ஒரு ஓட்டம்.  நம்ம ஸ்கூல் எல்ல வந்ததும்  வேகத்தை குறைச்சிகிட்டு  திரும்பிப்பாத்தேன்.  யாரும் பின்னாடி வரலன்னதும் ஓடுறத நிறுத்திகிட்டு மெதுவா நடந்துபோய்  பக்கவாட்டு காம்பவுண்டு நிழல்ல உக்காந்தேன்’.  ஸ்கூல் ஆரம்பிச்சிட்டதால நான் அங்கேயே தங்கியிருந்து இப்ப வரேன்’ என்று மூச்சுவிட்டான்.

நான் அவன் முகத்தைப்பார்த்தேன் நம்பாமல் இருக்க முடியவில்லை.  நான் மெதுவாக ‘அந்த போட்டோ’ என்றேன்.. ‘இதோ’ என்று தன் சட்டைக்குள் கைவிட்டு நன்கு மடிக்கப்பட்டு அந்த போட்டோவை என் கண்முன்னே நீட்டினான். நான் ‘டேய் உன்க்கு புத்தியிருக்கா.. இங்க கொண்டு வந்துட்டயே.. யாராவது பாத்தாங்கன்னா’ என்றேன் கோபத்துடன்.  ‘நா என்ன நிலமையிலே இங்கே வந்திருக்கிறேன்னு உனக்குத்தெரியும்.. அதுவுமில்லாம உனக்காகத்தான் இத இவ்வளவு பாதுகாப்பா நான் கொண்டு வந்திருக்கிறேன்.. நீ என்னடான்னா என்னயே கோவிச்சுக்கிறயே..’ என்றான் அவனும் சற்று கோபத்தோடு. ‘சரி அத இப்ப என்ன செய்யறது’ என்றேன். ‘உன் பேகில வச்சுக்க’ என்றான் கூலாக…

வருவேன்…

Advertisements
Published in: on மார்ச் 12, 2010 at 4:46 முப  Comments (2)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/03/12/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-3/trackback/

RSS feed for comments on this post.

2 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. enakennamo kadasila antha photo oru mokkaiya mudiyum nu thonuthu…..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: