முந்திரிக்காடு…4

‘சரி சரி..   யாராவது பாத்துடப்போறாங்க’ என கூறிக்கொண்டே அந்த படத்தைவாங்கி என் பேகினுள் செருகினேன்.  மதிய உணவு இடைவேளை முடிந்ததும் ஆங்கிலம் வந்தது. வகுப்பில் உள்ள எல்லோரும் ஏதோ இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்தவர்கள் என்பது போல ஆங்கிலத்திலேயே கதைத்தது. ஒரு மண்ணும் புரியவில்லை. ஆங்கிலம் போய் இப்போபோது மீண்டும் அறிவியல் வந்தது.  இவர் வகுப்புத்தான் காலையிலே முடிந்துவிட்டதே  இப்போது ஓவியம்தானே வரவேண்டும்..மீண்டும் ஏன் மொக்கை போட இவர் வருகிறார் என நினைத்த வேளையில் அறிவியல் ஒரு தகவலை சொல்லி விட்டுப்போனது.  நாளைக்கு இன்ஸ்பெக்டர் (போலீஸ் இல்லை)வர இருப்பதால் அனைவரும் இந்த வகுப்பில் ரெக்காடு ஒர்க் செய்யும்படியும் (ஓவியம் வரவில்லை போலும்)அமீபா வரை அப்டேட் செய்த ரெக்காடு நோட்டுகளை நாளை காலை முதல் வகுப்பிலேயே சமர்ப்பிக்கவேண்டுமாம். எல்லாரும் ரெக்காடு நோட்டுகளை எடுத்து வைத்துக்கொண்டு அமீபாவை வரைந்து கொண்டிருந்தார்கள்.  நானும் அமீபாவை வரையததுவங்கினேன். போட்டோவில் உள்ள பெண் நினைவுக்கு வந்தாள். வரைவது தானக நின்றது.  என்னிருக்கை சன்னலோரம் என்பதால் சன்னலை ஒட்டி அமர்ந்தேன்.  மெல்ல அந்த போட்டோ பேப்பரை எடுத்து ரெக்காடு நோட்டின் கடைசில் வைத்து மூடினேன்.  சுற்றும் முற்றும் பார்த்தேன்.  பார்டிகள் எல்லாம் ரெக்கா வரைவதிலும் எழுதுவதிலும் மும்முராமாக இருந்தார்கள்.  வெங்கியை திரும்பிப்பார்த்தேன்.  மொக்கை எழுதுவதைப்பார்த்து எழுதிக்கொண்டிருந்தான்.

நான் மெல்ல எழுந்து மெதுவாக வகுப்பின் வாசலுக்கு அருகில் உள்ள ஒரு டெஸ்க்கை தேர்ந்தெடுத்து அமர்ந்தேன். காற்று நன்றாக வந்தது.  மீண்டும் ஒரு நோட்டம்.   எல்லோரும் பணியில் மூழ்கியிருந்தார்கள். நான் மெல்ல அந்தப்போட்டோவை   ரெக்காட் நோட்டினுள் வைத்து திறந்தேன்.  மீண்டும் ஒரு நோட்டம்.  ஹார்மோனியம் போல ரெக்காட் நோட்டைவைத்து போட்டோவைப்பார்த்தேன்.  போட்டோவில் உள்ள பெண் தன் இருகால்களை மடக்கி முட்டிப்போட்டுக்கொண்டு தன் இரு கைகளையும் தன் தலைக்குப்பின்னால வைத்துக்கொண்டு தன் முழுஉடலையும் எனக்கு காண்பித்துக்கொண்டிருந்தாள்.  நேற்றைவிட இன்று வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தது. இது போன்ற படங்கனை ஆங்கிலப்பத்திரிகைகளின் நடுப்பக்கத்தில் வெளியிடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.  அது போன்ற படம்தான் இதுவெனத்தெரிந்தது.  மீண்டும் ஒரு நோட்டம். மெல்ல என் கையை படத்தில் உள்ள பெண்ணின்……… ‘டமார்’.

எல்லோரும் ஒரேஅலறலாக அலறினோம்.  என்ன சத்தம் எனப்புரியவில்லை. ஒரே மண்புழுதி.  எல்லோரும் வகுப்பைவிட்டு வெளியே ஓடினார்கள். நானும் அவர்களுடன் வெளியே வந்தேன். கூட்டம் சேர்ந்துவிட்டது.  எங்கள் வகுப்பின் கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்துவிட்டிருந்தது.   பக்கத்தில் வகுப்பில் இருந்த ஆசிரியர்கள்  எங்கள் வகுப்பின் உள்ளே ஓடினார்கள். கூட்டம் கூடிவிட்டது. தலைமையாசிரியர் தூரத்தில் ஓடி வந்துகொண்டிருந்தார். இப்போது மண்புழுதி அடங்கிவிட்டிருந்தது.  உள்ளே சென்றவர்கள் ஒரு பெண்ணைத்தூக்கிக்கொண்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். நான் உற்றுப்பார்த்தேன்.  அது தமிழ்ச்செல்வி. முகமெல்லாம் ஒரே இரத்தமாக இருந்தது.  அரை மயக்கதில் முனகிக்கொண்டிருந்தாள்.  உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அடிப்பட்ட தமிழ்ச்செல்வியை தூக்கிக்கொண்டு பறந்தார்கள். நான் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஓரிடத்தில் போய் உட்க்கார்ந்தேன். சிறிது நேரத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என செய்தி வந்தது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டிய பள்ளியாதலால் பழமையானது எனவும் கட்டிடம்  சரியாக பராமரிக்கப்படாததால் இப்படி நேர்ந்தது என பேசிக்கொண்டிருந்தார்கள். வகுப்பினுள் மாணவர்கள் யாரும் செல்லவேண்டாம் என கூறப்பட்டிருந்தது. பள்ளியின் உதவியாளர்கள் மட்டும் வகுப்பினுள் சென்று மாணவர்களுடைய உடமைகள் மற்றும் ரெக்காடு நோட்டுக்களை  எடுத்துவந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள்..  சிறிது நேரத்தில் என்னுடைய உடமைகள் மற்றும் ரெக்காடு நோட்டு என் கைகளில்.  மெல்ல ரெக்காடு நோட்டின் கடைசிப்பகுதியைப்பிரித்தேன்.  அந்த போட்டோவினைக் காணவில்லை.

பின் குறிப்பு :  எங்கள் வகுப்பு இருந்த இடம் இடிக்கப்பட்டு இப்போது அங்கே புதிய கட்டிடம் எழும்பிக்கொண்டிருக்கிறது.  (கூடுதல் ததவல்.. தமிச்செல்வி நலமுடன் இருக்கிறாள்.. நான் இப்போதெல்லாம் எந்த போட்டோ படத்தையும் பார்ப்பதில்லை….)

Advertisements
Published in: on மார்ச் 15, 2010 at 5:01 முப  Comments (4)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/03/15/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-4/trackback/

RSS feed for comments on this post.

4 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

 1. எங்கே போட்டோவை காணோம் என்று ரொம்ப ஏங்கியது மாதிரி இருக்கு. நல்ல எழுது நடை நண்பரே! தொடருங்கள்.
  நானும் இப்போது ஒரு தொடர் ஆரம்பித்துள்ளேன். படித்துவிட்டு சொல்லுங்கள்.
  Karthick
  http://eluthuvathukarthick.wordpress.com/

  • படித்தேன் நண்பரே… பின்னூட்டம் அளித்துள்ளேன்.. பார்க்கவும்.. நன்றி..

 2. unggal eluththukkal aniththum suuppar

  • ஜஸ்டின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: