நூல் படிக்கும் பழக்கம்

பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப் பார்த்து, ”புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா?” என்று கேட்டேன். உண்டு என்றார். எப்போது படிப்பீர்கள்? என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக் கொண்டு தூங்கும் முன்பு என்றார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்? என்று கேட்டால் ”அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும்” என்றார் இது ஒரு வகை. இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள். இவர்கள் இரண்டாவது வகை.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிப் படிப்பார்கள். எப்போதும் அவர்களிடம் சிறந்த நூல்கள் இருக்கும். இந்த வகையினரே சிறந்த படிப்பாளிகள்.

நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை.

நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.

ஒருவரின் நேரம் வெறும் பொழுதாக இன்றி நறும் பொழுதாகவும், வெட்டிப் பொழுதாக ஆகாமல், வெற்றிப் பொழுதாகவும் மாற்றும் வல்லமை நூல்கள் வாசிப்பிற்கே உண்டு. சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் புத்தக வாசிப்பு பெருந்துணையாகிறது. பதவி பட்டம் பெறுவதற்கு மட்டும் என்றில்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை வாசிப்பு வழங்கும்.

இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

புத்தகம் படிப்பது கூட ஒரு வகையான தியானம்தான். தியானம் என்றால் தன்னை மறத்தல். புறவுலக தாக்கங்கள் ஏதுமின்றித் தன்னையே மறந்திருக்கிறநிலை நூல்களை ஆழ்ந்து படிக்கும் போது ஏற்படும். 

புத்தகப் பிரியர்களுக்கு நெஞ்சம் கவர்ந்த நூல்கள் கிடைத்து விட்டால் போதும், எதைப் பற்றியும் இலட்சியம் செய்யாமல் வாசித்துக் கொண்டே இருப்பார்கள். பேருந்துகளில், தொடர் வண்டிகளில், பூங்காவின் இருக்கைகளில் இப்படி அமர்ந்து படிக்க இடம் கிடைக்கும் இட மெங்கும் வாசித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்க முடியும்.

நன்றி :  http://www.nidur.info/

Advertisements
Published in: on மார்ச் 19, 2010 at 3:50 முப  Comments (8)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/03/19/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

8 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

 1. தொலைக்காட்சியால் புத்தகம் படிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்தது. இப்போது இணையம் அந்த வழக்கத்தை முற்றிலுமாக விடை பெறச் செய்து விட்டது. இதையெல்லாம் மீறிப் படிக்கிற அளவுக்கு நூல்கள் வரவேண்டும்.

  http://kgjawarlal.wordpress.com

  • வா வாத்யாரே… உன்ன நம்ம ஊட்டாண்ட இட்டாறத்துக்கு இன்னா இன்னா பண்ணவேண்டிகீது.. பாரேன்…

 2. vaasippathu kuraya villai, aanal puththagam vaasippathu konjjam kuranjjirukku,
  (inayaththil vaasippathum oru vaasippuththane?)

  • இணையத்தில் வாசிப்பதும் வாசிப்பதுதான். மறுக்கவில்லை. ஆனால் எத்தனைபேர் இணையத்தை வாசிப்பதற்க்காக பிரத்தயோகமாக பயன்படுத்துகிறார்கள்.

 3. சிலர் தினமும் செய்தித்தாள்களை E-Paper என்ற வடிவில் படிக்கிறார்களே, அவர்களை எந்த வகையில் சேர்ப்பது?

  • ஈ பேப்பரா.. நாம் ஒரு பக்கத்தை கிளிக்செய்ய சுற்றிக்கொண்டே இருக்குமே அதுவா…

 4. எனக்கு என்னவோ இப்போது அதிகம் படிக்கிறார்களோ என்று தொடருகிறது.

  என் நண்பர் போன முறை புத்தக கண்காட்சி போய் வந்து சொன்னார் நான் 2500 ரூபாய்க்கு புத்தகம் வாங்கினேன் என்று.

  நானும் அதே கண்காட்சியில் இருந்தும் அவரை பார்க்க முடியவில்லை. திருவிழா கூட்டம்.

  http://eluthuvathukarthick.wordpress.com/

  • அப்துல் கலாம் அவர்களுடைய விங்ஸ் ஆஃப் பயர் என்ற புத்தகத்தை பேன்ஸிக்காக புத்தக கண்காட்ச்சியில் (வாங்கி சுமார் 4 வருடங்கள் ஆகி இருக்கும் என நினைக்கிறேன்) வாங்கி இன்னும் படித்து முடித்தபாடில்லை…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: