அதியமானும்… நானும்…

சற்றேறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னர் என் பள்ளிப்பருவத்தில் நடந்த நிகழ்வு. மலையடிவாரத்துவக்கப்பள்ளி என்பது அப்போது உலகப்பிரசித்தம் (இருக்காதா பின்னே.. நான் படித்த  பள்ளியாயிற்றே). அப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்விலே நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்வினை உங்களுக்கு உரைக்க இருக்கிறேன்.

அகவை பத்தில் நான் ஐந்தாம் வகுப்பில். ஆண்டுவிழாவும் வந்தது. அது வரை ஆண்டுவிழாவிலே நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை வேடிக்கை மட்டுமே பார்த்துவந்த நான் இம்முறை கலைநிகழ்ச்சிகளிலே கலந்துகொள்ள முடிவுசெய்தேன் (கலந்துகொள்ள வைக்கப்பட்டேன் என்பதுதான் சரி). எனக்கு வாய்த்தது நாடகம்.  தலைப்பு அவ்வையும் அதியமானும். அவ்வையாக ஒரு பெண்ணும் அதியமானாக (யாரவன்..) நானும்.  அதுவரை அதியமான் என்ற பேரை கேட்டறியாத நான் நாடகத்தின் சாரத்தின் மூலமாக அதியமானைப்பற்றி அறிந்து கொண்டேன்.

நாடகத்தின் கருவை வைத்துக்கொண்டு எங்கள் தமிழாசான் வசனம் புனைந்தார்.  இயல் தமிழை நாடகத்தமிழாக மாற்றி வனங்களை அதியமானுக்கும் அவ்வையாருக்கும் தனித்தனியாக எழுதியிருந்தார் (ஆனால் அவருடைய எழுத்து பண்டைகால ஓலைச்சுவடியில் எழுதியிருந்தது போல இருந்தது). எனக்கும் அவ்வையாருக்கும் வசன உச்சரிப்புக்களை விளக்கிவிட்டு மனனம் செய்யும் படி கூறி ஒத்திகைக்கு தயாராகும்படி கூறினார். நான் எனக்குண்டான தாளைப்பெற்றுக்கொண்டு தனியாக ஓரிடத்தில் அமர்ந்து வாசிக்கலானேன். 

1.  ஓ.. அவ்வையா.. வாருங்கள் வாருங்கள்.. தாங்கள் இங்கே வருகை தந்தது என் பாக்கியம்… அமருங்கள்…

2.  வாழ்த்துக்களுக்கு நன்றி அவ்வையே..  தங்களை நான்தான் வரச்சொன்னேன்..

3. ஒன்றுமில்லை..தங்களிடம் ஒரு விண்ணப்பம் … அதைதாங்கள் மறுக்காமால் நிறைவேற்றவேண்டும்…

4. அரசனானாலும் தமிழுக்கு நான் குடிமகன்தானே..

5. கூறுகிறேன் அவ்வையே.. எனக்கு ஒரு அரிய நெல்லிக்கனி கிடைத்துள்ளது. அதை புசிப்பவர்கள் நீண்ட நாள் வாழ்வார்கள் என்பது திண்ணம். ஆகையால் அதை நான் உண்பதைவிட தமிழைக்காக்கும் தங்கள் உண்டால் இவ்வையகம் பயன் பெறுமே.. ஆகையால் மறுக்காமல் இந்த நெல்லிக்கனியை பெற்றுக்கொள்ளவேண்டும்.. இந்தாருங்கள்..

நன்றாக மனனம் செய்து கொண்டேன்.  ஒத்திகையில் ஒருவாறு ஒப்பேற்றியும் விட்டேன். திருநாளும் வந்தது.  திரைக்குப்பின்னால் நான் ஒப்பனை செய்யப்பட்டு   அதியமானாக(?) ஆகியிருந்தேன்.  மையினால் ஆன மீசை.. புருவங்கள் பெண்களுக்குத்தீட்டுவதுபோல் தீட்டி நன்கு இழுக்கப்பட்டிருந்தது. நெற்றியிலே பிறைப்பொட்டு.  காதில் குண்டலம் (குண்டு ஜிமிக்கித்தான்).  ஜிகினாப்பேப்பர் ஒட்டிய அட்டையினாலான தோள்பட்டை மற்றும் கிரீடம்.  அட்டைக்கத்தியை இடுப்பில் சொருகினார்கள் (ஏ.. பாத்துப்பா படாத இடத்துல பட்டுட போகுது..).  கண்ணாடியில் முகம் பார்த்தேன்.   கூத்துப்பட்டறையில் வேடமிட்டு ஆடும் கட்டியங்காரன் நினைவுக்கு வந்தான்.  

மேடையில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது..  அடுத்தது நாங்கள்தான்.  தமிழாசிரியர் என்னிடம் வந்து ‘ டான்ஸ் முடிஞ்சதும் நீ மொதல்ல போய் அந்த ஓரமா நிக்கணும். உனக்கு பின்னால சத்த நேரங்கழிச்சு பாக்கியம் (அவ்வையார்) வந்து உன் முன்னால நிப்பா.. நான் இங்கே கைகாமிச்சதும் நீ வசனத்த ஆரம்பிச்சரணும்.. என்ன புரியுதா..’ என அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலைகடல் சத்தம் போல கரவொலிகளின் சத்தம் கேட்டது.   அடுத்து அதியமானும் அவ்வையாரும் என தமிழாசான் மைக்கில்  நாடகத்தின் சாரத்தைசொல்லிவிட்டு கீழே இறங்கினார்.  நான் மேடை ஏறினேன்.  மேடையின் மையப்பகுதிக்கு நடப்பதற்க்குள்  என் கால்கள் இருமுறை பின்னி பின்  நின்று பின் சென்றது.  நான் ஒரிடத்தை தேர்வு செய்து நின்றேன். நிமிர்ந்தேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.. ஒரே கூட்டம்.. ஓரே இரைச்சல்..(ஊரே ஒண்ணா கூடிட்டாங்களோ).  முன்வரிசையில் உள்ள என் வகுப்பு சகாக்கள் என் பேரை சொல்லி ஒரே கூப்பாடு.. ஏ மீசையப்பாரு..  வேட்டியப்பாரு என்று ஒரே சத்தம்.   இவ்வளவு கூட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை.  என் கண்கள் கூட்டத்தின் எல்லா திசைகளிலும் பயணித்தது.   நான் மேடையில் தனியாக நின்று கொண்டிருந்தேன்.  என் நினைவு சிதறியது. அதற்க்குள் பாக்கியம் என் முன்னால் அவ்வையாக வந்து என்முன்னால் நின்றாள்.  நான் பாக்கியத்தையே பார்த்துகொண்டிருந்தேன்.. என் தமிழ் ஆசான் என்னை பேசுமாறு சைகை செய்தார்.  நான் பேச முயன்றேன்.  நா எழவில்லை.  தண்ணீர் தாகமெடுத்தது. மீண்டும் கூட்டத்தில் ஓரே கூச்சல்..  எனக்கு வசனம் முற்றிலும் மறந்து போனது.  பாக்கியம் என்னை வெறுமனே பார்த்துக்கொண்டு அவளுடைய வசன டெலிவரிக்கு தயாராக இருந்தாள்.  தமிழாசான் இப்போது சத்தமாக ‘அவ்வையாரை   வரவேற்று உக்கார சொல்லு.. வசனத்தச்சொல்லு’ என கத்தினார்.  நான் தயாரானேன்.  இப்போது கூச்சலில்லை.  நான் என்ன செய்யப்போகிறேன் என கூட்டத்தினர் அமைதியானார்கள்.   ‘ஓ…………………  அவ்வையா.. ம்….. வாருங்கள்.. உக்காருங்கள்…………………. நீங்கள் பாக்கியம்தானே..  இல்ல வந்து  என் பாக்கியம்…  வந்து…..சொளக்கியமா இருக்கீங்களா…. நெல்லிக்கா சாப்படறீங்களா………

 

Advertisements
Published in: on மார்ச் 24, 2010 at 3:54 முப  Comments (10)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/03/24/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

10 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

 1. நீங்களாவது பரவாயில்ல சின்ன வயசுலதான் அப்படி …………..கழுத வயசுக்கு மேல ஆச்சு…இன்னும் நான் அப்படித்தான் ….

  • அப்ப சினிமாவுல நடிக்கபோறேன்னு சொல்லவறீங்க.. என்ன நான் சொல்றது சரிதானே?…

 2. //அப்ப சினிமாவுல நடிக்கபோறேன்னு சொல்லவறீங்க.. என்ன நான் சொல்றது சரிதானே?…//

  யே …….என்ன வைச்சு காமெடி கீமடி பண்ணலேயே……….

  • இல்ல… நிசமாத்தான் சொல்றேன்…

 3. அதியமானே (மன்னா !),

  மேடையில் ஏறி சொதப்பிவிட்டீர்களே !

  வீரமிக்க ஒரு தமிழ் மன்னன் தன் மானத்தை (தன்மானத்தை) இப்படியா கப்பல் ஏற்றிக்கொள்வது !!!

  – உங்கள் கதை ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள்.

  • அலி அப்பாஸ் அவர்களுக்கு என் நன்றி.. இந்த விஷயம் நம் இருவருக்குள் மட்டும் இருக்கட்டும்.. தயவு செய்து அதியமானிடம் மட்டும் சொல்லிவிடாதீர்கள்… (வேண்டுமானால் அந்த நெல்லிக்காயை உங்களுக்கு தந்துவிடுகிறேன்..)

 4. எனக்கு அதிக நாட்கள் உயிர் வாழ ஆசை இல்லாததால், அந்த நெல்லிக்கனியை நீங்களே சாப்பிட்டு, உங்கள் சீரிய இந்த பணியை தொடருங்கள்.

  • நெல்லிக்கனி வேண்டாம் என்று வேண்டுமானால் கூறுங்கள்.. அதைவிடுத்து ‘சீரிய பணி’ என்றெல்லாம் நக்கலடிக்கக்கூடாது.. நன்றி.

 5. அதி(ச)யமான்…. :))

  • துபாய்ராஜா அவர்களின் வருகைக்கு நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: