இரயில் பாடல்…

‘கண் போன போக்கிலே கால் போகலாமா.. கால்போன போக்கிலே மனம் போகலாமா..’ என்ற பாட்டு இரயிலிலே ஒரு பார்வையற்ற ஒரு நண்பர் பாடக்கேட்டேன். என்னுடைய பயணம் தாம்பரத்திலிருந்து பார்க் ஸ்டேஷன் வரை.  இடையில் கிண்டியில் ஏறிய அந்த நண்பர் ஒரு மேளத்தை கையிலே வைத்துக்கொண்டு அதை பாட்டிற்க்கேற்றவாறு தட்டிக்கொண்டிருந்தார். சும்மா சொல்லக்கூடாது.  அருமையான குரல். தாளமும் பாடலும் என்னை மெய்மறக்கச்செய்தன.  நான் பயணம் செய்தது மதிய வேளை என்பதால் கூட்டம் அதிகமில்லை. நல்ல உடையணிந்திருந்தார் (கந்தையானாலும் கசக்கிகட்டு). வழக்கதிதிற்கு மாறாக நல்ல மழமழப்பான முகம்.  கருங்கண்ணாடி. கையிலே வட்டவடிமான சிறிய  ஜல்ஜல் மேளம். கையிலே குடைக்காம்பு போன்ற ஒரு தடி மாட்டபெற்று  காசு பெறுவதற்க்காக ஒரு சிறிய கயிற்றினால் கட்டப்பட்ட பாத்திரம். காலிலே ஒரு சுத்தமான இரப்பர் செருப்பு (புதியது போலும்). உடன் யாருமில்லை. தடையேதுமின்றி ஏற்க்கனவே பாதை பழக்கப்பட்டுது போல மெல்ல நடந்து பாடிக்கொண்டிருந்தார்.  ‘இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்’..என பாடல் போய்க்கொண்டிருந்தது.  கையில அகப்பட்ட சில்லறையை எழுந்து சென்று அவருடைய பாத்திரத்தில் இட்டேன்.  டொக் என சத்தம் வந்தது.  (காலையிலிருந்து இவ்வளவுதானா தேறியது). அவர் இரயில் நின்றதும் அடுத்த பெட்டிக்கு சென்று விட்டார்.

பொதுவாக இரயில் பாடல்களை இருவகைப்படுத்தலாம். ஒன்று பாடப்படும் பாடலுக்கு உயிர்கொடுத்து அதன் மூலம் அனைவரையும் கவர்ந்து காசு பெறுவது. மற்றொன்று ஏனோதானோவென்று பாடி தங்களைதாழ்த்திக்கொண்டு காசு பெறுவது. முதல் வகையில்  நிறைய பாடகர்களையும் இசைஞர்களையும் நான் கண்டிருக்கிறேன். ஒரு சமயம் புல்லாங்குழல் ஓசை பக்கத்துப்பெட்டியிலிருந்து… ‘அமைதியான நதியினிலே ஓடம்.. ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்..’ என்ற பாடல் புல்லாங்குழலில் இருந்து அற்ப்புதமாக… சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. அந்த புல்லாங்குழலிஸ்ட் (வித்வான்.. என்னமாப்பின்னறான்) பின்னாலேயே மூணு பெட்டி மாறி மாறி ஏறி இறங்கினேன் (பெட்டி மாறி மாறி ஏறறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?..). பெரும்பாலும் இரயில் பாடல்களில் எனைக்கவர்தவை பழய பாடல்களே.. அந்த பழய மெட்டுக்களும்., அந்த ஜல் ஜல் தாளங்களும் நம்மை அறியாமல் நிலைகொள்ளச்செய்துவிடும்.  ‘ஆறு மனமே ஆறு.. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..,  கரைமேல் பிறக்க வைத்தான்…, சட்டி சுட்டதடா.. கைவிட்டதடா…,  கொடுத்ததெல்லாம் கொடுத்தான்…, கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா..,  உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..’  என பெரும்பாலும் தத்துவப்பாடல்கள்தான் அதிலும் டிஎம்எஸ் அவர்களின் பாடல்கள்தான்.  பெண் பாடகிகளும் உண்டு.  ‘ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்.. பாலும் பழமும் கைகளில் ஏந்தி.. ஆண்டவனே உன் பாதங்களில் நான்.., எனையாளும் மேரி மாதா..,  என அற்ப்புதமான பாடல்கள்.  சில சமயம் மனதுக்கு ஆறுதலாகவும் சில சமயங்களில் மனதை பிசையவும் செய்யும். (‘உண்ணும் அழகைப்பார்திருப்பாயே.. உறங்கவைத்தே விழித்திருப்பாயே… ’ என் அம்மாவின் ஞாபகம் வந்துவிடும்..)

இதையெல்லாம் மீறி சில சமயம் கர்ணகொடுரமாய் (இதிலே எங்கே கர்ணன் வந்தான்) பாடுவார்கள்.  இசை மோகமே போய்விடும்.  இப்படித்தான் ஒரு சமயம் பறக்கும் இரயிலில் மயிலையிலிருந்து வேளச்சேரிவரை பயணித்தேன்.  அப்போதும் கூட்டமில்லை (ஐயாவுக்கு பீக் அவர்ல வந்து பாத்தா தெரியும்). கோட்டூர்புரம் ஸ்டேஷனில் ஒருவர் ஏறி ‘ மல்லிகை முல்லை..  பொன்மொழிக்கிள்ளை.. அன்புக்கோர் எல்லை…’ என பாட ஆரம்பித்ததுதான்.  கேட்டுக்கொண்டிருந்த நான் கோபமானேன்.   காசுபெறுவதற்க்கு ஆயிரம் வழிகள் இருக்க உனக்கு இந்தப்பாட்டுபாடும் தொழில் தேவையா என சொல்ல நினைப்பதற்க்குள் ஆள் இறங்கிவிட்டிருந்தான்.  என்ன அற்ப்புதமான பாடல். அதை இப்படி மோசமாக பாடுகின்றானே என நினைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். அருகில் யாருமில்லை. மெதுவாக எழுந்து நடந்து பெட்டியின் வாசல்படியில் நின்று தொண்டையை கனைத்துக்கொண்டேன். டிஎம்எஸை நினைத்துக்கொண்டு(?) மெல்ல ஆரம்பித்து பின் சத்தமாக ‘‘மல்லிகை முல்லை…. பொன்மொழிக்கிள்ளை…. அன்புக்கோர் எல்லை….  உன்னைப்போல் இல்லை…  பொன் வண்ணரதமேறி.. என் மண்ணில்எங்கும் ஓடி.. பொன் வண்ணரதமேறி.. என் மண்ணில் எங்கும் ஓடி.. ’ அடுத்த ஸ்டேஷன் வந்தது கூடத்தெரியாமல் நான் பாடிக்கொண்டிருந்தேன்.

‘சப்’பென்று யாரோ என்னை உள்ளே தள்ளிவிட்டார்கள். ‘வழியில நின்னுபாடனா யாருயா காசுபோடுவான்.. உள்ளப்போயா..” என்றபடி என்னை ஒரு மனிதனாகக்கூட பொருட்படுத்தாமால் ஒரு கிராதகன் உள்ளே போய்க்கொண்டிருந்தான். நான் என்னைத்தள்ளிவிட்டதைக்கூட மன்னித்துவிடுவேன்.  ஆனால் அவன் என்னை…

 

பின் குறிப்பு   :  காலையில் கிளம்பும்போதே என்னவள்  ‘என்னங்க அந்த ஜோல்னா பையையும்., கிழிஞ்ச தோல் செருப்பையும் சீக்கிரமா மாத்துங்க.. ரயில்ல பிச்சையெடுக்கிறவன் மாதிரி இருக்கீங்க’ என்றது நிஜமானது. 

 

Advertisements
Published in: on மார்ச் 29, 2010 at 11:34 முப  Comments (2)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/03/29/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

2 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. ஹாஹாஹா… //காசுபெறுவதற்க்கு ஆயிரம் வழிகள் இருக்க உனக்கு இந்தப்பாட்டுபாடும் தொழில் தேவையா// இதையே தான் அந்த அடுத்த ஸ்டேஷனில் ஏறியவரும் நினைத்திருப்பார் :)

    • வெந்த புண்ணில வேல பாய்ச்சறீங்களே.. என்ன அனாமிகா.. நீங்க கூடவா..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: