பங்காளித்தெரு…

பங்காளித்தெரு. அழிந்தும் அழியாமலும் இருந்த ஒரு பெயர்பலகை தெருவின் பெயரைச்சொல்லியது.  நல்ல விசாலமான தெரு. மழையிலும் அடித்துச்செல்லப்படாத சிதிலமடைந்த செம்மண்சாலை.  மண்சாலையின் இரு மருங்கிலும் பாழடைந்த ஆளில்லாத வீடுகள்.  தெருவின் ஒரு முனையில்  பெருமாள் கோவிலின் மதில் சுவர் உயரமாக நின்று கொண்டிருந்தது. தெருவின் மறுபுறம்  திறந்த வயல் வெளி வானத்திற்க்கு போட்டியாக பரவியிருந்தது.   மக்கள் நடமாட்டம் இல்லாது வீதி அமைதியாயிருந்தது.  என்னைப்பற்றி.. நான் இந்தத்தெருவில் வளர்ந்தவன். பங்காளித்தெருக்காரன். எல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னால். ஹ்ம்… நான் தெருவில் நடந்தேன். இந்த தெருவில் தான் எத்தனை நிகழ்வுகள் நடந்திருக்கின்றன மகிழ்ச்சி., துக்கம்., என மாறி மாறி.  தெருவின் தெற்க்கே  நடக்கும் தூரத்தில்  எல்லைச்சாமி கோவில்.  கூரை வேய்ந்த கோவில். நினைவலைகள் என்னை நனைத்தன.  எல்லைச்சாமி ஊர் எல்லையைக் காப்பதால்  வருடத்துக்கு ஒரு முறை அவருக்கு மறக்காமல் ஊரார்  படையலிட்டுவிடுவார்கள். அந்த வேளைகளில் பங்காளித்தெருவில் அனைத்து பங்காளிகளும் கிடாவெட்டி சமயத்தில் போதைஏற்றி ஆளையும் வெட்டியிருக்கிறார்கள். ஒரு முறை எம்.ஜி.ஆர் பிரச்சாரத்திற்க்காக வந்தபோது இந்தத் தெருமுனையில் நின்றுதான் பேசினார். அன்று ஊரே திரண்டுவந்து இந்த தெருவில் நின்றது. ஒரு முறை சினிமா சூட்டிங் கூட நடைபெற்றது. (படத்தின் பெயர் தெரியவில்லை) ம்.. அதெல்லாம்…

அதோ தெரிகிறதே ஆலமரம்.. அதைப்பற்றிச்சொல்லியே ஆக வேண்டும்.  அது ஒருபறவைகளின் சரணாலயம்.  மரத்தைச்சுற்றி பறவைகள் எழுப்பும் ஒலி .. அப்பப்பா.. அது ஒரு அற்ப்புதமான இசை . இது வரை எந்த இசைக்கருவியிலும் ஒலிக்க நான் கேட்டதில்லை. குயில் பாட கேட்டிருக்கிறீர்களா..  நான் கேட்டிருக்கிறேன். மரத்தின் கீழே படிந்துள்ள பறவையின் எச்சங்களும் மிச்சங்களும் படந்திருக்கும் ஓவியததை நான் ரசித்திருக்கிறேன்.  வரிசையாய் நிற்க்கும் மின் கம்பங்களில் காகங்கள் வரிசையாய் அமர்ந்திருக்கும் அழகை பார்த்திருக்கிறேன்.  இங்கே மாலை நேரம் எவ்வளவு இனிமையானது என எனக்கு தெரியும்.. நான் இந்தத்தெருவின் விளக்கு வெளிச்சத்தில் படித்திருக்கிறேன்.  மாலையில்  குழந்தைகளின் விளையாட்டு திடலாகவும், இளைஞர்களின் காதல் களமாகவும், பெண்களின் கதை மேடையாகவும், பெரியவர்களின் தியான மண்டபமாகவும்  .. எத்தனை எத்தனை.. என் கண் முன்னால்..  இதோ நாங்கள் வாழ்ந்த வீடு.. என் கண்முன்னால் சிதிலமடைந்தது. நானும் என் தங்கையும் ஊஞ்சல் ஆடிய உத்திரம் தானா இது.. எங்கள் அப்பா கதைசொன்ன திண்ணைதானா இது.. எல்லாம் போய்… எனக்கு தலை சுற்றியது.. அப்படியே அமர்ந்தேன். 

அரசாங்கம் ஏதோ  பக்கத்தில் உள்ள தொழிற்நகருக்கு இந்த தெருவின் வழியாகத்தான் சாலை போகவேண்டும் என்பதற்க்காக இருபது வருடத்துக்கு முன்னால் மக்களை கட்டாய  இடமாற்றம்(?) செய்தார்கள். அதுவும் அந்த சாலைதிட்டம் ஏதோ ஒரு காரணத்திற்க்காத அப்போதே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து அரசாங்கத்தால் விரட்டப்பட்ட எங்கள் குடும்பம்  எங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் செம்மையாக இருக்க முடியவில்லை.  எங்கள் அப்பா தவறியதும் நான் என் தங்கை என் அம்மா மூவரும் சென்னைக்கு உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தோம்.  வறுமையிலும் நான் படித்துத்தேறி எந்த அரசாங்கத்தால் விரட்டப்பட்டேனோ அதே அரசாங்கத்தில் பொறியாளராக.. காலம் எப்படியெல்லாம் மனிதனை மாற்றுகிறது.  அப்போது நான் பங்காளித்தெருவையே மறந்திருந்தேன். 

திடீரென ஒரு நாள் எங்கள் தலைமையத்திலிருந்து எனக்கு உத்தரவு.. எந்த சாலைவிரிவாக்கத்திற்க்காக நான் ஊரைவிட்டு விரட்டப்பட்டேனோ அதே சாலை திட்டம் மீண்டும் புதிதாக துவக்கப்பட்டு என்னை அதன் செயலாக்கப்பொறியாளராக நியமித்திருந்தார்கள். அதன் விளைவாக இப்போது நான் நின்று கொண்டிருப்பது பங்காளித்தெருவில் பழயவற்றை இடிக்க…

Advertisements
Published in: on மார்ச் 31, 2010 at 3:00 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/03/31/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81/trackback/

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: