விமலாவும்.. விசுவாமித்திரரும்…

பேக்கிங் செக்ஷன்ல நான் இருக்கும்போது சாரதிதான் சொன்னான்.  ‘சார் அந்த பொண்ணு உங்களயே பாக்குது சார்..’  ‘போடா போய் வேலயப்பாரு…’ என்று அவனை விரட்டிட்டு  நான் அவன் சொன்ன பெண்ணைப்பார்த்தேன். சின்னப்பெண். வயது 20 இருக்கும். நல்ல களையான வசீகரிக்கும் முகம்.   அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.  நான் ‘எல்லாரும் வேடிக்கைப்பாக்காம வேலையப்பாருங்க’ என சத்தமிட்டுவிட்டு அந்த பெண்ணைப்பார்த்துக்கொண்டே நகர்ந்தேன்.  நான் சாரதியை விளித்தேன்.  ‘என்ன சார் நான் சொன்னது சரியா’ என்றான்.  ‘அதிகபிரசங்கித்தனமா பேசாதே..  ம்.. அந்த பொண்ணு பேரு என்ன’ என்றேன். ‘ விமலா சார்.. வந்து மூணு நாளுதான் ஆவுது.. சூப்பர் பிகர் சார்’ என்றான்.  நான் அவனை தலையிலடித்து ‘முண்டம்.. உனக்குத்தான் தெரியுமே.. நான் இந்த பொம்பள விஷயத்துல ஸ்ட்டாங்குன்னு.. போடா போ’ என்றேன்.  ‘அட போங்க சார்..  நீங்க வேற..  வயசுல அனுபவிக்காம வாழ்ந்துதான் என்ன பிரியோசனம்.. வழிகாட்ட(?) ஆள் இருக்கும் போது ஏன் சார் பயப்படறீங்க’ என தத்துவித்தான்.  ‘பயமா.. எனக்கா.. தம்பி.. நா எல்லாம் ஒரு கொள்கையோட வாழறவன்’ என்றேன். ‘கொள்கையா.. மண்ணாங்கட்டி.. அந்த பொண்ணு உங்கள பாத்து ஒரு சிக்னல் குடுத்தாப்போதும்.. உங்க கொள்கையெல்லாம் காத்துல பறந்து போயிடும்..’ என்றான். சும்மா இருந்த விசுவாமித்திரரை சீண்டி விட்டுவிட்டான்.  என் கை அவன் மேல் படுவதற்க்குள் பறந்துவிட்டிருந்தான்.

அசைபோட்டேன்.  வாழ்கையில் எல்லார்க்கும் எல்லாமும் அமைவதில்லை.  அதுபோலத்தான் எனக்கும்.  படிக்கும் வயதில் குடும்ப பாரத்தை சுமந்தேன்.  இரு தங்கைகள். அவர்களை கரைசேர்க்கும் பொறுப்புள்ள அப்பாவோ இன்னொருத்தியுடன் ஓடிவிட துடுப்பு என் கைகளில்.  அம்மா தந்த உற்சாகம் மற்றும் என் உழைப்பினால் என் தங்கைகளை கரைசேர்த்தேன்.  அதனால் எனக்கு காலம் கடந்து இப்போது நான் அகவை நாற்பதில்.  அம்மா வற்புறுத்தியும் எனக்கு திருமணத்தில் நாட்டமில்லை. பருவ வயதில் ஏற்பட்ட வேதனைகளையெல்லாம் தாண்டி இப்போது பிரம்மச்சரியத்தின் குளத்தில் நிம்மதியாக நீந்திக்கொண்டிருக்கிறேன்.  இந்த நேரத்தில்தான சாரதி என்னை சீண்டுகின்றான்.  நான் தீர்மானித்துக்கொண்டேன் இனி பேக்கிங் செக்ஷன் போவதில்லை என்று.

மறுநாள் சாரதி ஓடிவந்தான். ‘என்ன சார்.. பில்லிங் செக்ஷன்ல இருக்கீங்க.. நா ஏதாவது நேத்து தப்பா சொல்லிட்டேனா’  என்றான்.  ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை.. சகாதேவன் இன்னிக்கு வராததால முதலாளி என்னை பில்லிங் பாக்க சொல்லிட்டாரு..’ என்றேன்.  நாளும் நகர்ந்தது.  மறுநாள்  எங்கள் அம்பானி வந்தார் (அதாங்க முதலாளி). ‘யோவ்.. நீ பில்லிங்ல என்னத்த புடுங்குற.. போய் பேக்கிங்க பாரு’ என்றார்(ன்) மரியாதையாக.   நான் மீண்டும் பேக்கிங் செக்ஷனில்.  அந்தப்பெண் விமலா என்னைப்பார்த்து புன்னகைத்தாள். நானும் ..னகைத்தேன். ‘என்ன சார் நேத்து ஆளயேக்காணம்’ என்றான் சாரதி (இவன் எங்கேயிருந்து வந்தான்..).  ‘ஒண்ணுமில்லப்பா.. முதலாளி நேத்து என்ன பில்லிங் பாக்க சொன்னாரு.. அதான்.. எவ்வளவு முடிச்சிருக்கீங்க’ என்று பேச்சை மாற்றினேன்.  அந்தப்பெண் என்னைப்பார்த்துக்கொண்டிருப்பதை நான் பார்க்காதவன் போல் பார்த்துக்கொண்டிருந்தேன்.  ‘சார்.. இந்த பொண்ணு பேரு விமலா.. நம்ம செக்ஷனுக்கு வந்து நாலு நாளாவுது.. சார்..’ என்றான் இப்போதுதான் நான் அந்த பெண்ணைப்பார்ப்பது போல. ‘நிறய பேர் இந்த செக்ஷனுக்கு வந்து போவாங்க..  அதனால அவங்களயெல்லாம் நான் கவனிக்கணும்னு கட்டாயம் கிடயாது.. அதனால நீ போய் உன் வேலயப்பார்’ என்றேன் கடுமையாக.  அந்த பெண்ணின் முகம் சுருங்கியது. நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாதுதான். மனது சங்கடப்பட்டது.

மறுநாள் விமலா வரவில்லை. நான் சாரதியைக்கேட்டேன். ‘என்ன மனுஷன் சார் நீங்க.. பொண்ணுங்க மனசு பூ மாதிரி.. அத பக்குவமா ஆண்டில் பண்ண உங்களுக்கு தெரியலயே’ என்று சிடுசிடுத்தான்.  ‘டேய்.. நா என்ன செய்யட்டும்.. நீ எல்லாருக்கும் முன்னாடி அந்த பெண்ணப்பத்தி சொன்னா.. நா அதுக்கு  வழிஞ்சா.. என்னப்பத்தி மத்தவங்க என்னடா நினைப்பாங்க’ என்றேன்.  ‘சாரி சார்.. நா நாளக்கு உங்களப்பத்தி அந்த பொண்ணுகிட்ட எடுத்துச்சொல்றேன்’ என்றான். ‘அப்பா சாமி.. நீ சும்மா இருந்தாலே போதும்’ என சொல்லிவிட்டு  நகர்ந்தேன்.   மனசுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது.  கண்ணுக்கு முன்னால் விமலா என்ற அந்த பெண்ணின் முகம் வந்து புன்னகைத்தது. ஐயோ.. இது என்ன இப்படி.. இந்த வயதில்.. வேணாம் விட்டுடு.. கண்ணை இறுக மூடிக்கொண்டேன். அப்போதும் அவள் மறையவில்லை.  ‘இப்படி பகல்லயே தூங்கினா செக்ஷன் உருப்பட்டாமாதிரிதான்‘ என யாரோ சொல்லிக்கொண்டு போவது என் காதில் விழுந்தது.

மறுநாள் விமலா வந்துவிட்டிருந்தாள். நான் அவளை பார்த்தேன்.  ஆனால் அவள் என்னைப்பார்க்கவில்லை (கோபம் போலும்).  உணவு இடைவேளை வந்தது.  எல்லோரும் போய்விட்டார்கள் விமலாவைத்தவிர.  நான் எழுந்தேன்.  தனியாக இருவர் ஒரு இடத்தில் இருப்பது தவறு என நினைத்து நான் வெளியேற முற்பட ‘நில்லுங்க சார்’ என விமலாவின் குரல் எனை தடுத்து நிறுத்தியது. ‘நான் உங்க கிட்ட பேசணும்’ என்றாள்.  நான் பதில் சொல்லவில்லை.. அவள் தொடர்ந்தாள்.  ‘நான் வேலக்கு சேந்ததே உங்களுக்காகத்தான்.. உங்கள பாக்கறத்துக்குத்தான்’ என்று அவள் சொன்னபோது என் இதயத்துடிப்பு அதிகமானது.  நான் மெல்ல இருக்கையில் அமர்ந்தேன்.  ‘சார் உங்களுக்கு பெரியசாமிய’ ஞாபகம் இருக்குதா என்றாள்.  ‘எந்த பெரியசா………. என் அப்பாவின் பெயரும் பெரியசாமிதான்.. அவரு வந்து..’  எனும்போது. ‘ஆமா அவரேதான்’ என்றாள். எனக்கு லேசாக இடித்தது.  ‘அவருக்கு என்ன இப்ப..’ என்றேன். ‘அவரு இப்ப இல்ல… அவரும் என் அப்பாதான்’ என்றாள் அமைதியாக…

Advertisements
Published in: on ஏப்ரல் 1, 2010 at 3:38 முப  Comments (8)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/04/01/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/trackback/

RSS feed for comments on this post.

8 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. செம ட்விஸ்ட்டுங்க. பாவம்ங்க அவுரு

    • வரதரஜலு அவர்களின் வருகைக்கு நன்றி.

  2. உங்கள் பதிவுகளை அவ்வபோது வாசித்து வருகிறேன் (லக்கியின் மூலமாகத்தான்). உங்கள் எழுத்து நடை சுவாரசியமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் !!! வாழ்த்துக்கள் !!!!

    • MSK அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.

  3. நல்லா எழுதி இருக்கீங்க!

    நீங்க எங்கே பெங்களூரா?

    • நன்றி விஜயசங்கர். நான் சென்னைதான்.

  4. ” அவர் என் அப்பாவும்தான்” என்றாளா? அல்லது “அவரும் என் அப்பாதான் ” என்றாளா?

    • ‘அவர் எனக்கும் அப்பாதான்’ என முடித்திருக்க நினைத்து ‘அவரும் என் அப்பாதான்’ என் முடித்துவிட்டேன். இருந்தாலும் நீங்கள் ‘அவர் என் அப்பாவும்தான்’ என சொன்னது மிகவும் பொருத்தம். புவனா முரளி அவர்களுக்கு என் நன்றிகள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: