குடி ஜோக்ஸ்…

அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?
அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.

—————————————————————————————————————————-

ஏன் குடிச்ச?
ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன்

அப்படி என்ன கவலை?

நான் ரொம்ப குடிக்கிறேன் என்று.

—————————————————————————————————————————-

குடி குடியைக் கெடுக்குமாடா?
நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும்.

—————————————————————————————————————————-

எங்கப்பா சொத்து முழுதையும் குடிச்சே அழிச்சுட்டார்
அப்போ உனக்குன்னு எதுவும் வைச்சுட்டுப் போகலியா?
ஒரு குவார்ட்டர் கூட வைச்சுட்டுப் போகலை.
—————————————————————————————————————————-

டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க?

நோயாளி : எனக்கு சோகம் வரும் போது எல்லாம்!.

டாக்டர் : என்ன சோகம் ?

நோயாளி : இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குறேனே ன்னு தான்!.

டாக்டர் : ???!!!

—————————————————————————————————————————-

ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான்.
என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.

உண்மையிலேயே – நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா

ஆமாம்

எங்கே தொலைத்தாய்?

அடுத்த தெருவில் தொலைத்தேன்.

அதை இங்கே ஏன் தேடுகிறாய்?

அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்.

—————————————————————————————————————————-

Thanks :  tamilcomedyworld.com

Advertisements
Published in: on ஏப்ரல் 2, 2010 at 12:51 பிப  Comments (4)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/04/02/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

4 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

 1. //எங்கப்பா சொத்து முழுதையும் குடிச்சே அழிச்சுட்டார்
  அப்போ உனக்குன்னு எதுவும் வைச்சுட்டுப் போகலியா?
  ஒரு குவார்ட்டர் கூட வைச்சுட்டுப் போகலை.//

  நல்லா இருக்கு. ஒரு லார்ஜ் கூட வைக்கல்லைன்னு சொன்னா இன்னும் நல்லா இருக்கும்…

  • கருத்துரைத்ததற்க்கு நன்றி சார்.

 2. //குடி குடியைக் கெடுக்குமாடா?
  நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும்.//
  அட…அட…..அட……என்ன தத்துவம்?! சும்மா……கீசிட்டீங்க போங்க!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: