இசைக்கலைஞன் என் ஆசைகளாயிரம்…

எனக்குள் ஒரு ஆசை.  நானும் அது போல் ஆகவேண்டும் என்று.  மேடையில் பாடிக்கொண்டிருந்த பெண்ணைவிட அந்த கிடார்ஸ்ட் என்னைக்கவர்ந்தான்.  ஆர்கெஸ்ட்ராவினுடைய பிரதான ஆளாக அவன் செய்துகொண்டிருந்த செயல்களை (சேட்டைகளை) கூட்டம் வாய்பிளந்து வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தது.  அவன் கிடாரை கையில் பிடித்துக்கொண்டு கரண்ட் ஷாக் அடித்தவன் போல உடலை உதறிக்கொண்டடே  இனம் புரியாத வார்த்தைகளை அவன் எதிரே இருந்த மைக்கின் மீது துப்பிக்கொண்டிருந்தான்.  இதுவரை நான் இப்படி பார்த்ததில்லை. ‘செனபோன்ய சய.. செனபோன்ய சய.. செனபோன்ய சய..’ என விடமால் கத்திக்கொண்டிருந்தான்.  அவன் பக்கத்தில் இருந்த மற்றொருவனோ ‘‘வத்துக்குச்சி.. பத்திக்குச்சி…  இப்ப வந்து ஒட்டிகிச்சி..” என இச்சிக்கொண்டிருந்தான்.  கூட்டத்தில் இருந்த எங்களூர் அழகிகள் அவனை வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்தது என்னை உசுப்பிவிட்டது. நான் முடிவு செய்தேன்  நானும் கிட்டாரிஸ்ட் ஆகவேண்டும் என்று.

எங்களூரில் மியூசிக் என்றால் அது சுந்தர்தாஸ்தான். கிடாரை மட்டும் வைத்துக்கொண்டு ‘இளைய நிலா பொழிகிறதே… இதயம்வைரை நனைகிறதே…’  என அந்த பாடல் முடியும் வேளையில் வருமே ஒரு ஃபினிஷிங் அதை அப்படியே வாசித்துக்காட்டி அசத்துவான். ஆர்கெஸ்ட்ரா மேடையில் சிறிதுகாலம் வாசித்த அவன் பின்னாளில் எல்லோரையும்போல் இளையராஜாவாக வேண்டுமென்று ஆசைப்பட்டு சென்னைக்கு சென்று சினிமா உலகத்தோடு ஐக்கியமானான். அவ்வப்போது ஊருக்கு வருதுண்டு. அவவேளையில் அவனை நான் பார்த்ததுண்டு. அவனிடம் சிலகாலம் இசையைப்பற்றிய போதனையை  பெற்றவன் என்பதினால் இப்பபோது அவனின் நினைவு எனக்கு  வந்தது. அவனை தொடர்பு கொள்ளும் முயற்ச்சியில் இறங்கினேன்.

கண்டுபிடித்து தொடர்பு கொண்டபோது தாம் இப்போது சைதாப்பேட்டையில் இருப்பதாகவும் அங்கு தன்னை வார இறுதியின் கடைசிநாளில் வந்து சந்திக்கும்படியும் கூறி முகவரியைபும் தந்தான். நான் தயாரானேன்.  வீட்டில் ஒரு நண்பனை சந்திக்க சென்னை சென்று வருவதாகக்கூறிவிட்டு சென்னைக்கு விஜயமானேன். எங்களூரில் இருந்து சென்னை 2மணி நேரப்பயணம்.  நான் சீக்கிரமாகவே புறப்பட்டுவிட்டதால் சென்னையின் காலைப்பொழுதைப்பார்க்க முடிந்தது. சைதாப்பேட்டையில் இறங்கி அவன் சொன்ன முகவரியை விசாரித்துக்கொண்டு நடந்தேன்.  தூரத்தில் ஒரு கோவிலின் கோபுரம் தெரிந்தது. நான் நடக்க நடக்க கோவில் கோபுரம் என்னை நோக்கி  வந்துகொண்டிருந்தது.  கோவிலின் அருகில் ஒரு தெருவில் தான் சுந்தர்தாஸின் வீடு.  வீட்டு நம்பரை கண்டுபிடித்து(?) மணியடித்தேன். ஒரு குரல் ‘யாரது’ என்றபடியே கதவைத்…  மன்னிக்கவும் ஒரு தேவதை காலையில் கதவைத்திறந்தது தரிசனம் தந்தது.  தலையில் ஈரத்துணிசுற்றிக்கொண்டு சோப்புவாசனையோடு ‘உங்களுக்கு யார் வேணும்’ என்றது. நான் ‘சார் இல்லிங்களா..’ என்று இழுத்தேன். ‘சாரா?.. எந்த சார்..’ என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே என் பின்னாலிருந்து ‘என்னப்பா இவ்வளவு சீக்கிரமாகவே வந்துட்டே’ என்று சுந்தர் தாஸின் குரல் கேட்டது.

நான் திரும்பிப்பார்ப்பதற்க்குள் ‘சாரிமேடம்’ என்று அந்த பெண்ணுக்கு சாரி சொல்லியபடியே என் தோளில் கைவைத்து என்னை பக்கவாட்டில் ஒரு சந்து போன்ற பகுதியில் தள்ளிக்கொண்டு சென்றான். அங்கே சுவரோடு ஒட்டியிருந்த பகுதியின் கதவை திறந்து என்னை உள்ளே அழைத்தான்.  நான் ‘நீ சொன்ன கதவு நம்பர்லதானே நான் விசாரிச்சேன்.. ஆனா நீ.. ’ என்று சொல்லி முடிப்பதற்க்குள்.. ‘நண்பா.. அவங்கதான் ஹவுஸ் ஓனர்… இது அவுங்க அவுட்ஹவுஸ் மாதிரி.. அதோட இல்லாம நீ நினைக்கிற மாதிரி அந்த வீட்டில எந்த சாரும் கிடையாது.. அதனால நீ சார்..ன்னு கூப்பிட்டா அப்படித்தான் பாப்பாங்க..’ என்று சொல்லியபடியே லைட்டையும் பேனையும் ஆன்செய்துவிட்டு உட்க்கார்ந்தான். 

நான் அப்போதுதான் அறையை கவனித்தேன்.. மியூசிக் டைரக்டர் என்று என் கற்பனையில் இருந்த வீட்டுக்கும் இதற்க்கும் ஏழாம் போருத்தம்(?).  துணிகள் குப்பைபோல் ஆங்காங்கே.. துடைப்பத்தை பார்த்தே பலநாளாகியிருக்கும் அறையின் மூலைகள்.. ஒட்டடை,. சிகரெட் துண்டுகள் மற்றும் சில காலி மதுபுட்டிகள்.  நான் பார்ப்பதை அவன் பார்த்துவிட்டு..  என்ன நண்பா இப்படி இருக்கேன்னு பாக்கறியா..  நேத்து நைட்டு ஒரு படத்துக்கான டிஸ்கஷன்.. அதான்’ என்றபடி ‘ என்ன சாப்பிடறே’ என்றான். நான் வேண்டாம் என்றேன். ‘ என்னது வேணாமா.. காலயிலே ஊரவிட்டு கிளம்பியிருப்ப..  கோஞ்சம் இரு என்று பிஃரிட்ஜை திறந்து இரண்டு பெரிய ஆப்பிள் பழங்களை எடுத்து  சில துண்டுகளாக வெட்டி எனக்குத்தந்தான். நான் ‘காலையிலே ஆப்பிள் சாப்பிடறது உடம்புக்கு நல்லது’ என்றேன்.  அவனும் ‘ஆமாம்.. உண்மைதான்.. ஆனால் ஆப்பிள் மட்டும் சாப்பிடக்கூடாது.. கூடவே கொஞ்சம் வொயிட் ரம்மும் சேத்து சாப்பிடணும்’ என்றபடியே ஒரு பாட்டிலை எடுத்துத்திறந்தான். நான் அவன் செய்வதை பார்த்துக்கொண்டிருந்தேன்.

…மீட்டுவேன்

Advertisements
Published in: on ஏப்ரல் 6, 2010 at 9:05 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/04/06/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf/trackback/

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: