காதல் வந்தால் சொல்லியனுப்பு…

‘நான் உங்களை காதலிக்கிறேன்’ என்ற நல்ல தமிழ் ஓசையோடு இரண்டு மஞ்சள் நிறப்பூக்கள் என் முன்னால்.  நான் நிமிர்நதேன். என் முன்னே சுமார் இருபத்தைந்து முதல் முப்பது வயது வரை மதிக்கத்தக்க ஒரு வாலிபன்.  சினிமா நடிகனைப்போன்ற நல்ல தோற்றம்.  நல்ல உடையமைப்பு. கையில் ஒரு மடிக்கணினி  மற்றும்  உணவு வைக்கும் பைகள் . முகத்தில் பயம்கலந்த புன்னகை.  அசையாமல் என் முன்னே நின்றுகொண்டிருந்தான். நான் சற்று பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தேன். கடற்கரையின் காலைநேர இரயில் என்பதால் நான் இருந்த இரயில் பெட்டியில் எங்களிருவரைத்தவிர யாரும் இல்லை. நான் சேர வேண்டிய டைடல் பார்க் நிலையம் வருவதற்க்கு இன்னும் அரைமணிநேரமிருந்ததது.  நான் எனக்குள் தைரிய உணர்வை வரவழைத்துக்கொண்டு நேராக அவன் கண்களைப்பார்த்தேன். அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கைகளில்  இருந்த சற்றே வாடிய  மஞ்சள் மலர்களை என் முன்னால் நீட்டிக்கொண்டிருந்தான்.  நான் மெதுவாக என் கை அவன் மேல் படாமல் அந்த மலர்களை  என்கைகளால் வாங்கிக்கொண்டு அவனை என்முன்னே அமரும்படி கூறினேன். அமர்ந்தான்.

‘நீங்கள் யார்’ என்றேன்.  ‘நானும் உங்களைபோன்று  ஒரு ஐடி தொழிளாளி.. தினமும் இந்த வண்டியில் பயணிப்பவன்.. நீங்களும் இந்த வண்டியில் தினமும் பயணம் செய்கிறவர் என்பது எனக்கு தெரியும்.. நான் தினமும் உங்களை இந்த கடற்க்கரை நிலையத்தில் பார்ப்பதுண்டு..’ என கூறி என்னை நோக்கினான். ‘அதனால்.. முன்பின் தெரியாத என்னை, என்னுடைய பின்னணி என்ன என்பதை அறிந்து கொள்ளாமல்,   நான் மணமானவளா இல்லையா என்பதைப்பற்றிக்கூட தெரிந்துகொள்ளாமல் உங்களுடைய காதலை இப்படித்தான் நாகரீகமில்லாமல் வெளிப்படுத்துவீர்களா..’ என்றேன். ‘காதலிக்க எந்த ஒரு பின்னணியும், முன்னணியும்  தேவையில்லை..  முக்கியமாக வயது ஒரு பொருட்டே அல்ல..’ என்றான்.  நான் மெல்ல என் கோபத்தினை கட்டுப்படுத்திக்கொண்டு ‘நீங்கள் பார்ப்பதற்க்கு நல்ல குணவானாகத்தெரிகிறீர்கள் மற்றும் நீங்கள் ஒரு நல்ல நிறுவனத்தில் பணியாற்றும் நல்ல ஊழியர் என்றும் நினைக்கிறேன்.. உங்களுடைய இந்த சிறுமையான எண்ணம் இந்த சிறிய வயதில் அதுவும் என்போன்றவர்களிடம்… நிச்சயமாக வரக்கூடாத ஒன்று..’ என்றேன்.  அவன் மௌனமானான். பின் ‘ஹம்.. என்று பெருமூச்சு விட்டபடி… ‘முடிவாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ என்றான் சற்றே மிரட்டும் தொனியில்.  நான் விருடென்று எழுந்து ‘முட்டாளே… நான் திருமணமாணவள்..  இது என் கணவருக்குத்தெரிந்தால் நீ இப்போது என் முன்னால் நின்று பேசிக்கொண்டிருக்க மாட்டாய்’ என்றேன் கோபமாக.

அவன் மெதுவாக எழுந்து நின்றான். ‘இவ்வளவு நேரமாக நீங்கள் எனக்கு அறிவுரைத்ததை, விளக்கியதை  சற்று உங்கள் கணவருக்கு போதியுங்கள். ஏனென்றால் நேற்று என் மனைவிக்கு அவர் தந்த மலர்களைத்தான் நான் இப்போது உங்களுக்கு தந்திருக்கிறேன்.  அதுதான் உங்கள் கைகளில் உள்ளது ..’ என்று சொல்லிவிட்டு நடந்தான்.

Advertisements
Published in: on ஏப்ரல் 15, 2010 at 1:11 பிப  Comments (9)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/04/15/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa/trackback/

RSS feed for comments on this post.

9 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

 1. நல்லா எழுதறிங்க ………
  நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல …………
  குமுதம், ஆனந்த விகடன் -ல எழுதரிங்களா என்ன ??

  leave it…,

  என்னக்கு துபாய்ல மார்க் -நு ஒரு friend -ய தெரியும் ………
  அவனுக்கு தெரியாத பத்திரிகையே கிடையாது ……….
  இத forward பண்ணுக ……அவன் உங்கள உலக புகழ் பெற்ற எழுத்தாளர மாதிருவான்……..
  note his address:
  No 5,vivekantha street(near palaya bus stand road)
  Dhubhai kurruku santhu,
  Dhubhai-638052
  mail id:
  Dtubhakur.pirratu@kurapirasavam.com

  • எங்கே அட்ரஸ திருப்பிச்சொல்லு?…

 2. கதையின் கிளைமாக்ஸ் சூப்பர் !!!

  • மிக்க நன்றி அலி அப்பாஸ்.

 3. //‘இவ்வளவு நேரமாக நீங்கள் எனக்கு அறிவுரைத்ததை, விளக்கியதை சற்று உங்கள் கணவருக்கு போதியுங்கள். ஏனென்றால் நேற்று என் மனைவிக்கு அவர் தந்த மலர்களைத்தான் நான் இப்போது உங்களுக்கு தந்திருக்கிறேன். அதுதான் உங்கள் கைகளில் உள்ளது ..’ //

  சும்மா நச்சுன்னு ஒரு முடிவுங்க சுரேந்திரன். கலக்குங்க!

 4. மிக நல்ல சிறுகதை with a super twist in the end. அற்புதம்….

  • புவனா முரளி அவர்களின் வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி.

 5. ENAKKU DAILY NEWS SEND PANNAPUM


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: