பாவம்…

 ஊதுகுழல் எடுத்து அடுப்பை ஊதிக்கொண்டிருந்தேன்.. வெளியே கணவனின் குரல். ‘நல்லதே நடக்கும்..’ என யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். இது போன்ற கீதாஉபதேசங்களைக் கேட்டுக்கேட்டு என் காது புளித்துப்போயிருந்தது. மனுஷனை கட்டிக்கிட்டு பத்து வருஷம் முடியப்போகிறது.  நிரந்தர வருமானமில்லை.  நல்லவன், பண்பானவன் என்று என்னை கட்டிக்கொடுத்தார்கள்.  உண்மையிலேயே நல்ல உள்ளம் படைத்தவர்தான். இரக்க மனசு. ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் ஒடி ஓடி உதவிசெய்வார். பல முறை அவரை நான் கட்டுப்படுத்த முயன்று தோற்றிருக்கிறேன். 

‘அப்பப்பபா..இன்னிக்கு கடுமையான  வெயில் தெரியுமா.. செண்பகம்… கொஞ்சம் குளிச்சியா குடிக்க தண்ணி கொண்டுவா’ என்று உள்ளே வந்தார்.  நான் மண்பானையில் உள்ள தண்ணீரை  அகன்ற செம்பினால் மோர்ந்து ‘இந்தாங்க’ என்று தந்துவிட்டு ‘வெளியிலே யார் கொரலோ கேட்டுச்சே..’ என்றேன். ‘நம்ம மாடசாமிதான்.. அவன்கிட்ட ஒரு விஷயத்தைப்பத்தி பேசிக்கிட்டிருந்தேன்..’ என்றார் விசிறியை எடுத்து வீசியபடி.  நான் பக்கத்தில் அமர்ந்து ‘என்ன அப்படிப்பட்ட விஷயம்..’ என்றேன்.  ‘உனக்குத்தெரியுமா.. அதாம்புள்ள நம்ம முனியன் அவ பெண்டாட்டியையும்  அவன் பசங்களையிம் தவிக்க விட்டுட்டு எவளயோ இழுத்துகிட்டுப்போய்ட்டான்ற சங்கதி… நமக்கு தெரிஞ்சதுதானே… பாவம் அந்த குடும்பம்… ரொம்ப கஷ்டப்படுது.. அதுவும் அந்த கொழந்தகளப்பாக்கும்போது ரொம் கஷ்டமா இருக்குது.  அந்த பிஞ்சு பசங்களை படிக்கவேண்டிய வயசில உப்பளத்துக்கு வேலைக்கு அனுப்பியிருக்குது முனியன் பெண்சாதி . நாங்க உப்பகழியில  வேலைசெய்யும் போது பாத்தேன் ரெண்டு ஆம்பிள பசங்கங்களும் உப்பு அள்ளுதுங்க..  அதுங்க அந்த வெயில்ல கஷ்டப்படறத பாக்கும்போது ரொம்ப பாவமா இருந்திச்சு. மதியம் சாப்பிடும்போது   நான் அந்த பசங்களை கூப்பிட்டு ஒக்காரவச்சி நம்ம சாப்பாட்ட கொடுத்தேன் பெரியவன் சாப்பிடமாட்டேன்னு சொல்லிட்டான்.  சின்னவன் மட்டும் சாப்பிட்டான்.  எனக்கு மனசு கேக்கல பெரியவன  சாப்பாடு பிடிக்கலனாக்கூட பரவாயில்ல ஒரு டீ வாங்கித்தரேன் சாப்பிடுன்னேன். அவன் பிடிவாதமா வேண்டாம்னு சொல்லிட்டான்.. என்னத்த சொல்ல.. கடவுள் மனுஷனுங்கள கஷ்டப்படுத்தறத நினைக்கும்போது.. ஹம்..’ என்று சொல்லி முடிக்கும்போது வெளியில் ஒரு சத்தம்.

யாருயா வீட்டுல.. வெளியே வாயா.. என்று சத்தம்.  நானும் அவரும் வெளியே வந்தோம். ‘நீ யாருயா எம்புள்ளைகளுக்கு சோறுகொடுக்க.. நாங்க என்ன அன்னக்காவடியா.. என்னையும் எம் புருஷன்மாதிரி நினைச்சுட்டையா.. நா மானமுள்ளவ தெரிஞ்சுக்கோ…’ என பேசிக்கொண்டே போனாள் முனியனின் பெண்சாதி.

 

Advertisements
Published in: on ஏப்ரல் 20, 2010 at 1:17 பிப  Comments (4)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/04/20/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

4 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. நல்ல கதை.

    • ராமலக்ஷ்மி அவர்களின் வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி.

  2. பின்நவீனத்துவ எழுத்து -நு சொல்லறங்களே அப்படினா எண்ணுங்கணா??? (pen -கு பதிலா pin -ந use பண்ணுவாகள ??)
    நீங்க பின்நவீனத்துவ எழுத்தாளரா இல்லையா ? (தெரியல -நு சொல்லபடாது ……)

    பாவம் -நு heading கொடுத்து இருக்கரீங்களே ….அது இந்த கதைய படிகறவங்கதானே ??

    • 1) பின்னால நடந்தத நடக்கப்போறத நமக்கு முன்னாலயே புரிஞ்சும் புரியாமலும் தெரிஞ்சும் தெரியாத மாதிரிச்சொல்லி நம்மள முன்னால தள்ளறேன்னு பின்னால தள்ளறதுதான் பின் நவீனத்துவம் என்கிற பாடாவதித்துவம். (இதையே ஒரு பதிவாப்போட்டிருப்பேன்.. கெடுத்துட்டியே மாப்பு…)
      2) நான் பின்நவீனத்துவ எழுத்தாளர் அப்படின்னு நா சொனனா சீக்கிரம் கடைய மூடப்போறேன்னு அர்த்தம்.. அதனால நான் நன்நவீனத்துவ எழுத்தாளர் மட்டுமே.
      3) உன் கிட்ட நான் மாட்டுனேன் பாரு அது நா செஞ்ச பாவம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: