மண்ணாம்பூச்சி…3

சலனமில்லாத தண்ணீரின் நடுவே நான் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் கிணற்றின் ஒரு மூலையில் இருந்து ஒரு சத்தம். ‘டேய்.. யாரடா தேடுறீங்க..’ சத்தம் வந்த திசையில் பார்த்தேன். கூட்டுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் ஆமையைப்போல கிணற்றின் ஒரு மூலையில் தண்ணீரை ஒட்டியிருந்த ஒரு படிக்கட்டின் அடியிலிருந்து மாயாண்டியின் தலைமட்டும் தெரிந்தது. எல்லோரும் ‘ஹோ’ வென கூச்சலிட்டார்கள். ‘டேய் பசங்களா நா தண்ணிக்குள்ள இருக்கிற சேத்துக்குள்ள தேங்காய சொருகி வச்சிட்டு வந்திருக்கேன்.. போய் கண்டுபிடிச்சு எடுத்துட்டுவாங்க..’ என்று சொன்னவன் சட்டென்று நீரில் இருந்து வெளியே வந்து தன்ககளால் கிணற்றின் படிக்கட்டு ஒன்றைப்பற்றி லகுவாக தன்உடலை பலூன்போல மேலே கொண்டுவந்து பட்டென கிணற்றின் படிக்கட்டில் அமர்ந்தான். மற்றவர்கள் அனைவரும் இப்போது தண்ணீரின் உள்ளே கிணற்றின் அடி நோக்கி ஒவ்வொருவராக மூழ்க துவங்கினார்கள். எனக்கும் அவர்களைப்போல் தண்ணீரில் விளையாட ஆசையாக இருந்தது. சிறிது நேரமானது. இப்போது கிணற்றுக்குள் போனவர்கள் ஒவ்வொருவராக தண்ணீருக்கு வெளியே வர ஆரம்பித்தார்கள். எல்லோரும் வந்தபின் மாயாண்டி ‘தேங்கா அகப்பட்டுச்சா..’என்றான். அவர்களிடமிருந்து பதிலில்லாததால் ‘திரும்பவும் போய் தேடுங்க.. மண்ணாம்பூச்சின்னா சும்மாவா..’ என்றான். மீண்டும் தேடும் படலம் ஆரம்பமானது.  நான் தயக்கத்துடன் மாயாண்டியைப்பார்த்து ‘மாயாண்டி’ என்று விளித்தேன். அவன் கிணற்றுப்படிக்கட்டிலிருந்தபடியே மேலே இருந்த என்னைப்பார்த்து ‘என்ன’ என்றான். அவன் என்ன என்று கேட்டதில் இருந்த அலட்ச்சியத்தை நான் பொருட்படுத்தாமல் ‘மாயாண்டி.. எனக்கும் உங்களப்போல கிணத்துல இறங்கி விளையாடணம்னு ஆசயா இருக்கு.. அதனால..’ என்று இழுத்தேன். மாயண்டி சற்று உற்ச்சாகமானவனாய் ‘அப்படிப்போடு.. ம்.. ஆச வந்துடுச்சா.. ’ என்று கூறிக்கொண்டே படிக்கட்டைவிட்டு எழுந்து என்னைநோக்கி மேலேறிவந்தான்.

வந்தவன் என்னருகே அமர்ந்து ‘முருகா.. இப்பத்தான் நீ ஆம்பள.. ஆம்பளங்க பயப்படக்கூடாது.. இப்ப நீ எங்கள மாதிரி தண்ணியில விளயாடணும் நா முதல்ல நீ பயத்தவிட்டுடணும்.. இந்த கிணத்தின் ஆழம், பிறவு இதுக்குள்ள இருக்கிற பாம்பு(?),  தண்ணியில மூழ்கி செத்துடுவோம்ற பயம்.. இதயெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு தைரியமா.. தண்ணிக்குள்ள இறங்கு.. அப்புறமா நான் பாத்துக்கிறேன்’ என்றான். பயமில்லாதிருந்த எனக்கு இப்போது பயம்வந்தது. தண்ணிக்க்குள்ளாற பாம்பெல்லாம் இருக்குமா..’ என்று மாயாண்டியிடம் கேட்டேன்.  ‘அதெல்லாம் தண்ணிப்பாம்பு.. மனுஷனக்கண்டாலே ஓடி பொந்துலபோய் ஒளிஞ்சுக்கும்.. பாத்தியா நீ பயப்படுறே..’ என்றான் என் கண்களைப்பார்த்து.  ‘சே..சே.. அப்பெடியெல்லாம் ஒண்ணுமில்ல.. பாம்புன்னு சொன்னதினால கேட்டேன்..’ என்றேன் மனதுக்குள் உள்ள பயத்தினை வெளிக்காட்டாதவாறு.  அதற்க்குள் தேங்காய் தேடபோனவர்களில் மாரிமுத்து மட்டும் வெற்றியுடன் திரும்பினான்.  எல்லோரும் சந்தோஷத்தில் ‘ஹோ’ என்று சப்தமிட்டனர்.  மாயாண்டி கிணற்றுக்குள் இருந்த நண்பர்களைப்பார்த்து ‘யே.. பசங்களா.. நம்ம கூட விளயாட முருகனும் வரானாம்’ என்றான்.  அதற்க்கும் அவர்கள் ‘ஹோ’ வென சப்தமிட்டார்கள். மாயாண்டி என்னைப்பார்த்து ‘சொக்காய அவுத்து கரமேல வச்சுட்டு மெதுவாக படிக்கட்டில் இறங்கி தண்ணி தொடற கடைசிபடிக்கட்டுல வந்து நில்லு’ என்று கூறியபடியே மீண்டும் கிணற்றில் குதித்தான். நான் மெதுவாக எழுந்து நின்றேன். சொக்காயை கழற்றி சுருட்டி கிணற்றுக்கரையில் வைத்துவிட்டு  கிணற்றுக்குள் இறங்க ஆயத்தமானேன். முதல் இரண்டு படிக்கட்டுகளை கடக்கும் போது கலங்காத நான் மூன்று நான்கு என்று செல்லத்துவங்கியதும்  கிணறு என்னை விழுங்குவதைப்போல் உணர்ந்தேன். ‘பயப்படாம இறங்கி வா..’ என்றனர் நண்பர்கள்.  ஐந்து.. ஆறு… ஏழு… இப்போது நான் எட்டாவது படிக்கட்டில்.  அதற்க்குமேல் என்னால் முடியவில்லை.. என்னை யாரோ பின்னாலிருந்து தள்ளுவது போன்ற ஒரு உணர்வு.. மெல்ல படிக்கட்டில் அமர்ந்தேன்.. அவசரப்பட்டுவிட்டேன்.  இப்போது மாயாண்டி தண்ணீரில் தவழ்ந்து வந்து வெள்ளம் தொட்டுக்கொண்டுள்ள படிக்கட்டில் அமர்ந்தான். ‘பயப்படாமே இறங்கி வா.. இன்னும் நாலு படிக்கட்டுதான்’ என்றான்.  நான் இப்போது மேலே பார்த்தேன். கிணற்றினை வெட்டியெடுத்த  வட்டமாய் வானம் தெரிந்தது.  மேலிருந்த தென்னையின் உச்சியிலிருந்து ஒரு ஏதோ ஒரு பறவை என்னைப்பார்க்க பிடிக்காதவானாய் எனைப்பார்த்ததும் பறந்து சென்றது.  நான் இப்போது மிக்க பயத்துடன் ‘மாயாண்டி.. என்னால இறங்க முடியல..’ என்றேன்.   மாயாண்டி பதிலேதும் கூறாமல் படிக்கட்டிலிருந்து எழுந்து எனை நோக்கி மேலேறினான்.  இப்போது மாயாண்டி என்னருகில்.  ‘நான் சொல்றதக்கேளு..  அதப்பாரு நம்ம ஆளுங்கள.. முதல்ல உன்னவிட பயந்தவங்கதான்.. ஆனா இப்ப பாரு.. நா கிணத்துக்கு அடியில புதச்சிவச்ச தேங்காயவே கொண்டுவராங்கன்னா பாத்துக்கயேன்.. அதனால பயப்படாம இறங்கு..’ என்றான்.  நான் பிடிவாதமாக மறுத்தேன். ‘சரி வேணா விட்டுடறேன்.. இப்போ உன்னால மேலேறிப்போக முடியுமா..’ என்றான். நான் ‘முடியும்’ என்றேன். ‘சரி.. அப்ப மேலேறிப்போ..’ என்று சொன்னான். நான் மெல்ல படிக்கட்டினைப்பிடித்து என்னை நிலைப்படுத்திக்கொண்டு நின்றேன்.  மெதுவோக மேலேற முற்பட்ட போது என்னுடைய கால்கள் படபடவென ஆடின.  நான் மேலேறும் முயற்ச்சியைக்கைவிட்டு ‘மாயாண்டி என்னால மேல ஏற முடியல..’ என்றேன் சற்றே கெஞ்சும் தோரணையில்.  ‘சரி நான் ஏற்றிவிடுகிறேன்..’ என்றான் சிரித்த படியே. அவனுடைய சிரிப்பின் பொருள் விளங்குவதற்க்குள் மாயாண்டி என் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு கிணற்றின் பக்கவாட்டு சுவற்றினை தன்கால்களால் வேகமாக ஒரு உதைவிட்டுவிட்டு என்னுடன் கிணற்றுக்குள் பாய்ந்தான்…

இன்னும் வரும்…

Advertisements
Published in: on மே 5, 2010 at 11:45 முப  Comments (3)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/05/05/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e2%80%a63/trackback/

RSS feed for comments on this post.

3 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

 1. கதை சூப்பர்-னா ……..ரொம்ப திர்லிங்கா விஜய் படம் மாதிரி போகுது …………..
  இந்த கதையா கண்டிப்பா விஜய் கிட்ட சொல்லுங்க ………….
  ‘சுறா’ வுக்கு அடுத்த படம் ‘மண்ணாம்பூச்சி’… ‘சுறா’ கடல்ல…. ‘மண்ணாம்பூச்சி’ கிணத்துல………
  விஜய் என்ட்ரி சீன் அப்ப ஒரு மியூசிக் ‘மண்ணாம்பூச்சி’ ‘மண்ணாம்பூச்சி’ ‘மண்ணாம்பூச்சி’…
  அப்படியே கதை by Surendran -நு போட சொல்லுங்க……
  நீங்க தமிழ் நாட்டு அளவுல பிரபலம் ஆகிடலாம் ……. எப்புடி??

  • வர வர உன் அழிசாட்டியம் தாங்கமுடியலயே… ம்.. என்னுடைய அடுத்த கதைக்கு நீதான் ஹீரோ.. இப்ப என்ன பண்ணுவே…

 2. என்னது உங்க அடுத்த கதைக்கு ஹீரோவா ……….அதுக்கு பதிலா போன தடவை சொன்னிகளே
  //வா ராசா.. வா.. கிட்ட வா.. உன்னய தண்ணியில(புதை குழில ) தள்ளிவிட்டுட்டு வேற சத்தம் வருதான்னு பாக்கறேன்.. வா…//
  இரண்டுமே ஒண்ணுதான் ……………..
  பய புள்ளக்கு ஆசைய பாரு ………


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: