மண்ணாம்பூச்சி…4

தண்ணீரில் விழுந்த வேகத்தில் நான் என் கண்களை திறந்து பார்த்தேன். எண்ணெய்யை கண்களில் விட்டுவிட்டு மூடி பின் கண்களை திறந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. என்னைச்சுற்றி கண்ணாடி கீற்றுக்கள் போன்ற ஏதோ ஒருவெளிச்சம் சூழ்ந்திருந்தது. நான் எங்கே இருக்கிறேன் என்று புரிந்து கொள்வதற்க்குள் என் கால்களை யாரோ இழுப்பது போன்ற ஒரு ஒரு உணர்வு. நான் இப்போது கிணற்றுவெள்ளத்தில் நான் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் எனக்குப்புரிந்தது. அது ஒரு சூன்யமான சூழல். என் மூக்கும் வாயும் காற்றை சுவாசிக்க பிராயத்தனப்பட்டு அதற்க்கு பதிலாக தண்ணீரை உள்வாங்கியது…என் மூக்கிலிருந்து உச்சந்தலைக்கு நூல் பிடித்தார்போல் ‘ங்’ ஒலியுடன் கூடிய ஒரு வலி கோடுகிழிக்க ஆரம்பித்தது. இதுவரை அமைதியாக இருந்த என்னுடல் இப்போது என்னைக்கேட்காமலேயே படபடவென வெள்ளத்தில் துள்ளியது. கைகால்களை கோபம் கொண்ட கயவன் போல இலக்கில்லாமல் வெள்ளத்தில் அடித்தேன். என்ன ஒரு ஆச்சர்யம்… இப்போது என்னுடல் வெள்ளத்தினுள்ளிருந்து மெல்ல மேலே எழும்புவதை உணர்ந்தேன். மீண்டும் கைகால்களை பலம்கொண்டு வெள்ளித்தை அடித்தேன். என்னுடல் முன்னைவிட் வேகமாக மேலேறியது. இப்போது என்தலை வெள்ளத்திற்கு வெளியே. என் வாய் மற்றும் மூக்கின் வழியாக புதிய காற்று உள்சென்றதை நான் உணர்ந்தேன்.உடல் மட்டும் வெள்ளத்தினுள் படபடவென அடித்துக்கொண்டிருந்தது. நண்பர்களின் வழக்கமான ‘ஹோ’ என்ற ஓசை என்காதுகளில் விழுந்தது. கண்களைத்திறந்து பார்த்தேன். தெளிவாகத்தெரிந்தது. என் கண்கள் பாதகன் மாயாண்டியைத்தேடியது. ஆனால் அவனை காணவில்லை. என்னால் வெள்ளத்தின் மேல் என்னுடலை நீண்டநேரம் நிலைப்படுத்த முடியவில்லை. கரையை அடையும் சூத்திரமும் எனக்குத்தெரியாது. ஆளில்லத்தீவின் நடுவே கைவிடப்பட்ட தனியாள்யோல வெள்ளத்தில் தத்தளித்தேன். என் கைகால்களோ எதையேனும் செய்தாவது என்னை வெள்ளத்தில் நிலைப்படுத்த முயன்றன. சிறிது நேரத்தில் என் கைகால்கள் சோர்ந்து தளர்ந்து நான் மீண்டும் மூழ்கத்துவங்கினேன். மூழ்கிக்கொண்டே கண்களைத்திறந்து பார்த்தேன் பச்சைகலந்த வெண்மைசிறம் என் கண்களுக்கு முன்னால்.  கைகால்கள் தளர்ந்து என்னால் மூச்சினை அடக்கமுடியாமல் மெதுவாக கிணற்றுவெள்ளத்தினை குடிக்க ஆரம்பித்தேன். ஒன்று.. இரண்டு.. மூன்று.. என் அம்மாவின் முகம் என் கண்களுக்குத்தெரிந்து மறைந்தது.  நான் கைகால்களை அசைக்காமல் மேலெழும்பும் முயற்ச்சியைக்கைவிட்டு வெள்ளத்தில் இட்ட கல்போல கிணற்றின் ஆழம்நோக்கி பயணித்தேன்.

2012:   ஆகஸ்ட் 6:   லண்டன் ஒலிம்பிக்ஸ்:

ஒலிம்பிக்ஸ் நீச்சல் குளத்தின் ஒன்பதாவது வரிசையின் கைப்பிடிச்சுவற்றைப்பிடித்து மேலேறினேன். கைத்தட்டல்கள் சத்தம் அரங்கத்தினை அதிரச்செய்ய என்னிருகைகளையிம் மேலே தூக்கி நான்குபுறமும் உள்ள மக்களுக்கு காண்பித்துவிட்டு என்னிருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என்னையே நான் நடந்து செல்வதையே பிரம்மாண்டமான திரை காண்பித்துக்கொண்டிருந்தது. நான் ஆரவாரமில்லாமல் சென்று என்னிருகைகையில் அமர்ந்து என்னுடலில் இருந்த நீரினை ஒரு துணியால் துடைத்துக்கொண்டிருக்கையில் என் பயிற்ச்சியாளர் ஓடிவந்து என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டார். என் சக நீச்சல் வீரர்களும் என்னருகே வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்க ஒலிப்பெருக்கி உயிர்பெற்றது. முதல் இரு பதக்கங்களையும் அறிவித்தபின் ‘தி கோல்ட் மேடல் கோஸ் டு மிஸ்டர் முருகன் ப்ரம் இண்டியா..’என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே நான் எழுந்து பதக்க மேடையை நோக்கி நடந்தேன். பச்சைநிற விரிப்பில் என் கால்கள் நடந்து கொண்டிருந்த போது எனக்கு அன்று என்னை காப்பாற்றிய மாயாண்டியின் முகம் நினைவுக்கு வந்தது… 

Advertisements
Published in: on மே 7, 2010 at 12:15 பிப  Comments (4)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/05/07/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-4/trackback/

RSS feed for comments on this post.

4 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. அது எப்படி-னா ஊருல உங்க முதல் நீச்சல் அனுபவத்தையும் …..லண்டன் ஒலிம்பிக்ஸ் சையும் link பண்ண முடியுது ….?

    இப்படிதான் ஒருத்தர் நாலு கோடி செலவு பண்ணி படம் எடுத்து இந்தியாவோட கடன அடைச்சார்………….

    நீங்க என்னடான …நாளே பக்கத்துல இந்தியாவுக்கு ஒலிம்பிக்ஸ்ல கோல்ட் மேடல் வாங்கி தந்துடீக ……….

    எப்படியோ ஒலிம்பிக்ஸ்ல கோல்ட் மேடல் வாங்கி தந்தத்துக்கு என் பாராட்டுகள் …………….

    • இன்னிக்குத்தான் நீ சமத்தா பின்னூட்டம் போட்டிருக்கே..

  2. ஏங்க…..இந்த “ட்விஸ்டு ட்விஸ்டு”ன்றாங்களே….அதுல எதாவது PhD பண்ணியிருக்கீங்களா என்ன?

    வித்தியாசமான கதை…..கலக்கல்!

    உங்களுக்கு ‘ட்விஸ்டு’ சுரேந்திரன் அப்படீன்னு ஒரு பட்டம் கொடுக்கலாம்னு தோனுது! எப்பூடி?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: