அழகு…

உங்களுடைய அழகைப்பற்றி மறந்துகூட பிறருடைய அபிப்பிராயத்தை குறிப்பாக பெண்களின் கருத்தை வாய்விட்டு கேட்காதீர்கள். அந்த வினாவுக்கு கிடைக்கக்கூடிய பதில் சில சமயம் உங்கள் மனதை பலவீனப்படுத்திவிடக்கூடும். பலவீனமான மனம் அழகை நிலைகுலையச்செய்துவிடும்.

 பெண்களின் உடல் உறுப்புக்களை அவரவர் உடல்வாகுக்கு ஏற்றவாறு கடவுள் அமைத்திருக்கிறார்.  அகன்ற கண்கள் சில பெண்களுக்குத்தான் அழகாக இருக்கும்… குறுகிய உள்ளடங்கிய குறுகிய கண்கள்தான் சிலருக்கு அழகு சேர்க்கும். சிலருக்கு எடுப்பான நாசியும் சிலருக்கு அடங்கிய மூக்கும் அழகின் சின்னங்களாக அமையக்கூடும்.  உயரமான சில பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் குள்ளமான பெண்களில் கட்டழகி கிடையாதா.. உங்களுக்கு அமைந்திருக்கும் உடல்வாகு உண்மையில் உங்களுக்கு அழகினைத்தான் உண்டாக்குகிறது என்ற உண்மையை உணருங்கள்.

 கவர்ச்சியான உடல் தோற்றம் அழகின் ஓர் அம்சம் என்பது சரி.  அப்படிப்பட்ட உடல் கவர்ச்சி உங்களிடம் இல்லையே என்பதாலேயே நீங்கள் அழகியல்ல என்ற முடிவுக்கு வரவேண்டாம்.  இனிய குரல் அழகின் ஓர் அம்சம். உங்கள் குரல் அழகே பிறரை கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றிருக்கும். உங்களிடம் குரல் வளம் அமைந்திருந்தால் அதை செம்மைப்படுத்த முயலுங்கள். முறையான இசைப்பயிற்ச்சியினால் உங்கள் குரல் பல்லாயிரக்கணக்கான மக்களை மயக்கச்செய்துவிடும். 

 பகட்டான மேனியழகு இல்லாத பல பெண்களுக்கு கட்டான உடல் அமைந்திருக்கும். இந்த உடற்க்கட்டும் ஓர் அழகு என அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்கள் உடற்க்கட்டை காப்பாற்றி வைத்திருப்பதே ஒரு சிறப்புத்தான்.

 உங்களின் நிறம் சிவப்பாக இருப்பது மட்டுமே அழகு என எண்ணவேண்டாம். கறுப்பான உடல் நிறத்துக்கும் ஒருவித கவர்ச்சி உண்டு. கருப்பு நிறம் என்பதற்க்காக எந்த பெண்ணும் கலக்கமடையத்தேவையில்லை.

 புற அழகு ஏதுமில்லாத சில பெண்களின் அக அழகு அந்த குறைபாட்டை போக்கிவிடும். நல்ல குணம்,  இனிய உரையாடல், உயர்ந்த பண்பு, பிறருக்கு உதவும் சுபாவம், விருந்தோம்பல் ஆகிய இந்த அக அழகிற்க்கு புற அழகு சமானமே ஆகாது. புற அழகைவிட அக அழகே உயந்து நிற்க்கும்.

 

பின் குறிப்பு :  சத்தியமாக இந்த பதிவு பெண்களின் நலனுக்காகவே. நீங்கள் நினைப்பது மாதிரி  மேலே உள்ள  அம்மணியின் புகைப்படத்தை என் வலைப்பூவில் இடுவதற்க்காக  எழுதப்பட்டவை அல்ல.  (அப்பாடா.. எப்படியோ சமாளிச்சுட்டேன்…)

 

Advertisements
Published in: on மே 12, 2010 at 4:25 முப  Comments (6)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/05/12/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81/trackback/

RSS feed for comments on this post.

6 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. உங்க கருத்து நல்லா இருக்கு ……….
    இம் ….ஒன்னு பண்ணுங்க ………….
    இத அப்பிடியே உங்க ஊர் கல்வெட்லு பதிவு பண்ணி வெச்சுட்டு பக்கத்துலையே நில்லுங்க ………
    போற வர எல்லா பொண்ணுகளும் உங்கள பாரட்டுவங்க ……..
    எப்படி என் ஐடியா ???

    • இப்பத்தானே உன்ன சமத்துன்னு சொன்னேன்.. சொல்லி வாய் மூடல… அதுக்குள் உன் வேலய காட்டிட்டயே…

  2. ரொம்ப நாள் கழித்து உங்கள் பக்கத்திற்கு ஒரு விசிட்… ஒரு சின்ன இலக்கணக் குறிப்பு சுரேந்திரன். வல்லின றகரத்திற்குப் பிறகு ஒற்றெழுத்து வராது (உ-ம்) முயற்ச்சி, பயிற்ச்சி, அழகிற்க்கு என்பது சரியல்ல… முயற்சி, பயிற்சி, அழகிற்கு … என்பதே சரி.

    ஒற்றுப் பிழை கட்டுரையின் பாயசத் துரும்பு என்பதால் குறிப்பிட்டேன்.

    தவறாக நினைக்க வேண்டாம்

    • ஒற்றுப்பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இனிவரும் பதிவுகளில் திருத்திக்கொள்கிறேன். புவனா முரளி அவர்களுக்கு என் நன்றிகள்.

  3. அழகான ஒரு பதிவு ராசா…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: