பதின்ப வயது குறிப்புகள் (தொடர்பதிவு)

ஒன்பதாம் வகுப்பு ‘பி’ பிரிவு வகுப்பறையின் முன் நான்.  வகுப்பில் பாடம்(?) நடந்து கொண்டிருந்தது. வாசலில் நிழலாடிய என்னை வகுப்பாசிரியர் உள்ளே வா என்றார்.  போனேன். ‘பெயர் என்ன’ என்றார்.‘சுரேந்திரன்’ என்றேன்.  ‘இப்போது என்ன மாதம் என்று தெரியுமா’ என்றார். ‘தெரியும்  ஆகஸ்ட்’ என்றேன்.  இரண்டு மாதம் தாமதமாக ‘பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறாய்’ என்றார். அவர் பேசிய தோரணையில் இருந்து அவர்தான் எனது வகுப்பாசிரியர் என்பது நன்கு தெரிந்தது. ‘ஆம்.. ஆனால் நான் காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளியில் ஏற்கனவே எட்டாவது படித்து தேறி அப்பள்ளியிலேயே ஒன்பதாம் வகுப்பில்  கடந்த இரண்டு மாதங்கள் பயின்றவன்தான்.. என்னுடைய தந்தை தமிழ்நாடு காவல் துறையில் காவலராக பணிபுரிந்து தற்போது காஞ்சிபுரத்தில் இருந்து மாற்றலாகி தற்போது எங்கள் குடும்பம் இந்த ஊருக்கு வந்துள்ளது. என் தந்தை தலைமையாரியரிடம் முறையாக தாமதசேர்க்கைக்கான காரணத்தை தெரிவித்ததால் நான் இப்போது நம் பள்ளியில் இந்த வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளேன்’ என்றேன். ‘இருக்கட்டும்.. ஆனால் நாங்கள்  முதலில் நடத்திய பாடங்களை திரும்பவும் உனக்காக நடத்த வாய்ப்பில்லை ஆதலால்.. நீ இங்குள்ள மற்ற மாணாக்கர்களோடு பழகி அவர்களிடம் பழைய பாடங்களைப்பற்றி கேட்டு தெரிந்து கொள்.  ஆனாலும் அது உனக்கு கடினமான காரியம் தான்.. ஏனென்றால் இந்த பள்ளி உனக்கு புதிதல்லவா’ என்றார். நான் மெல்ல புன்னகைத்து ‘இந்த பள்ளி வேண்டுமானால் எனக்கு புரியதாக இருக்கலாம்.. ஆனால் இந்த வகுப்பு மாணவர்களில்  பெரும்பாலோர் எனக்கு பழையவர்கள்தான் என்றேன். ‘எப்படி’ என்றார் விளங்காமல்.  ‘விளக்கமாக கூறுகிறேன் ஐயா..’ என்றவன் சற்றே குரலை சரிபடுத்திக்கொண்டு ‘சுமார் ஜந்து வருடங்களுக்கு முன் இதே திருப்போரூரில் காவலர் குடியிருப்பில் என் குடும்பம் வாழ்ந்து வந்தது.. அப்போது என்னுடைய பால்ய பருவத்தில் மலையடிவார பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை இதோ என் முன்னால் அமர்ந்திருக்கும் ஜோசப், தேவராஜ், சசி, விட்டல் மற்றும் பலருடன் சேர்ந்து படிக்கும் பேறினைப்பெற்றிருக்கிறேன். காலமாற்றத்தில் ஒரு முறை காவல்துறையின் உதவி ஆய்வாளர் அவர்களுக்கும் என் தந்தைக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் என் தந்தை மாவட்டத்தின் தலைநகராம் காஞ்சிக்கு இடம் மாற்றப்பட்டார். உடனே எங்கள் குடும்பமும் காஞ்கிக்கு இடம் பெயர்ந்தது. மீண்டும் கால சுழற்ச்சி. எந்த உதவி ஆய்வாளரால் நாங்கள் காஞ்கிக்கு விரட்டப்பட்டோமோ அதே காஞ்சிபுரத்திற்கு அநத ஆய்வாளரும் மாற்றப்பட்டு என் தந்தை பணிபுரிந்த அதே காவல் நிலையத்தில் பணிநியமனம் பெற்றிருந்தார். மீண்டும் அவருடன் ஒரு முறை கருத்துமோதல்(?) வந்துவிடக்கூடாதே என்பதற்க்காக என் தந்தை மாவட்ட காவல்த்துறைகண்காணிப்பாளரிடம் அவருக்கிருந்த செல்வாக்கினை பயன் படுத்தி மீண்டும் இந்த ஊருக்கே நாங்கள் மாற்றல் பெற்று வந்துவிட்டோம்.. இதுதான் நான் இப்போது உங்கள் முன்னால் நிற்பதற்க்கு காரணம்’ என்றேன். ஆசிரியர் என்னை சற்றே கூர்ந்து பார்த்துவிட்டு ‘உன்னுடைய அதிக பிரங்கிதனத்தையெல்லாம் காஞ்சிபுரம் பள்ளியோடு இருக்கட்டும்.. இங்கே சற்று அமைதியாகவும் ஒழுக்கமாகவும்(?) நடந்து கொள்ளவேண்டும்.. என்ன புரிகிறதா’ என்றார் என்னை மிரட்டும் தொனியில்.  ஏற்க்கனவே நகரப்பள்ளியில் இதைவிட அதிகப்படியாக நான் பார்த்துவிட்டதால் அவர் கூறியதை பொருட்படுத்தாமல் சாதரணமாக ‘சரி ஐயா’ என்றேன். ‘போய் கடைசி வரிசையில் உட்க்கார்’ என்றார்.  நான் போய் கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமரவும் மதிய உணவு இடைவேளைக்கான மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது…

 

தொடரும்…

 

பின் குறிப்பு : 

  • இந்த பதின்ப வயது குறிப்புகள் தொடர்பதிவு எழுத வாய்ப்பளித்தமைக்கு  திரு. பத்மஹரி அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.
  • தொடர்பதிவு  என்பதால் நான் ‘தொடரும்’ என்று போடவில்லை.  நிறைய விஷயங்கள் உள்ளதால் அதற்க்கு நிறைய பகுதிகள் தேவைப்படும்…
  • மேற்படி தனுஷ்க்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.. (எல்லாம் ஒரு விளம்பரந்தே….)
Advertisements

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/05/12/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/trackback/

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: