பதின்ப வயது குறிப்புகள் (தொடர்பதிவு) – 2

காலம் சென்றது.  ஒன்பதாம் வகுப்பின் இறுத்தேர்வில் நண்பர்களின் உதவியோடு(?) ஒரு வழியாகத்தேறினேன்.  ஆனால் பத்தாம் படிவத்தை நினைக்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத பயம். என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக டியூஷன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வகுப்பைத்தாண்டிய இன்னுமொரு வகுப்பைப்பார்த்தேன். இந்த வகுப்பு எங்கள் அறிவியல் ஆசான் அவர்களின் வீட்டு முற்றத்தில். ஜோசப்புக்கு அறிவியல் ஆசானை பிடிக்காத காரணத்தினாலும் அவனுடைய அப்பாவே ஒரு ஆசான் என்பதாலும் அவன் டியூஷனில் சேரவில்லை.  நான் மொக்கை கருணா மற்றும் தேவா ஆகியோர் டியூஷன் வகுப்பில் சேர்க்கப்பட்டிருந்தோம். தினமும் பள்ளிக்குச்சென்று திரும்பி மாலையில் அதேவேகத்தில் அறிவியல் ஆசான் அவர்களுடைய இல்லத்தில் ஒன்றாக சேர்ந்துவிடுவோம்.  அப்போது ஒன்று எனக்கு புரிந்தது. இதுவரை நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புவரை படித்தைவையெல்லாம் சும்மா விளையாட்டுபோல என்றும் இந்த பத்தாம் படிவம்தான் உண்மையான படிப்பு என்றும் இந்த கிணறைத்தாண்டிவிட்டால் அடுத்து நாம் டாக்டராகவோ வக்கீலாகவோ அதுவுமில்லையென்றால் சும்மா ஒரு கலெக்டராகவாவது ஆகிவிடலாம் என்ற உண்மையை புரிந்து கொண்டேன். அறிவியல் ஆசான் அறிவியலைத்தவிர மற்றபாடங்களை எங்களுக்கு திறம்பட பயிற்றுவித்தார்.  நாங்களும் கருமமே கண்ணாயிருந்து அனைத்துப்பாடங்களையும் கற்கத்துவங்கியிருந்த நேரம் எங்கள் வாழ்க்கையில் விதி விளையாடியது அறிவியல் ஆசானின் மகள் ரூபத்தில்…

திண்ணையோடு இருந்த எங்களின் வகுப்பு ஒரு மழைநாளில் ஆசானின் வீட்டுக்குள். அப்போதுதுதான் நாங்கள் அவளைப்பார்த்தோம். இதுவரை ஆசான் எங்களை ஏன் வீட்டினுள் சேர்க்கவில்லை என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம். கரிகாலன் காலைப்போல கருத்த கூந்தல்.. சேவலுடைய கொண்டை போன்ற சிவந்த உதடு.., என்றால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அவ்வளவு அழகு.. ஆனால்.. அவளை அக்கா என்றழைக்கவேண்டிய ஒரு கட்டாயம். ஆம் அவள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாளாம்.   மொக்கை  ‘பாருப்பா.. இவ்வளவு நாள் நாம பாக்காம விட்டுடமே..’ என்று ஆதங்கப்பட்டான். ‘டேய் சும்மா இருடா.. எனக்கு முன்னமே தெரியும்.. அந்த அக்கா காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறாங்க.. அதனால எப்பவாவதுதான் வீட்டுக்கு வருவாங்களாம்.. ஆனா நானும் இப்பத்தான் அவங்கள பாக்கறேன்’ என்றான் தேவா என்கிற தேவராஜ். நான் அந்த அக்காவை(?) பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் இப்போது அயர்ன் செய்த துணிகளை மடித்துக்கொண்டிருந்தாள்.  மொக்கை என்னைக்கிள்ளினான். ‘ஏ.. என்னப்பா..  அந்த அக்காவைப்பாத்து ஜொள்ளு விடறே..’ என்றான் மெதுவாக. ‘பேசாம சும்மா இரு’ என்று சொல்வதற்க்கும் ஆசானின் குரல் கேட்பதற்க்கும் சரியாக இருந்தது. ‘எல்லோரும் ஆங்கில டிக்டேஷனுக்கு ரெடியாட்டிங்களா’ என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவர் ‘அம்மா குழலி.. அந்த மேசையில இருக்கிற அந்த ஆங்கல புத்தகத்தையும் அது பக்கத்திலிருக்கிற பிரம்பையும் எடுத்துத்தாம்மா..’ என்றார். குழலி அக்காள் மெதுவாக எழுந்து ஆங்கில புத்தகத்தையும் பிரம்பையும் ஒருசேர எடுத்துக்கொண்டு கால் சலங்கை ஒலிக்க எங்களைநோக்கி நடந்துவந்துகொண்டிருந்தாள். நான் குழலி அக்காவையே  பார்த்துக்கொண்டிருந்தேன் அவள் கையில் இருக்கும் பிரம்பினால் இன்னும் சிறிது நேரத்தில் நான் அடிபடபோகிறேன் என்று தெரியாதவனாக.

ஆங்கிலம் என்றால் யாருக்குத்தான் பயமிருக்காது. நேற்று படித்தவையெல்லாம் இன்று மறந்துவிடுகிறது. ஆனாலும் இந்த டிக்டேஷனுக்கு நான் என்னை நன்றாக தயார்படுத்தியிருந்தேன். ஆசான் நாற்காலியில் அமர்ந்து புத்தகத்தைபிரிக்க ஆரம்பித்திருந்தார்.  நாங்கள் தயாரானோம். ‘தி கிரிக்கெட்’ என ஆரம்பித்தார்.  விளையாடும்போது பிடித்த கிரிக்கெட் டிக்டேஷனாக எழுதும்போது எனக்குப்பிடிக்கவில்லை.  ஆசானின் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொண்டு மள மளவென்று எழுதத்துவங்ககினேன்.  கொலுசு சத்தம். எழுதிக்கொண்டே சத்தம் வந்த திசையில் பாத்தேன். குழலி அக்கா இப்போது எங்களருகில் வருவது தெரிந்தது. ‘அப்பா.. நா கடைக்குப்போய்ட்டு வந்திடறேன்’ என்றாள். படிப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவளைப்பாத்த ஆசான்  ‘போய்ட்டு சீக்கிரமா வந்திடு..’ என்று சொன்னார்.  விட்டல் என்னைச்சீண்டி மெதுவாக ‘டேய்..  கழுத்தப்பாருடா என்றான்.’ நான் ‘ம்‘ என்றேன். ‘அக்கா கழுத்த.. பாருடா’ என்றான். நான் பாத்தேன்.  கழுத்தில் நெருக்கமாக கோர்த்த கருத்த மணிமாலையின் கீழே ஒரு மஞ்சள் கயிறு.  அப்படியானால்… 

தொடரும்…

Advertisements
Published in: on மே 19, 2010 at 5:59 முப  Comments (3)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/05/19/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/trackback/

RSS feed for comments on this post.

3 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. யார் இந்த அழகி என்று விளக்கவும்.

    • செந்தழல் ரவி அவர்களுக்கு வணக்கம். மேற்கண்ட படத்தினைப்பார்த்து யார் இந்த அழகி என்ற கேள்வியைக்கேட்ட முதல் ஆள் நீங்கள்தான் என்பதாலும்… மேலும் இந்த கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய நிலையில் கம்பெனி இல்லாத காரணத்தினாலும்… அண்ணன் அவர்களுக்கு ஆலயமணி படத்தில் நடித்த அபிநய சரஸ்வதி கன்னடத்துப்பைங்கிளி சரோசாதேவி அவர்கள பயன்படுத்திய ஒரு சோப்பு டப்பாவை அன்பளிப்பாக வழங்குகிறோம்…

  2. சோப்பு டப்பான்னு சொல்லி அல்வாவை இல்ல குடுத்திருக்கீங்க!

    :)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: