பதின்ப வயது குறிப்புகள் (தொடர்பதிவு) – 3

அப்படியானால்… கல்யாணம் ஆயிடுச்சா.. ஆசான் மீண்டும் டிக்டேஷனைத்தொடர்ந்தார். என் ஞாபகம் எல்லாம் மஞ்சள் கயிறின் மீதே இருந்தது. ‘படிக்கும்போதேவா கல்யாணம் பண்ணிக்குவாங்க..’ இது விட்டல். என் சிந்தனை சுழன்றது. ஏதோ எழுதிக்கொண்டிருப்பது மட்டும் எனக்குத்தெரிந்தது.  ‘எல்லோரும் நோட்டை மடிச்சி அப்படியே மாத்திக்குங்க. என்றார். என்நோட்டு புத்தகம் மொக்கையிடமும்.. தேவாவின் நோட்டுபுத்தகம் என்னிடமும் கைமாறின.  ‘இப்போ நா தந்த டிக்டேஷனை அப்படியே திருப்பி படிக்கப்போறேன்’  ஒவ்வொருத்தரும் அவங்க கிட்ட இருக்கிற நோட்டுபுத்தகத்துல தப்பா எழுதியிருக்கிறவார்த்தைகளை மட்டும் சுழிச்சிடுங்க’ என்று திரும்பவும் படிக்கத்துவங்கினார். இப்போதும் என் நினைவில் அந்த மஞ்சள்கயிறு. ஆசான் முடித்துவிட்டிருந்தார். நான் என்னையறியாமல் எதையெதையோ சுழித்துவைத்திருநதேன். எல்லோரும் வரிசையாக நின்று அவரவர் நோட்டுப்புத்தகங்களை ஆசானிடம் காண்பித்து ஆசி(?)  வாங்கிக்கொண்டிருந்தார்கள். என் முறையும் வந்தது. ஆசான் என்னை கேள்வியேதும் கேட்காமல் பிரம்பை என்னை நோக்கி நீட்டவே சலனமில்லாமல் என் அகன்ற வலது உள்ளங்கையில் பிரம்படியை ஏற்றுக்கொண்டேன் ஏதோ அமைச்சர் பதிவி ஏற்பதுபோல (சும்மா ஒரு பில்டப்). ஆனால் நான் அடிவாங்குவதை  குழலி அக்கா பார்த்திருந்தால்… நல்ல வேளயாக குழலி அக்கா அந்த சமயத்தில் அங்கு இல்லை.  அன்று நான் வீட்டுக்கு புறப்படும் வரை கடைக்குப்போன குழலி அக்கா திரும்பவேயில்லை.

இப்படியாக டியூஷன் வகுப்பும் பள்ளிக்கூட வகுப்பும் மாறி மாறி என்னுடைய பத்தாம் வகுப்புக்காலத்தை தின்றுகொண்டிருக்க இடையில் குளத்தில் இறங்கி நண்டுபிடிப்பது முதல் முந்திரிக்காட்டுக்குள் சுற்றுவது வரை தொடர்ந்தது ( முந்திரிக்காடு ). கடைசிவரை மஞ்சள் கயிறு மர்மத்தை எங்களால் கண்டுபிடிக்க(?) முடியவில்லை.

இறுதியாக இறுதித்தேர்வும் வந்தது. சராசரியாக படிக்கும் நானே விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தபோது நன்றாகப்படிக்கும் மாணவர்கள் எப்படியெல்லாம் புரண்டு புரண்டு படித்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள். ஆனால் சசி மட்டும் கலங்கவில்லை. சசியைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் படிக்காதவன்(பாடங்களை). ஆனால் தைரியமானவன். தேர்வையே தேர்வு செய்பவன் (ப்ளோ சரியா வரலயோ?). கோனாரை இடுப்பிலே கட்டிக்கொண்டு அரையாண்டுத்தேர்வை அடித்து நொறுக்கியவன். அவனுடைய துணிச்சலைக்கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். பிடிபடவே மாட்டான். ஒரு முறை ஆசிரியர் தேர்வு முடிந்து வகுப்பில் அவனுடைய விடைத்தாளை திருப்பித்தருகையில் ஐயமுற்று விடைத்தாளில் உள்ள ஒரு பதிலை திரும்ப எழுத சொன்னபோது பயப்படாமால் தாம் காப்பியடித்ததை ஒப்புக்கொண்டான். ஆசிரியரும் அவனுடைய நேர்மையைப்பாராட்டி மதிபெண்களை குறைக்காது விட்டுவிட்டார்.  இருப்பினும் இது பொதுத்தேர்வு அல்லவா. பறக்கும் படை என்று கூறுகிறார்களே. அவர்கள் போலீஸ்போல காப்பியடிப்பவர்களை பிடித்துக்கொண்டுபோய் செயிலில் போட்டுவிடுவார்களாமே.. இதெல்லாம் சசிக்கு தெரியுமா. ஒரு நாள் சசி என்னெதிரே சைக்கிளில் வந்தபோது விஷயத்தை நான் அவனிடம் சொன்னதும் சிரித்தான். ‘போடாப்போ.. போய் ஒழுங்கா படிக்கிறவழியப்பார்… என்ன நா பாத்துக்கறேன்’ என அலட்சியமாக கூறி விட்டு சைக்கிளை மிதித்தான்.

தேர்வுநாளும் வந்தது. பிள்ளையார் கோவிலில் ஒரே கூட்டமாக இருந்தது. தேங்காய் உடைக்கும் இடத்தில் சசி தேங்காய் உடைத்துக்கொண்டிருப்பது தெரிந்தது (மாட்டிக்கக்கூடாது.. ஆண்டவா..). என் அம்மாவும் அண்ணனும் என்னுடன் வந்திருந்து ஆசி வழங்கி திலகமிட்டு என்னை போருக்கு(?) அனுப்பிவைத்தார்கள். முதல் நாள் தமிழ் ஆகையால் பயமில்லை. பறக்கும் படையும் இல்லை.  ஆனால் ஆங்கிலத்தேர்வு அன்று ஏக கெடுபிடி. பறக்கும் படை பறக்காமல் வந்து எங்களை பயமுறுத்திச்சென்றது (இது ப்ளோ..). ஆனாலும் கேள்விகள் அவ்வளவு கடினமில்லாத காரணத்தால் விடைத்தாளில் ஆங்கிலத்தை  அங்காடித்தெருவென ஆக்கிவிட்டேன் (மறுபடியும் ப்ளோ வரலயே..). அப்புறம் அறிவியல்.. இத்யாதி.. இத்யாதி என்று ஒருவழியாக எதிர்கால தலைவிதியை ஒரே வாரத்தில் அரசாங்கத்தின் பழுப்புநிற பேப்பர்களில் நிரப்பிவிட்டு கோடையின் வெப்பத்தை தணிக்க கிணற்றைத்தேடி ஓடினோம்.

தொடரும்…

Advertisements
Published in: on மே 21, 2010 at 3:19 முப  Comments (1)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/05/21/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/trackback/

RSS feed for comments on this post.

One Commentபின்னூட்டமொன்றை இடுக

  1. //பறக்கும் படை பறக்காமல் வந்து எங்களை பயமுறுத்திச்சென்றது//

    அப்ப அது பறக்காத படை தானே ….??

    //வெப்பத்தை தணிக்க கிணற்றைத்தேடி ஓடினோம்.//

    மறுபடியும் மண்ணாம்பூச்சி கதையா..ஆள விடுங்க சாமி ……..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: