பதின்ப வயது குறிப்புகள் (தொடர்பதிவு) – 4

 

தேர்வு முடிவுகள் வெளியாயின.  நானும் என் கூட்டாளிகளும் தேறிவிட்டோம்(?).  எங்களில் இருவர் எல்லை அல்லது  புடவையின்  கீழ்புறத்திலே பட்டையாக அமைந்திருக்குமே அதுபோல அதையொட்டி தேறியிருந்தார்கள்.  ஆனால் நான் கவைலைகொள்ளவில்லை. ஏனெனில் வகுப்பில் இருக்கும் எனது நண்பர்கள் பனிரெண்டு பேர்களைவிட நான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தேன்.  ஆனால் வகுப்பில் இருந்த சில கயவர்கள்(?) என்னைவிட அதிக மதிபெண்கள் பெற்றிருந்தார்கள்(ஒரு இருபது பேராவது இருக்கும்).  வீட்டில் நான் வெற்றிப்பெற்றதை  கண்டு என்னை தலையில் தூக்கி கொண்டாடியர்வகள் என்னுடைய மதிப்பெண் அட்டையைப்பார்த்ததும் உற்சாகம் குன்றியவர்களாய் என்னை தலையிலிருந்து கீழிறக்கிவிட்டுவிட்டு இயல்புநிலைக்குத்திரும்பினார்கள். அளவுக்கதிகமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் என் மேல் அவர்கள் வைத்திருந்ததற்க்கு நான் பொறுப்பேற்க்காமல் +1 சேருவதற்க்கான வழிமுறைகளில் நண்பர்களின் துணையோடு ஈடுபட்டேன்.

விண்ணப்பங்களை வாங்குவதற்காக நானும் என் நண்பர்களும் பள்ளியைச்சென்றடைந்தோம். போகும்போதே +1ல் எந்த பிரிவைத்தேர்ந்தெடுப்பது என்ற விவாதம்.  நாங்கள் பெற்றிருந்த மதிப்பெண் அடிப்படையில் எங்களுக்கு மூன்றாம் பிரிவான வணிகவியல் மட்டுமே எளிதாக கிடைக்கும். ஆதலால் நாங்கள்  முதல் இருபிரிவுகளான அறிவியல் சார்ந்த பிரிவுகளை புறந்தள்ளி வணிகவியலே நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் துறை என உறுதிபூண்டு விண்ணப்ப படிவங்களை பெறுவதற்கான வரிசையில் நின்றோம்.  அப்போதுதான் அவளைப்பார்த்தேன்.

பெண்களுக்கான வரிசையில் விண்ணப்பத்தினை பெறுவதற்க்காக நின்றிருந்த பெண்கள் கூட்டத்தில் அவள் மட்டும் என் கண்களுக்கு தனியாகத்தெரிந்தாள்.  மான்விழி கயல்விழி என்பார்களே அந்த விழிகளை நேரில் கண்டேன்.  வட்ட வடிவமான தெளிவான முகத்தில் அந்த காந்தக்கண்களில் தெரிந்த பொலிவு என்னை ஒரு கணம் கட்டிப்போட்டது.   நான் மெதுவாக எனக்கு முன்னால் நின்றிருந்த என் நண்பனை உசுப்பி ‘மச்சி… அங்கே பாரேன்..’ என்றேன். ‘நான் ஏற்கனவே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.. நீ வாய துட..’ என்றான்.  நான் அவனைப்பொருட்படுத்தாமல் வரிசையில் முன்னால் தள்ளப்படுவது கூடத்தெரியாமல் அவளைப்பார்த்துக்கொண்டே ஊர்ந்துகொண்டிருந்தேன். நான் அவளை இதற்க்கு முன்னால் இந்த பள்ளியில் பார்த்ததில்லை.  எனவே இது வெளியூர் கிளிதான் என்று எனது மனது சொன்னது.  பின்னாலிருந்த என் நண்பன் வெங்கி என்னை மெதுவாக இடித்து ‘மாப்ள அவ எந்த பிரிவில சேருகிறாளோ அதுதான் நம்ம பிரிவு’ என புது வியாக்கியானத்தை முன் வைத்தான். ‘நான் நினச்சேன்… நீ சொல்லிட்டே..’ என்றேன் பெருமிதமாக. ‘மாப்ள எப்படிடா அவ சேருகிற குருப்பை கண்டுபிடிப்பது..’ என்றான் முன்னாலிருந்த மொக்கை.  ‘கவலப்படாத மச்சி.. நாம அவளையே கேட்டுடலாம்’ என்றான் வெங்கி. ‘மங்கி மாதிரி செய்யுற காரியங்களுக்கு நீதான் லாயக்கு.. அதனால நீயே அவள கேட்டு எங்களுக்கு தகவல் சொல்லு’ என்றோம் வெங்கியைப்பார்த்து. ‘அப்படியா.. இப்ப பாருங்க..’ என்றபடியே வரிசையிலிருந்த வெங்கி வரிசையிலிருந்து விலகி அவளைநோக்கி சென்றான் துளியும் பதட்டமின்றி. அவளருகில் சென்றதும் ‘எஸ்குயீஸ் மீ.. கொஞ்சம் உங்க பேனாவ தர்ரீங்களா..’ என்றான். அவளும் மறுப்பேதும் சொல்லாமல் பேனாவைத்தரவே அதைப்பெற்றுக்கொண்டு நேராக என்னருகே வந்து  எனக்கு முன்னால் வரிசையில் ஐக்கியமானான். நேரம் போய்க்கொண்டிருந்து. நான் மெதுவாக ‘ஏன்டா.. பேனாவ வாங்கிட்டு இங்க வந்துட்டயே.. நீ பேனாவ வச்சு ஒன்னும் பண்ணலன்னு தெரிஞ்சா அவ நம்மள என்ன நினைப்பா..’ என்றேன் சற்றே கோபமாக. ‘நீ ஏன்டா கோபப்படறே.. அவ தப்பா நினச்சா என்னத்தான நினைக்கப்போறா..’ என்றான் வீம்பாக. அதற்க்குள் மொக்கை ‘டேய் வெங்கி.. நாங்க என்னசொன்னோம்.. நீ என்ன செய்யுற.. போய் அவ என்ன குரூப்பில சேருகிறாள்ன்னு கேட்டுட்டு வாடான்னா.. போய் அவ பேனாவ வாங்கிட்டு வந்துட்டு அழிசாட்டியமா பண்ணுறே..’ என்று வெடித்தான். ‘சும்மா இரு மாப்ள.. இதுல ஒரு சூட்சுமம் இருக்கு.. கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியா இருந்தீங்கன்னா உங்க கோரிக்கைய நா நிறவேத்துவேன்..’ என்றான் அலட்சியமாக. 

இப்போது அவள் திரும்பி வெங்கியைதேடுவது தெரிந்தது.  வெங்கி சட்டென்று தமக்கு முன்னாலிருந்தவனின் முதுகின் பின்புறமாக ஒளிந்து தன்னை அவள் பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டான்.  நாங்கள் ஒன்றுமறியாதவர்கள் போல முன்னோக்கி நகர்ந்துகொண்டிருந்தோம். இப்போது அவள் வரிசையிலிருந்து விலகி எங்களைநோக்கி வருவது தெரிந்தது.  வெங்கியும் அதை உணர்ந்தவனாக சட்டென வரிசையிலிருந்து விலகி வரிசையின் மறுபுறத்தில் அமைந்திருந்த ஒரு சன்னலின் பக்கவாட்டு சுவரின் அருகேபோய் நின்று எதையோ எழுதுவதுபோல் பாவனை செய்யத்துவங்கினான்.  இப்போது அவள் எங்களருகே. அவளின் அழகான் விழிகள் அல்லாடுவதை கண்டு ரசித்தேன்.  சட்டென அவள் முகம் மலர்ந்தது.  அவள் வெங்கியைப் பார்த்துவிட்டாள். வெங்கி ஒன்றுமறியாதவன் போல எழுதிக்கொண்டிருந்தான்(?). அவள் அவனருகே சென்று ‘எழுதி முடிச்சுடீங்களா.. நான் என் விண்ணப்த்தை நான்     பூர்த்திசெய்யணும்’ என்றாள். அவன் அப்போதுதான் எழுதிமுடித்தவனாக ‘ரொம்ப நன்றிங்க..  என் பெயர் வெங்கடேசன்.. நா வணிகவியல் பிரிவுல சேர விண்ணப்பிச்சிருக்கேன்.. நீங்க..’ என்று இழுத்தான்.  ‘என் பெயர் வந்தனா.. நான் முதல் பிரிவான கணிதப்பிரிவில் சேர விண்ணப்பிக்கிறேன்.. நான் இந்த ஊருக்கு புதிதாய் வந்திருக்கும் டாக்டரின் மகள்’ என்று தன் அறிமுகத்தை இன்முகத்தோடு முடித்துக்கொண்டு வேகமாக நடந்து சென்றாள்.  நான் அப்போது முடிவு செய்தேன் நானும் முதல் பிரிவில் சேருவதென்று. 

தொடரும்…

பின்குறிப்பு   :  கடந்த இருவாரங்களாக பதிவு ஏதும் போடாததற்க்கு விசேஷமான காரணம் ஏதும் இல்லை… என் கணினி பழுதுபட்டிருந்தது என்பதைத்தவிர…

Advertisements
Published in: on ஜூன் 10, 2010 at 11:13 முப  Comments (2)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/06/10/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/trackback/

RSS feed for comments on this post.

2 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. சுப்பர் …உங்க வெளியூர் கிளிய சொல்லலை ….. போட்டோ கிளிய சொன்னேன் ….

    //கடந்த இருவாரங்களாக பதிவு ஏதும் போடாததற்க்கு விசேஷமான காரணம் ஏதும் இல்லை… என் கணினி பழுதுபட்டிருந்தது என்பதைத்தவிர…//

    பரவாயில்லை …..அது தான் ஏன் -நு யாருமே கேக்கலையே…..

    • மவனே இரு.. இரு.. இந்த தொடர் முடியும்போது உனக்கு வைக்கிறேன் ஆப்பு…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: