பதின்ப வயது குறிப்புகள் (தொடர்பதிவு) – 5

எல்லோருக்கும் வணிகவியலே கிடைத்தது என்னைத்தவிர.  நான் இப்போது +1 ஏ குரூப்பில் வந்தனாவின் சக மாணவனாக.  என்னுடன் உடன்வந்த அனைவரையும் வந்தனாவிற்க்காக இழந்தேன்(?) என்பதைவிட எனக்கு ஏற்ற பாடப்பிரிவான வணிகவியலை இழந்தேன் என்பதுதான் உண்மை.  முதல் இரண்டு வாரங்கள் எனக்கு ஒன்றும் கடினமாக இல்லை ஏனெனில் கணிதத்தின் உண்மையான சொரூபம் அப்பொழுது எனக்கு விளங்கவில்லை. போகப்போக முதல்பிரிவு என்பது படிப்பதற்க்காகவே படைக்கப்பட்ட பிரிவு என்றும் பள்ளிக்கூட நேரம் போக மீதமுள்ள நேரங்களிலும் முழுமையாக நம்மை ஈடுபடுத்தி படித்தால்தான் தேர்வில் வெற்றி பெறவே முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் பத்தாம் படிவத்தில் கணக்கில் பாரதி.  இப்போது கணக்கில் பாதி (அதாங்க 100/200 எடுத்தாலே பெரிய விஷயம்).   இதற்க்கெல்லாம் காரணம் வந்தனா.  முதலில் நான் அவளிடம் பேசுவதில்லை. பார்வை மட்டுமே. அதுவும் அவள் பார்க்காதபோது நான் அவளை பார்ப்பது மட்டும். இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் ஒரு முறை சோனாமீட்டரை நான் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது என்னை அவள் அழைப்பது என் செவிகளில் தேனாக பாய்ந்தது.  ‘என்னுடைய சோனாமீட்டர்ல சரியா ரீடிங் எடுக்கமுடியல.. அதனால சார் வந்து.. நீங்க இந்த ஆய்வ முடிச்சபின்னால என்னயும் இந்த சோனாமீட்டரிலேயே ரீடிங் எடுக்கச்சொல்லிட்டாரு…’ என்றாள். நான் உடனே சற்றே பிகுசெய்துகொண்டு ‘நா முடிக்கறதுக்கு லேட்டாகுமே..’ என்றேன்.  ‘அப்படியானால் நா வேற எங்காயாச்சும் பாத்துக்கறேன்..’  என்றாள் முறைப்பாக.  வந்த வாய்ப்பை நழுவ விடாதே மடையா என்று என் உள்மனது என்னை உசுப்பியவுடன் நான் சுதாகரித்துக்கொண்டு ‘நா என் ரீடிங்க அப்பறம் எடுத்துக்கறேன்.. நீங்க முதல்ல உங்க ஆய்வ பண்ணுங்க..’ என்றேன். ‘ஏன் இந்த திடீர்மாற்றம்’ என்றாள். ‘இல்ல உங்களப்பாத்தா பாவமா இருக்கு.. அதனாலதான்..’ என்றேன். ‘பாவமா.. நானா..’ என்று சற்றே கோபப்பட்டு எம்ஜிஆர் படத்தில் வரும் சரோஜாதேவி போல முகத்தை முறைபபாக வைத்துக்கொண்டு ‘மிஸ்டர் நீங்க எனக்காக பாவபடவேணாம்.. நா வேற இடத்தையே பாத்துக்கறேன்..’ என்று திரும்பவும் இயற்பியல் ஆசிரியர் எங்கள் அருகில்  வந்து நிற்பதற்க்கும் சரியாக இருந்தது.

‘என்ன வந்தனா.. இன்னும் நீ ரீடிங்க ஆரம்பிக்கலயா..’ என்றார்.  ‘இல்ல சார்.. இவன் இன்னும் முடிக்கல.. அதனாலதான்..’ என்று ரீங்காரமிட்டாள். ‘என்னப்பா இவ்வளவு நேரம்.. ஸிம்பிள் திங்.. இன்னுமா பண்ணிக்கிட்டிருக்கே..’ என்றபடி என்னுடைய ரீடிங் நோட்டை எடுத்துப்பார்த்தார்.  அடுத்து நான் வாய் திறப்பதற்க்குள் ‘என்னய்யா எல்லா ரீடிங்கையும் முடிச்சிருக்கே.. அப்புறம் ஏன் இன்னும் முடியலன்னு சொன்னே..’ என்றார்.  நானும் ‘சார் நா முடிக்கறப்பத்தான் நீங்க வந்தீங்க’ என்று சொல்லவும் ‘சரிசரி..  முடிச்சுட்ட இல்ல.. இடத்த காலிபண்ணு..’ என்றபடி நகர்ந்தார்.  எனக்கு அவமானமாக இருந்தது. என் முகம் வாடுவதைக்கண்ட வந்தனா ‘இல்ல நீங்க முடிச்ச பிறகே நா பண்ணிக்கறேன்..’ என்றாள். இப்போது அவள் பார்வையில் நான் பாவமாக தெரிந்தேன். இப்படி ஆரம்பித்த நட்பு மெல்ல வளர்ந்தது.  இதயம் படத்தில் வரும் முரளி போல் நான் மிக நல்லவனாக என் வேலையுண்டு நானுண்டு என்று அவளுக்கு காட்சியளித்து மாலையில் நண்பர்களுடன் உல்லசமாக இருக்கும்போது என்னை அவளை  என்னுடன் ஜோடி சேர்த்து நண்பர்கள் பேசும்போது  மிகுந்து பூரிப்படைவேன் (எவ்வளவு செலவு தெரியுமா பாஸ்?..)

இப்படி சோனாமீட்டரில் ஆரம்பித்த எங்கள் நட்பு +1ன்னோடு முடியும் என்று  நான் எதிர்பார்ககவில்லை. வருடம் முடிகிற தருவாயில்  நான் படிப்பில்(?) கவனம் செலுத்தி எப்படியாவது +1ஐ கடந்துவிடவேண்டும் அவளிடம் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்திக்கொண்டிருந்தபோது இடியென அந்தசெய்தியை என்னிடம் இறக்கினாள்  அவள் அடுத்தவருடம் இந்தப்பள்ளியில் படிப்பை தொடருவதில்லை என்று….

தொடரும்…

Advertisements
Published in: on ஜூன் 14, 2010 at 10:05 முப  Comments (6)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/06/14/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/trackback/

RSS feed for comments on this post.

6 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. //‘இல்ல உங்களப்பாத்தா பாவமா இருக்கு.. அதனாலதான்..’ என்றேன். ‘பாவமா.. நானா..’ என்று சற்றே கோபப்பட்டு எம்ஜிஆர் படத்தில் வரும் சரோஜாதேவி போல முகத்தை முறைபபாக வைத்துக்கொண்டு ‘மிஸ்டர் நீங்க எனக்காக பாவபடவேணாம்..//

    வயசுக்கு மீறின பேச்சு …வர்ணனை….

    • அதத்தான் நானும் சொல்லுறேன்.. ரொம்ப பேசுற நீ…

  2. நானும் ஒன்னொன்னா படிச்சுட்டே வர்றேன், லிஸ்ட்ல நெறைய அனுபவங்கள் இருக்கும் போலிருக்குங்களே :-)

    • வாங்க பிரதீபா.. வருகைக்கு நன்றி. என்னுடைய சுய புராணத்தை சீக்கிரம் முடிச்சுக்கறேன். உங்களுடைய தேநீர் நேரம் வலைப்பூ நன்றாக இருக்கிறது… வாழ்த்துக்கள்.

  3. சஸ்பென்ஸா..நல்லாதான் இருக்கு…

    • அமுதா கிருஷ்ணா அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி. அக்கம் பக்கம் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: