பதின்ப வயது குறிப்புகள் (தொடர்பதிவு) – 6

மனது வலித்தது அல்லது வலித்துக்கொண்டே இருந்தது.  எந்த மாதிரியான உணர்வு என கூறமுடியாத அளவிற்க்கு அந்த வலி என்னை வியாபித்திருந்தது. அம்மா என்னை கோவில் பூசாரியிடத்து கூட்டிக்கொண்டு போய் மந்திருத்து கூட்டிக்கொண்டு வருமளவிற்க்கு அது என்னை பாதித்திருந்தது. +1ல் தேறி +2வில் தனிமரமாய் நின்றேன் என்னைச்சுற்றி பலரிருந்தும். ஆனால் காலம் வலியது அல்லவா. படிப்படியாக என் வலியை குறைத்து என்னை+2வின் மத்திய காலக்கட்டத்தில் வந்தனாவை முற்றிலுமாக மறக்கடிக்கச்செய்திருந்தது. மழைவிட்ட தூவானம் போல் தெளிந்த நான் என் சோகத்திலிருந்து மீண்டு புத்துணர்ச்சி பெற்றவனாய் +2 பொதுத்தேர்வினை ஒரு வழியாக எதிர்கொண்டு வென்றேன்.

மீண்டும பழைய கதைதான். மதிப்பெண் பட்டியல் வரும்வரை வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தநான் மதிப்பெண் பட்டியலைக்கண்ட உடன் தளர்ந்துபோனேன்.  வணிகவியலை பாடப்பிரிவாக எடுத்த என் நண்பர்கள் அனைவரும நல்ல மதிப்பெண்கள் பெற்று தேறியிருந்தார்கள்.  ஒரு பெண்ணினுடைய அழகைக்கண்டு அவளுடன் சேர்ந்து படிப்பதற்க்காக என் எதிர்கால திட்டமிடுதலில் நான் செய்த தவறை இப்போது உணர்ந்தேன்.  வீட்டில் உள்ளவர்கள் என்னைத்தேற்றி அடுத்தது நான் என்ன செய்யவேண்டும் என்பதை எனக்கு போதித்தார்கள். அடுத்ததாக கல்லூரி வாழ்க்கை. எனக்கான நல்ல எதிர்காலத்தை அமைக்கவேண்டும் எனவும் முன்பு நான் செய்த தவறை மீண்டும் இப்போது செய்யக்கூடாது எனவும் நான் உறுதிபூண்டு என் வீட்டாரின் அறிவுறுத்தலுக்கு இணங்க நான் நல்ல பல கல்லூரிகளை தேர்ந்தெடுத்து இயற்பியல் பாடத்தை தெரிவுசெய்து விண்ணபத்திருந்தேன்.  இறுதியில் நான் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் அனைத்தும் என்னை தெரிவுசெய்யவில்லை. எனவே நான் என் தேர்வு பாடமான இயற்பியலை விடுத்து  எனக்கு வேறு எந்த பாடப்பிரிவாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இறுதியில் நான் என் விருப்ப பாடமான வணிகவியலுக்கே விண்ணப்பித்தேன்.  என்ன ஆச்சர்யம்.  விண்ணப்பித்த அன்றே எனக்கு சென்னையில் உள்ள ஜெயின் கல்லூரியில் இடம் கிடைத்தது.  இழந்த உற்ச்சாகத்தை திரும்பப்பெற்றவனாய் கல்லூரி திறக்கும் அந்நன்நாளை எதிர்பார்த்துக்காத்திருந்தேன்.

கல்லூரியின் முதல் நாள். புது சட்டை.. புது கால்சட்டை.. இத்யாதி.. இத்யாதி.  எங்களூரில் இருந்து சென்னைக்கு போதுமான பேருந்து வசதி இல்லாத காரணத்தால் நான் முன்கூட்டியே திட்டமிட்டு முன்னதாகவே கல்லூரிக்கு வந்துவிட்டிருந்தேன்.  அப்போதுதான் தெரிந்தது இன்னும் கல்லூரியை கூட்டிப்பெருக்கும் ஆயா கூட அந்த சமயத்தில் வந்திருக்கவில்லை என்று. நான் மெதுவாக நடந்து சென்று கல்லூரி வளாகத்தின் நுழைவாயிலை ஒட்டி அமைந்திருந்த ஒரு தேனீர்கடையில் சாயா ஆர்டர் செய்துவிட்டு அருகில் உள்ள கட்டைத்தடுப்பின் மேல் அமர்ந்தேன். அன்றய தினசரியை (நெம்பர் 1 நாளிதழ்) சாயா குடித்துக்கொண்டே படித்துவிட்டு மடித்து வைத்தேன். தேனீர்கடை நாய் என்னை பரிதாபமாக பார்த்ததால் நேரத்தை கடத்த தேனீர்கடைக்கார சேட்டன் என்னைத்தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என அடுத்த சாயாவிற்க்கு ஆர்டர் கொடுத்தேன்.  சிறிது நேரம் கழித்து மாணவர் கூட்டம் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் கூட்டமாக வந்திறங்குவது தெரிந்தது. மாணவர் கூட்டத்தினிடையே வண்ணவண்ணமான உடையில் மாணவிகளும் வந்திறங்கினார்கள் (அப்புறம்தான் தெரிஞ்சது அது கோஎட் கல்லூரி என்று). ஏற்கனவே நான் இருபாலர்(?) பள்ளியில் படித்ததினால் இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. மெதுவாக எழுந்து மாணவர் கூட்டத்தோடு கலந்து நான் கல்லூரி நுழைவாயிலை அடைந்தபோது எனக்குப்பின்னாலிருந்து ஒரு பெண் குரல்   என்பெயர் சொல்லி சத்தமாக என்னை விளிப்பது எனக்கு தெளிவாக கேட்டது.

தொடரும…

Advertisements
Published in: on ஜூன் 16, 2010 at 12:12 பிப  Comments (10)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/06/16/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/trackback/

RSS feed for comments on this post.

10 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

 1. நம்பவே முடியவில்லை, “ஹேய், நீங்களும் இங்க தான் சேர்ந்து இருக்கீங்களா?” என்றபடி வந்தனா என் அருகில் வந்தாள்.

  ஐ ஐ… இது தானே அடுத்த பாகத்தோட ஆரம்பம் ? :-)

  • தொடர்பதிவ நான்தானே எழுதுறேன்.. அதுக்குள்ள அடுத்த பதிவ நீங்களே எழுதிடுவீங்க போல இருக்கே… நன்றி. பொறுத்திருந்து பாருங்கள்.

 2. //இறுதியில் நான் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் அனைத்தும் என்னை தெரிவுசெய்யவில்லை.//
  application fill பண்ணியதே வச்சே உங்க தெறமையை கண்டு பிடிச்சு இருப்பாங்க…

  //பெண் குரல் என்பெயர் சொல்லி சத்தமாக என்னை விளிப்பது எனக்கு தெளிவாக கேட்டது//

  கூட்டிப்பெருக்கும் ஆயா கூட அந்த சமயத்தில் வந்திருக்கவில்லை என்று கவலை பட்டிங்களே….ஒரு வேளை அவங்க குரலோ …..
  அந்த ஆயாவுக்கு முன்னமே உங்களை தெரியுமா???

  • ஐயா ராசா… நான் உன் கதய கேக்கலயே…

 3. எழுத்து நடை அருமை …..

  • யுக கோபிகா அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி.

 4. இது நிஜமா இல்லை கதையா?

  • இது கதையல்ல நிஜம்.. என்று சொன்னால் ஏதோ தொலைகாட்சி நிகழ்ச்சியின் நினைவு வரும். ஆதலால் இது கதை கலந்த நிஜம் என்பதுதான் சரி… (வீட்டுல போட்டு கொடுத்துடாதீங்க தாயி…)

 5. நீங்களும் ஜெயின் கல்லூரியா எந்த ஜெயின் எந்த வருடம் சொல்லவும்
  கதை நன்றாக இருந்தது

  • வாங்க பாலாஜி. டி பி ஜெயின் கல்லூரி. 1990 ஆம் ஆண்டு… இப்போ திருப்திதானே.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: