பறவை ஜாதி…

இன்று காலை பெரம்பூர் இரயிலடியிலிருந்து பீச்ஸ்டேஷனை வந்தடைந்தேன். அடுத்து வேளச்சேரி இரயிலுக்கான காத்திருப்பு. வண்டி வர தாமதமாகும் என்று என் உள்மனது சொல்லியதால் ஒரு கப் சூப்வாங்கிக்கொண்டு பிளாட்பாரக்கூரையை தாங்கி பிடித்துக்கொண்டிருந்த ஒரு பில்லரின் தாழ்வாராத்தில் அமர்ந்தேன். வேளச்சேரி இரயில் என்பதால் பிளாட்பாரம் முழுவதும் ஒரே ஐடி பர்சனாலிட்டீஸ்தான். கப்பிலிருந்து எப்படியாவது கடைசி சொட்டு சூப்பையும் எடுத்து ருசித்து(நக்கி)விடவேண்டும் என்ற ஆவலின் காரணமாக அருகில் இருந்த நாய் என்னை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டிருந்தபோதும் (நான் சொன்னது நிஜமான நாய்தாங்க…) நான் அதைபொருட்படுத்தாது கப்பை என் உதடுகளுக்கு நேராக கொண்டு சென்றுகொண்டிருந்தபோது அந்த சத்தம் கேட்டது. மழைக்காலங்களில் தெருமுனையில் உள்ள டிராஸ்பார்மர் வெடிக்கும்போது கேட்க்குமே அந்த சத்தம்.  சட்டென திரும்பிப்பார்த்தேன். நான் எந்த இரயில் வண்டியிலிருந்து வந்திறங்கினேனோ அந்த வண்டியின் இரண்டாவது பெட்டியின் கூரைமேல் அமைந்த மின்சார கம்பியிலிருந்துதான் அந்த சத்தம் கேட்டது. பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைவரது கவனமும் இப்போது சத்தம் வந்த திசையில். பெட்டியின் கூரைமேலிருந்து புகைந்த நிலையில் கருகிய ஏதோ ஒன்று பொத்தென பெட்டியின் அருகே நடைபாதையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு கூட்டமாய் நானும் ஆர்வமாய் அருகில் சென்று பார்த்தேன். அது ஒரு காகம்.

காகம் என்று தெரிந்த உடன் என்னுடைய சுற்றங்கள் சுவாரிசியமற்றவர்களாய் டைம்ஸ் ஆப் இந்தியாவை தொடர்ந்து படிப்பதற்க்கும் (ரூபாய்க்கு ஏதோ ஸிம்பல் வச்சுட்டாங்களாமாமே? நிசமாவா..) மற்றும் மீதிவைத்திருந்த காபியை மிச்சம் வைக்காமல் குடிப்பதற்க்கும் மற்றவர்கள் அருகில் உள்ள சகதோழிகளுடன் கடலை போடுவதற்க்கும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர். இப்போது நான் மற்றும் செத்துப்போன காகம் இருவர் மட்டும். தகுதிக்கு மீறிய சாவு. எவ்வளவு வோல்டேஜ் பாய்ந்தது என்று தெரிய வில்லை. கருமையே கருத்திருந்தது. என்னை தாண்டிச்சென்ற பலபேர் காகத்தைவிட என்னை அதி வினோதமாகப்பார்த்தார்கள். அப்போது அது நடந்தது. 

மழைவானத்திலே கருமேகங்கள் கூட்டமாக திரள்வதுபோல் திடீரென காக்கைகள் கூட்டம் வானத்தில் வட்டமிட்டு பீச்ஸ்டேஷனுடைய பிளாட்பாரங்களை இணைக்கக்கூடிய இரயில் மேம்பால நடைமேடையின் விளிம்பில் இரைச்சலுடன் வந்தமர்ந்தன.  கா கா கா என்று ஒரே சத்தம். மேலும் காக்கை கூட்டங்கள் வரத்துவங்கியிருந்தன.   கா கா கா என்ற ஒலி எங்கும் வியாபித்திருந்தது. அவைகளினுடைய சப்தத்தை யாரும பொருட்படுத்தவில்லை என்றாலும் கூட அவைகள் தொடர்ந்து சப்தமிட்டபடியே இருந்தன. நான் அவைகளை பார்த்தேன். பதட்டம் நிரம்பியக்கூக்குரல். அபயக்குரல் என்பார்களே அது இது தானோ? காக்கை இறந்துவிட்டது என்பது அவைகளுக்குத்தெருயும் என்றாலும் கூட செத்துப்போன அந்த காக்கைக்கு இவ்வளவு சொந்தங்கள் இருக்குமா என்று எனக்குள் வினவிக்கொண்டேன்.

எனக்குப்பின்னால் போலீஸ் சீருடையில் இருந்த ஒரு போலீஸ்காரர் என்னைப்பார்த்து ‘என்ன தம்பி அந்த செத்துப்போன காக்காய அப்படி பாக்குறீங்க’ என்றார். ‘இல்ல சார்.. காக்கா வந்து..பாவம்..’ என்று நான் இழுத்துக்கொண்டிருந்தபோதே அவர் தொடர்ந்தார் ‘அட நீங்க வேற தம்பி.. மனுஷனே இந்தக்கம்பில் அடிப்பட்டு இதே இடத்தில் விழுந்திருக்கான்..’ என்றார்.  ‘அதுக்கில்ல சார்.. அங்க பாருங்க.. ஒரே காக்கா கூட்டம்.. பாவம் என்னம்மா பீல் பண்ணுதுங்க..’ என்றேன்.  ‘தம்பி நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க.. நான் சொன்ன மாதிரி மனுஷனே இங்க அடிப்பட்டு விழுந்து கிடந்தாலும் அவன ஒரு பய வந்து தூக்கமாட்டான்.. சும்மா ஒரு இச்சோட அவனவன் வேலயப்பாக்க கிளம்பிடுவான்.. நீங்க வேளச்சேரிதானே போகணும்.. அதோ பாருங்க உங்க ட்ரெயின் வந்துடுச்சி’ என்றார்.  நம்மவர் கூட்டம் வண்டியை ஆக்கிரமித்துக்கொண்டது.  நான் மெல்ல நடந்து சென்று ஒரு பெட்டியின் வாயிலில் ஏறி நின்றுகொண்டேன்.

நான் காகங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். மனிதர்கள் கூட தன் சொந்தங்களைத்தவிர  மற்ற பொதுவான இறப்புகளுக்கு இப்படி உணர்வுபூர்வமாக கூடுவதில்லை என்பதே உண்மை. காக்கையைப்பொறுத்தவரை இப்படி கூடுவதென்பது இறப்புக்கு மட்டுமல்லாமல் இரைப்பைக்கும் கூட கூடுவது கண்கூடு. மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த இனமான உணர்வு வரமாட்டேன் என்கின்றது?  போலீஸ்காரர் சொன்னதுபோல் காலத்தை கருததில் கொண்டாலும்கூட அந்த காலத்திலேயே பராசக்தி படத்தில் வந்த பாடலில் உடுமலைநாரயணகவி அவர்களின் பாடல் வரிகளில்..

சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா

எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க

பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க

கா..கா..கா..

இரயில் நகரத்துடங்கியது. செத்துப்போன காக்கா இப்போது என்னை விட்டு பின்னோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் காக்கைக்கூட்டத்தின் சத்தம் மட்டும இன்னும் என் காதுகளைவிட்டு அகலவில்லை.

Advertisements
Published in: on ஜூலை 16, 2010 at 1:06 பிப  Comments (4)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/07/16/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/trackback/

RSS feed for comments on this post.

4 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

 1. ஒரு பறவை காரில் அடிபட்டு இறக்க, இன்னொரு பறவை அதற்காக துக்கம் காத்தது குறித்து நான் இட்டப் பதிவு இதோ: http://dondu.blogspot.com/2005/11/blog-post_19.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  • ராகவன் சார் அவர்களுக்கு என் நன்றி. உங்களுடைய ‘துணைவியின் பிரிவு’ படித்தேன். படித்தேன் என்பதைவிட உணர்ந்தேன் என்பது மிகப்பொருத்தம். நன்று. என்னுடைய இந்தபதிவுக்கு நீங்கள் பின்னூட்டமிட்டு உயர்த்தியதற்க்கு மிக்க நன்றி.

 2. // இறப்புக்கு மட்டுமல்லாமல் இரைப்பைக்கும்// நல்ல வரி !!

  அற்ப உயிரினம்ன்னு நெனைக்காம நீங்க பரிதாபப்பட்டது, பெரிய பதிவே போட்டது-நெகிழ்ச்சியா இருக்குங்க !! மனிதம் வாழ்க !!

  • பிரதீபா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: