கத்தியைத்தீட்டாதே…

மாலை நேரம். வண்ணாரப்பேட்டை இரயில் நிலையம் தாண்டி இரயில் வண்டி நின்றுகொண்டிருந்தது. சில  நிமிடங்களுக்குள்ளாகவே சிக்னல் கிடைத்து வண்டி புறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை பத்துநிமிடங்களுக்குமேலாகியும் இரயில் வண்டி ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து ஆவடி மற்றும் திருவள்ளூர் செல்லக்கூடிய இரயில் வண்டிகளில் பயணம் செய்து வருபவர்களை நான் கவனத்திருக்கிறேன். அவர்கள் இதுபோன்ற மாலை நேர காலதாமதத்துக்கெல்லாம் பதட்டமடைவதில்லை. ஏனென்றால் கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து வண்டி புறப்பட்ட உடனேயே இரண்டு சிக்னல்களில் வண்டி நின்றே செல்லும் என்பதும் அவசரமாக செல்ல வேண்டியிருந்தால் சென்ட்ரல் நிலையத்தை தேர்ந்தெடுத்து பயணம் மேற்க்கொள்ளவேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்றாகத்தெரிந்திருக்கிறது. ஆகவே கிடைத்த நேரத்தில் கைப்பேசியிலோ அல்லது வாயிலோ கடலைபோட்டுக்கொண்டு இன்புற்றிருப்பர். விடயம் அறியாத என்னைப்போன்ற சிலபேர் மட்டுமே இரயில் பெட்டியின் வாயிலில் நின்று எத்திநோக்கிக்கொண்டிருப்பர். மழை இலேசாக பட்டும்படாமல் பெய்துகொண்டிருந்தது. பொதுவாக நான் வெண்டார் கோச் என்றழைக்கப்படும் விற்பனையாளர்களுக்கான பெட்டியில் ஏறுவது வழக்கம்.  உண்மையைக்கூறவேண்டுமெனில் அதில்தான் நான் நிறைய சங்கதிகள் நிறைந்த மனிதர்களை பார்க்க முடியும். நான் பெட்டியில் உள்ளவர்களை நோட்டமிட்டேன்.

மூன்று நான்கு இளைஞர்கள் வாயிலுக்கு அருகேயுள்ள இடத்தில் எதிரெதிராக அமர்ந்து வாயில் குட்காவைப்போட்டு குதப்பிக்கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருவன் அடிக்கடி தலையை எத்தி இரயில் பெட்டிக்கு வெளியே துப்பிக்கொண்டிருந்தான். சென்(னை)தமிழ் அவர்களோடு விளையடிக்கொண்டிருந்தது. அருகே குழல்அப்பளம் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டடு அதனருகே பலவகையான நொறுக்கு தீனி சமாச்சாரங்கள் பொதியப்பட்டிருந்தன. உள்ளே உள்ளது எல்லாம் வெளியேத்தெரியும்படியான ஒரு பிளாஸ்டிக் பொதிவு. இதைபிரித்து பல கடைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் போலும். எடை கூடுதலாக இல்லாவிட்டாலும் அவற்றின் பொதிகள் பெரியதாக இருந்தன.  பொதிகள் சாய்ந்துவிடாமல் இருக்க அவற்றை வண்டியின் சுவரை ஒட்டி அடுக்கி அவற்றை பாதுகாத்துக்கொண்டிருந்த ஒரு நபரைப்பார்த்தேன். இளவயது முதலாளி. இந்தமாதிரி நபர்களை பார்க்கும்போது எனக்கு சில சமங்களில் பொறாமையாக இருக்கும். என்னைப்போல் ஒரு நிறுவனத்தின் உயர்தர அடிமையாய் இல்லாமல் சுயமாய் முடிவெடுத்து தொழில்செய்து அவற்றின் மூலமாக தானும் தன் குடும்பமும் முன்னேறவேண்டும் என்கின்ற இலக்கோடு செயல்படும் இவர்கள்தான் உண்மையான தொழிலதிபர்கள். ஹ்ம் என்ற பெருமூச்சுமட்டும்தான் எனக்கான அப்போதைய ஒரே ஆறுதல். எனக்கெதிரே உள்ள இருக்கையின் மூலையில்  ஒருவர் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அவர் இரயில்வேயில் பணிபுரிந்து வருவதை மற்றவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவருடைய மேல்சட்டைப்பையில் வெளியே தெரியும்படி ஏதோ ஒரு இரயில்வே தொழிற்சங்க குறியீட்டு எழுத்துகள் பதித்த அட்டையை வைத்திருந்தார். அந்த சமயத்தில் அவரை நித்திரைக்கொள்ள செய்தது அவர் அருந்திய ஏதோ ஒரு கஷாயம் என்பது மட்டும் அவர் மீது வந்த வாசத்தினால் நான் அறிந்துகொண்டேன். எனக்கெதிரே  தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்திருதார் ஒருவர். அவருக்கருகே சுழலும் சைக்கிள் ரிம்மில் ஒரு நாடா இணைப்பின் மூலமாக இணைக்கப்பட்டு இயங்கும் சாணைபிடிக்கும் ஒரு கருவி.  நிச்சமாக அவருடையதாக்கதான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். வண்டி இப்போது நகரத்தொடங்கியது.

வண்டி நகரத்துவங்கியதும் இரயில்வே ஊழியர் விழித்துக்கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு தாம் இன்னமும் பயணத்தில்தான் உள்ளோம் என்பதை உறுதிசெய்துகொண்டார். பின் மெதுவாக எழுந்து தன் கைப்யையை எடுத்துக்கொண்டு பெட்டியின் வாயிலுக்கு வந்து நின்றார். அதே சமத்தில் சாணைபிடிப்பவரும் எழுந்து தன் கருவியை இறக்குவதற்க்கு வசதியாக வாயிலுக்கு அருகே கொண்டு நிறுத்தினார். இ.ஊ வெளியே பார்த்துவிட்டு சலிப்புடன் ‘சே சனியம்பிடிச்ச மழ.. நேர காலந்தெரியாம பெய்யுது..’ என்று சலித்துக்கொண்டார். அதற்க்கு அவருக்கு எதிரே நின்று கொண்டிருந்த சாணைப்பிடிப்பவர் ‘ஐயா.. மழ பெய்ஞ்சாலும் திட்டுறீங்க.. வெயில காய்ஞ்சாலும் திட்டுறீங்க.. மழ பெய்யுதுன்னு வீட்டிலேயே முடங்கி கெடக்க முடியுமா.. இல்ல வெயில் நல்லாக்காயுதுன்னு வீட்டுக்கே போகாம இருந்துர முடியுமா.. மழயோ வெயிலோ எதுவும் நம்ம கயில இல்ல..  எல்லாம் இயற்க.. எது எப்படி இருந்தாலும் தொழில் செய்யறவனுக்கு மழயும் வெயுலும் ஒண்ணுதான்.. ’ அதற்க்குள்  இ.ஊ இடைமறித்து ‘அப்பா உன் வியாக்கியானத்த நா கேக்கல.. நீ ஒழுங்கா போய் கத்திய தீட்டுற வேலயப்பாரு..’ என்றார். ‘ஐயா நா போய் கத்திய தீட்டறேன்.. நீங்க போய் உங்க புத்திய தீட்டுங்க’ என்று சொல்லிவிட்டு  வியாசர்பாடி நிலையத்தில் நிற்பதற்க்காக ஊர்ந்த இரயில் இருந்து  தன் சாணைபிடிக்கும் கருவியை எடுத்துக்கொண்டு சட்டென இறங்கிக்கொண்டார்.  நான் சன்னல் வழியக எத்தி பார்த்தேன். தூரத்தில் மழையில் நனைந்தபடி சாணைபிடிக்கும் கருவியை தனது தோளில் சுமந்துகொண்டு அவர் நடந்து செல்வது எனக்கு நன்றாகத்தெரிந்தது.  

 

Advertisements
Published in: on ஜூலை 20, 2010 at 1:27 பிப  Comments (2)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/07/20/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87/trackback/

RSS feed for comments on this post.

2 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

 1. // ‘ஐயா நா போய் கத்திய தீட்டறேன்.. நீங்க போய் உங்க புத்திய தீட்டுங்க’ என்று சொல்லிவிட்டு //

  எனகென்னவோ அவரு உங்களை பார்த்து தான் இதை சொல்லி இருப்பாருனு நெனைக்கிறேன் ……
  பொதுவாவே எல்லோரும் சாதனை செய்தா அதுல “நான்” கேரக்டர் பேசப்படும் ….
  சோதனை வந்தால் தன் நண்பன் அல்லது வழிப்போக்கன் மீது அந்த பலி சுமத்தப்படும் …….

  உங்களை பத்தி எனக்கு தெரியாதா என்ன ……அடி வாங்கிட்டே “பிச்சு புடுவன் பிச்சு” -நு ஒரு சௌண்ட கொடுக்கர ஆள் ஆச்சே நீங்க….

  • //பொதுவாவே எல்லோரும் சாதனை செய்தா அதுல “நான்” கேரக்டர் பேசப்படும் ….
   சோதனை வந்தால் தன் நண்பன் அல்லது வழிப்போக்கன் மீது அந்த பலி சுமத்தப்படும் ……//

   அன்பு தம்பி.. உன்னுடைய பின்னூட்டத்தை விட பெரிய சோதனையா எனக்கு வந்து விடப்போகிறது…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: