காரணம் கண்டுபிடிச்சாச்சு…

‘நானும் ஒரு ரெண்டுநாளாப்பாக்கறேன்… உன் முகமே சரியில்லயே.. என்ன ஒரே சோகமா இருக்க..’ என்றான் மயில்சாமி. ‘எனக்கு ஒண்ணும் இல்லயே..’ ‘இருந்தாலும் இந்த கேள்விய நீ நம்ம ஆனந்த் கிட்ட கேட்டிருக்கணும்..’ என்றேன் அவனை சீண்டுவதற்க்காக. ‘எந்த ஆனந்த்..’ என்றான். ‘நீ பேப்பரே படிக்கறது இல்லயா.. நம்ம நாட்டுக்கு  செஸ் விளையாடி பெரும சேத்த நம்ம விஸ்வநாதன் ஆனந்த்.. அவரத்தான் சொன்னேன்..’ என்றேன். ‘அட அந்த விசயமா..’ என்றபடி உற்சாகமானான்.  தொண்டையை சரிசெய்துகொண்டு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ‘உனக்கு தெரியாத உண்மைய நான் சொல்லுறேன் கேளு..’ என்றான் மெதுவாக. ‘இந்தாளு இன்னாப்பண்ணியிருக்கான் தெரியுமா..’ ’எந்த ஆளு..’ என்றேன்.  ‘இன்னாப்பா நீ இந்த ஆனந்துதான்(?)..  சமீபத்துல  உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்துச்சு இல்லயா..’ என்றான். ‘ஆமா.. அதுக்கென்ன இப்ப..’ என்றான். ‘உலக கோப்ப பைனலுல நம்ம நாட்டுல பலபேர்  ஸ்பெயின் அணி ஜெயிக்கும்ன்னு சப்போர்ட் பண்ணாங்க இல்லயா..’ என்றவனை இடைமறித்து ‘யோவ்.. பால் ஆக்டபஸ் சொன்னதக்கேட்டுதான் பலபேர் ஸ்பெயின் அணி ஜெயிக்கும்ன்னு சப்போர்ட் பண்ணாங்க.. அதுக்கும் இந்த ஆனந்துக்கும் என்ன சம்மந்தம்..’ என்றேன்.  ‘அவசரத்துக்கு பொறந்தவனே சும்மா நா சொல்லுறத பொறுமையாக்கேளு.. கடசீல உலககோப்பய ஸ்பெயின் ஜெயிச்சுருச்சு இல்லயா.. அப்ப ஸ்பெயினுக்கு சப்போர்ட் பண்ண கூட்டத்துல நம்ம ஆனந்தும் ஒரு ஆளு..’என்றான்.  ‘அதனால’.. என்றேன் புரியாதவனாக. ‘எல்லோரும் ஸ்பெயினுக்கு சப்போர்ட் பண்ணது முக்கியமில்ல.. நம்ம ஆளு விஸ்வனாதன் ஆனந்த் சப்போர்ட் பண்ணதுதான் பெரிய விசயமாப்போச்சு.. ஏன்னா நம்ம இத்தாலி டீம் விளையாடும்போது சப்போர்ட் பண்ணாத இந்த ஆளு ஸ்பெயின் அணி விளையாடும்போது மட்டும் சப்போட் பண்ணுறான்னா ஏதோ உள்குத்து இருக்குதுன்னு கண்டுபிடிச்சி நம்ம டெல்லி ஆளுங்க உளவுத்துறைய உசுப்பி விட்டுச்சு..’  ‘அப்புறம்..’ என்றேன் நான் ஆர்வமாக. ‘அப்புறம் என்ன.. நம்ம உளவுத்துற ஆளுங்க நேரா பிளைட் புடுச்சு ஸ்பெயினுக்கு போய் பாத்திருக்காங்க.. அங்கனப்போன பிறகுதான் அந்த விசயமே உலக்கு தெரிஞ்சுது..’ என்றான்.  நான் ஆர்வமாக என்ன விசயம்’ என்றேன். ‘நீ பேப்பரே படிக்கறது இல்லயா..’ என்றான் நான் வைத்த ஆப்பை எடுத்து எனக்கு வைத்துக்கொண்டே. ‘சரி விசயத்துக்கு வாப்பா..’ என்றேன். ‘நம்ம ஆளுங்க ஸ்பெயின் ஏர்போட்டுல இறங்கின உடனே பக்கத்தில இருந்த ஒரு ஓட்டல்ல விசாரிச்சு இருக்காங்க..  விசாரச்சுதுல நம்ம ஆனந்து அங்கன ஒரு சின்னவீட்ட வாங்கி குடியும் குடித்தனுமா இருந்திருக்காரு..’ என்றான்.  ‘என்னப்பா இப்படி சொல்லுறே.. நான் கேள்விப்பட்ட வரையில ஆனந்து நல்ல ஆளுதானே.. அவரு அப்படியெல்லாம் சின்ன வீடு செட்டப் செஞ்சியிருக்க வாய்ப்பே இல்லயே..’ என்றேன்.  ‘அட நாசமாப்போனவனே.. உன் புத்திய என்ன சொல்ல.., நான் சொன்னது அவரு ஸ்பெயின் நாட்டுல ஒரு சின்னதா ஒரு  வீடுவாங்கி தன்பொண்டாட்டிப்புள்ளங்களோட சந்தோஷமா வாழுறாறுன்னு’ என்றான். ‘சரி அதுக்கென்ன இப்ப’ என்றான். ‘அதுக்கென்னவா.. இப்ப நாம அவருக்கு டாக்டர் பட்டம் குடுக்கறம்ன்னு வச்சுக்க.. அவரு அந்த பட்டத்தவாங்கினு திரும்பவும் ஸ்பெயினுக்கே போயி அங்கனயே தொழில் பண்றாறுன்னு வையி.. அப்ப உள்ளூர்லே டாக்டர் பட்டம் வாங்கி உள்ளூர்லே டாக்டர் தொழில் செய்யறவன்லாம் கேனயா..  அப்புறம் டாக்டர் கலைஞர் ஐயா, டாக்டர் புரட்ச்சித்தலைவி அம்மா,  டாக்டர் பத்மசிரி கமல்ஸாசன் அவர்கள், டாக்டர் இளிய தளபதி விஜய் அண்ணா, ஐய்யையையோ… மறந்துட்டேனே.. தைலாபுரம் மருததுவர் ஐயா, மருத்துவர் மகன் ஐயான்னு நிறைய டாக்டர்கள் நிறைஞ்ச தமிழ்நாட்டுல போராட்டம் வெடிச்சுதுன்னு வச்சுக்க அப்புறம் நாடு தாங்குமா.. அதானாலத்தான் ஆனந்துக்கு டாக்டர் பட்டம் குடுக்க டெல்லியில இருக்குற ஆளுங்க…………..என்று அவன் சொல்லிக்கொண்டிக்கும்போதே மயங்கி சரியத்துவங்கினேன்.

Advertisements
Published in: on ஓகஸ்ட் 27, 2010 at 8:08 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/08/27/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/trackback/

RSS feed for comments on this post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

@ThePayon ~ twitter.com/thepayon

Welcome to Sramakrishnan

உங்களுக்காக...

Charuonline

உங்களுக்காக...

%d bloggers like this: