இயந்திரன்… ஒரு பார்வை…

மனிதனைப் போன்ற உருவ அமைப்புடைய ரொபாட் அறிவியல் புனைகதைகளிலும் அறிவியல் திரைப்படங்களிலும் அதிகம் இடம் பெற்று வந்துள்ளது. ஜப்பானில் கார்ட்டூனில் ரொபாட்டைச் சித்தரிக்கையில் நட்பைக் காட்டும் பெரிய கண்களுடனும், அடர்த்தியான முடியுடனும் சித்தரிக்கின்றனர். ஆனால் அமெரிக்காவிலோ டெர்மினேட்டர் பாணியில் மழுங்க மொட்டை அடித்த தலையுடனும் பயத்தை ஏற்படுத்தும் புருவமில்லாக் கண்களுடனும் காண்பிப்பது வழக்கம்.ஆனால் இந்த நூற்றாண்டில் இன்னும் இருபது வருடங்களில் மனித ரொபாட்டை அதாவது இயந்திரனை உருவாக்கி விடுவோம் என்கின்றனர் விஞ்ஞானிகள்!இப்படி ஒரு ரொபாட்டை உருவாக்குவது பெரிய சவால்தான் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை! ரொபாட் என்ற வார்த்தை உருவானது எப்படி?

1923ம் வருடம் காரல் கேபக் என்ற செக்கோஸ்லேவேக்கிய எழுத்தாளர் பிரசித்தி பெற்ற பயங்கரமான ஒரு நாடகத்தை எழுதினார். ஆர்.யு.ஆர் என்று அதற்குப் பெயர். செக் மொழியில் உள்ள ரொபாடா (வேலை) என்பதிலிருந்து பிறந்ததே ரொபாட்! இந்த நாவலில் வேலைக்காரர்கள் அதாவது ரொபாட்டுகள் இயந்திர ராட்சஸர்கள். மனித உருவிலான இவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு எதிராகத் திரும்பி விடுகின்றனர். இந்த நாவலிலிருந்து பிறந்த இயந்திர மனிதனே ரொபாட்! மனிதனைப் போலவே அனைத்து வேலைகளையும் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டுமானால் மனிதஅமைப்புடையதாகவே ரொபாட்டை , இயந்திரனை வடிவமைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். இந்தத் துறையில் மிகவும் பிரசித்தி பெற்று ஏற்கனவே அதிரடிச் சோதனைகளை நிகழ்த்தி விட்ட சைபர்னெடிக்ஸ் துறைப் பேராசிரியர் கெவின் வார்விக், “”மனிதனைப் போலவே இருக்கும் ரொபாட் சீக்கிரமே அனைவரிடமும் பிரசித்தி பெற்று விடுவான்” என்கிறார்.ஏற்கனவே பல்வேறு விரல்களையுடைய ரொபாட் வடிவமைக்கப்பட்டுப் புழக்கத்திற்கு வந்து விட்டது. நளினமான விரல் அசைவுகளுடன் செயற்கைத் தசைகளுடன் உருவாக்கப்பட்ட இந்த ரொபாட்டுகளில் தொடு உணர்வுக்கான சென்ஸர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பல வருடங்களாகக் கடினமாக உழைத்ததன் பலனே இந்த ரொபாட் என்கிறார் வார்விக்.ஆனால் மனித மூளையைப் போலவே இயந்திரனுக்கும் ஒரு மூளை அமைக்கப்பட வேண்டும். செயற்கை அறிவு ஊட்டப்பட வேண்டும்!இது சாத்தியம்தான் என்பதை 1997ல் நடந்த நிகழ்ச்சி ஒன்று நிரூபித்து விட்டது! உலகின் பிரபல முன்னணி செஸ் மாஸ்டரான கேரி கேஸ்பரோவுடன் விளையாட ஐ.பி.எம். நிறுவனம் வடிவமைத்த “டீப் ப்ளூ’ என்ற ரொபாட் தானாகச் சிந்தித்து ஒரு காயை நகர்த்தி விட்டது. விஞ்ஞானிகள் சொல்லாத இந்தச் செயலை டீப் ப்ளூ செய்ததால் உலகமே பரபரப்புக்குள்ளாகி விட்டது.

ஆனால் இந்த “காக்’ இரண்டு வயதுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியைக் கூட இன்னும் அடைந்தபாடில்லை.சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் இன்னொரு முறையைக் கையாண்டு ஜான் ஹாலந்த் என்பவர் ரொபாட்டை உருவாக்க ஆரம்பித்தார். டார்வினின் பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் இரண்டு குரோமோசோம்கள் போன்ற கணிணிகளில் புரோகிராமை உருவாக்கினார். இவை இரண்டும் இணைந்து புதிய குழந்தையாக ஒரு புரோகிராமை உருவாக்க, இப்படிப் படிப்படியாக ரொபாட் கற்க வேண்டியதைத் தானாகவே கற்று விடும் என்று அவர் தனது கொள்கையை உருவாக்கினார்.

1984ல் டக்ளஸ் லெனட் என்னும் விஞ்ஞானி ரொபாட்டிடம் பொது அறிவை ஏற்படுத்தப் புதுமையான முயற்சி ஒன்றைச் செய்தார். அதாவது தர்க்க ரீதியிலான அடிப்படை உண்மைகளைத் தொகுத்து அவற்றை அவர் ரொபாட்டிற்குக் கற்பிக்க முனைந்தார். உதாரணமாக, “ஒரு பொருள் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது,’ “மழை பெய்யும் போது நின்றால் நனைய வேண்டியதுதான்’ இப்படி சுமார் நூறு லட்சம் சாமான்ய அறிவுத் தொகுப்பை அவர் தொகுத்தார். இதற்குப் பல கோடி “பிட்ஸ்’ கணிணியில் தேவைப்படுகிறது. இன்னும் பத்துக் கோடி உண்மைகளை அவர் தொகுத்து வருகிறார்!

ஆனால் சிக்கலான மனித மூளை கோடானு கோடி நியூரான் இணைப்புகளை உடையதாக இருக்கிறது! ஒரு நியூரானுடன் இன்னொரு நியூரானுக்குச் சராசரியாகக் குறைந்த பட்சம் சுமார் ஆயிரம் தொடர்புகள் உள்ளன. கோடானு கோடி நியூரான்களிடையே எத்தனை கோடி இணைப்புகள் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியாது!

பிரம்மாண்டமான ரொபாட் ஒன்று அமைக்கப்படுமானால் ஒரு வினாடிக்கு நூறு கோடி தகவல்களை அது அலசிப் பார்க்க முடியுமென்று வைத்துக் கொண்டால் மனித மூளை இதை விட ஆயிரம் மடங்கு அதிக வேகத்துடன் செயல்படுகிறது!

இந்த அளவு வேகம் உடைய ரொபாட்டை 2020ம் ஆண்டு வாக்கில் உருவாக்க முடியும் என்கிறார் செயற்கை அறிவுத் துறையில் வல்லுநரான ரேகர்ஞூவெய்ல் என்னும் விஞ்ஞானி.சரி, மனிதனுக்கு உள்ளது போன்ற பிரக்ஞையையும் உணர்ச்சிகளையும் ரொபாட்டிடம் உருவாக்குவது எப்படி? “”மனித மூளையைப் போலவே அமைக்கப்பட்டால்தான் மனித பிரக்ஞை மற்றும் உணர்ச்சிகளை ரொபாட்டிடம் உருவாக்குவது சாத்தியம்” என்கிறார் வார்விக்.

ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ள பொம்மை ரொபாட்டுகள் சிரிக்கின்றன; அழுகின்றன!ஆனால் தனது லட்சியங்களைப் பிரக்ஞை மூலம் நிர்ணயிக்க மனிதனால் முடியும். சுற்றுப் புறச் சூழ்நிலைக்கு ஏற்ப அவனது உணர்ச்சிகள் மாறுபடுகின்றன. இவற்றை ரொபாட்டிடம் உருவாக்குவது மிகவும் கடினம் என்றாலும் 2050ம் ஆண்டு வாக்கில் அப்படி ஒரு முயற்சி வெற்றி பெறும் என்கிறார் வார்விக்.

பதினெட்டு ஆண்டுகளாக டெட்சுவன் அடோமு என்ற ரொபாட் ஜப்பானில் காமிக்ஸ் புத்தகங்களில் சித்தரிக்கப் பட்டுப் பெரும் வரவேற்பையும் புகழையும் பெற்று விட்டது. இது மனித குலத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு ராட்சஸர்கள், கொடியோரிடமிருந்து மனித குலத்தைக் காப்பாற்றி அமைதியை நிலை நாட்ட உதவும் கற்பனைக் கதாபாத்திரம்.

இதைப் போலவே மனித குலத்திற்கு நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் இப்போதுள்ள மின் விசிறி, மின் சலவைப் பெட்டி, மைக்ரோ அடுப்பு போல ரொபாட்டும் உதவும் நாள் வெகு தூரத்தில் இல்லை! மனிதனுடன் உறவாடி அவன் இடும் கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயலாற்றும் இயந்திரன் உருவாகி வீட்டில் வளைய வரும் போது மனித குலத்தில் ஒரு புதிய பரிமாணம் உருவாகி விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்!

அந்த நாளை உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!

—————————————————————————————————————————-

  • ஒரு மாதம் கழித்து படம்பார்த்துவிட்டு வந்து  விமரிசனம் எழுதினால் பதிவுலகில் கும்மி விடுவார்கள் என்று தம்பி தனிக்காட்டு ராஜா ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார் என்பதை நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்…
  • ஆமா.. தெரியாமத்தான் கேக்கிறேன்.. எந்திரன் என்ற தமிழ் சொல் சரியா அல்லது இயந்திரன் என்ற தமிழ் சொல் சரியா?… (இரண்டு வரிக்கு மிகாமல் விடையை பின்னூட்டமிடுக)
  • காதல் அணுக்கள் பாட்டு இப்போ சூப்பர் ஹிட் என்று என் நண்பன் ரஜினிராஜ் கூறியது முற்றிலும் சரியே..(படம் ரிலீசுக்கு முன்ன கேட்டதவிட.. இப்போ கேட்கும்போது நல்லாத்தானே இருக்கு.. உண்மைய சொல்லுங்க..)
  • இதே ரோபோ மேட்ர வச்சி என் நண்பன் கிட்ட நா ஒரு கதய சொன்னேன்.. அப்ப ஓடினவன்தான் இன்னும் ஊரு திரும்பல.. (நண்பேன்டா…)
  • சொந்த சரக்கு இல்லீங்கோ.. நன்றி  :  http://sify.com/cities/mumbai/fullstory.php?id=13564014
Published in: on ஒக்ரோபர் 28, 2010 at 11:12 முப  Comments (8)  

வாழ்க்கை வளம்பெற…

உங்களைவிட மேம்பட்ட நிலையில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஏனெனில் அவ்வாறு ஓப்பிட்டு பார்க்கையில் உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையும், போதாமை குணமும் ஏற்படும்.

—————————————————————————————————————————- உங்களுடைய செயல்களில் நீங்களே குற்றம் காணாதீர்கள்.

—————————————————————————————————————————- தற்போது நீங்கள் பெற்றிருக்கும் நிலைமையை எண்ணி மிகவும் பெருமை கொள்ளுங்கள். இது உங்கள் எண்ணங்களில் இருந்து முரண்பட்டதாக தெரிந்தாலும் இந்த எண்ணமே உங்களை மேம்படுத்த முதற்படியாக விளங்கும்.

—————————————————————————————————————————- உங்களிடம் உள்ள நல்ல குணங்களை பட்டியலிடுங்கள். உங்களை நீங்களே மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- உங்களுடைய எண்ணங்களில் உண்மையாக இருங்கள். உங்களுடைய எண்ணங்கள் தகுதியில்லாததாக தோன்றினால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- உஙகளுடைய முன்னேற்றத்தில் தாமதம் ஏற்படுவது இயற்கை. அவற்றிலிருந்து உங்கள் குறைகளை அறியுங்கள். அது அடுத்த கட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

—————————————————————————————————————————- வெற்றி, தோல்வி இரண்டையும் மனஅமைதியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- வாழுங்கள், மற்றவரை வாழ விடுங்கள்.

—————————————————————————————————————————- ஒருவர் மற்றவரை விட தாழ்ந்தவரும இல்லை, மேம்பட்டவரும இல்லை என்ற எண்ணத்தை மனதில் பதிய வையுங்கள். ஒவ்வொரு மனிதனும் தங்களுக்கென்று தனித்துவம் பெற்றிருபபர்.

—————————————————————————————————————————- அதிகாரத்தைக்கொண்டு கலகம் செய்யாதீர்கள். நட்பானவராக திகழுங்கள்.

—————————————————————————————————————————- அளவான பொறுமை கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- நீங்கள் செய்த குற்றங்களையும் தவறுகளையும் அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள்.

—————————————————————————————————————————- மற்றவர்களை இழிவுபடுத்தாதீர்கள்.

—————————————————————————————————————————- அவசியமான செயல்களுக்கு மட்டும் திட்டமிட்டு செயல்படுங்கள்.

—————————————————————————————————————————- வாக்குவாதத்தினால் ஒரு செயலில் வெற்றி காண இயலாது. மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு செவி கொடுங்கள். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————-வெளித்தோற்றத்தின் அடிப்படையில் மற்றவர்களை எடை போடாதீர்கள்.

—————————————————————————————————————————-

மேற் கூறியவற்றை பின்பற்ற இயலாது என நீங்கள் நினைக்கும் பட்சத்தில் இதுபோன்ற  மொக்கைகளை படிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். (யாருப்பா அது… இந்த ப்ளாக்கையே  நிறுத்தச்சொல்லுறது…)

Published in: on ஒக்ரோபர் 20, 2010 at 5:40 முப  Comments (2)  

தன்னையே கொல்லும் சினம்…

வரைபடத்தை மீண்டும் பாத்தேன். வரைபடத்தில் சிவப்புநிறத்தால் சுழிக்கப்பட்டிருந்த வட்டவடிவ குறியினைச்சுற்றி அமைந்த குறிப்புகளை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து நான் தற்போது நின்று கொண்டிருககும் இந்த சாலை என்னுடைய திட்டத்தின்படி சரியான பாதைதானா என உறுதிசெய்துகொண்டேன். எனக்கு கொடுக்கப்பட்டிருந்த பணியினை முடிக்க இன்னும் சில மணித்துளிகளே இருந்தன. உண்மையைச்சொல்லப்போனால் நான் ஒரு மனிதவெடிகுண்டு. ஆம் என்னுடைய வாழ்க்கை இன்னும் சில மணிநேரங்களில் முடிந்துவிடப்போகின்றது. நான் உயிருக்கு பயந்தவனல்ல. என்னுடைய இனத்தின் மீதான கோபம்… அதனுடைய இயலாமையின் கோபம் என்னை மனித வெடிகுண்டாக மாற்றியிருந்தது. அதனால் என்னை நான் இணைத்துக்கொண்டதுதான் என்னுடைய  E.E.E.  இயக்கம். இயக்கத்தின் நோக்கம் எங்கள் இனத்தின் இயலாமையை இல்லாமலாக்கி விடுவது. என்னுடைய இயக்கம் மற்றும் அது சார்ந்த கொள்கைகளுக்கும் நான் கட்டுப்பட்டவன். அந்த கட்டுப்பாடு இட்ட கட்டளையால் இன்று  நான் இந்த உயிர்க்களத்தில். 

ஆள் அரவமற்ற அந்த சாலையோர தேநீர்கடையில் என்னுடைய கடைசி தேநீரைப்பருகிக்கொண்டிருந்தேன். மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது.  நான் புறப்பட ஆயத்தமானேன். தேநீர்க்கடைக்காரர் என்னைப்பார்த்து ‘தம்பிக்கு ரொம்ப அவசரமோ.. மழை விட்டதும் போகலாமே..’ என்றார். அவர் என்னைப்பார்த்து அனுதாப்பட்டது என்னுடைய பருமனான உருவத்தைப்பார்த்துதான் என நான் யூகித்துக்கொண்டேன். இப்போது நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். நான் இங்கு வந்து போனது நாளை இந்த உலகுக்கு தெரியவந்தால் எத்தனைவிதமான இன்னல்களுக்கு இவர் ஆளாக நேரிடும்… அப்போது இதுபோல் என் மேல் இவர்அனுதாபப்பட முடியுமா… அதற்க்கு பேசாமல் இப்போதே அவர் என்னுடன் வந்துவிடுவது சாலச்சிறந்தது… என நினைத்துககொண்டேன். நான் என்னுடைய மழைக்கோட்டை சரிசெய்துகொண்டேன். மழைக்கோட்டின் உள்ளே சரியாக  வடிவமைக்கப்பட்ட உயர்அழுத்தத்திறன் நிரம்பிய பொதுமொழியில் சொல்லவேண்டுமென்றால் உருளை உருளையாய் மஞ்சள் நிறத்தில் பல வெடிகுண்டுகள் வரிசையாய் பொருத்தப்பட்டிருந்தன. அத்தனை வெடி குண்டுகளையும் ஒரே சமயத்தில் உயிர்ப்பிக்கப்போகும் சிவப்பு நிற பொத்தான் என்னுடைய  இடதுகை ஆட்காட்டிவிரலுக்கும் கட்டை விரலுக்குமிடையே அமைந்திருந்தது. இந்த சிவப்புநிற பொத்தான்தானை அழுத்தப்போவதுதான் என்னுடைய இறுதி இயக்கமாக இருக்கவேண்டும். நான் தேநீர் கடைக்காரரிடம் பிரியா(?)விடைபெற்றுக்கொண்டு என்னுடைய இலக்கைநோக்கி என்னுடைய விலையுர்ந்த(?) பைக்கை விரட்டினேன்.

சாலை வேகமாக பின்னோக்கிச்சென்றுகொண்டிருந்தது. தூரத்தில் நகரம் என்னை நோக்கி வேகமாய் வந்து கொண்டிருந்தது இன்னும் சற்று நேரத்தில் அது தன் அமைதியை இழக்கப்போகிறது எனத்தெரியாமலேயே.  நான் சற்று வேகமெடுத்தேன்.  எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களை எல்லாம் அலட்சியமாய் கடந்து முன்னேறிச்சென்று கொண்டிருந்தேன்.  மழை இன்னும் தூறிக்கொண்டிருந்தது. என்னுடைய கடந்தகாலம் என் கண்முன்னே வந்து நின்றது. மழையில் அப்பா வாங்கித்தந்த புது சைக்கிளில் நனைந்தபடி சென்று அம்மாவிடம் அடிவாங்கியது., பின் சினிமாக்கொட்டகையில் அதே சைக்கிளை தொலைத்துவிட்டு வந்து அப்பாவிடம் அடிவாங்கியது., கல்லூரி காலத்தில் யாரோ ஒருவன் பின்னாலிருந்து கல்லெறிந்ததற்காக மாணவர் கூட்டத்தின் முன்னால் நின்றுகொண்டிருந்த நான்  நன்கு வளர்ந்த ஒரு போலீஸ்காரர் கையினால் அடிவாங்கியது., பின்னர் இயக்கத்தில் சேர்ந்து வளர்ந்து பயிற்சியின் போது துப்பாக்கியை தவறுதலாய்  பிடித்து தலைவனிடம் அடிவாங்கியது என அடிபடும் படலம் என் முன்னே விரிந்து மறைந்தது. இந்த நிகழ்வுகளில் எனக்கு பலமுறைகோபம் வந்தபோதும் என்னுடைய இயலாமை என்னை ஊமையாக்கிவிடும்..  ஹ்ம்..

நகரம் என்னை அன்போடு வரவேற்க்கின்ற அந்த எல்லையில் நான் வேகத்தை குறைத்து மெல்ல ஊர்ந்தேன். திடீரென்று கீரீச்… என்ற சத்தத்துடன் ஒரு ஆட்டோ என்முன்னேவந்து என்னை மறித்துக்கொண்டு நின்றது. ‘த்தா…  கண்ணுதெரியல.. ஃபாரின் பைக்குல உக்காந்துட்டா நீ என்ன பிளைட்ல போறதா நினைப்போ..’ ‘ரோட்டுல இருக்கிற தண்ணிய என் வண்டிக்குள்ள அடிச்சுடடு போற..’ என்றபடி என் முன்னே கோபமாய் வந்து இறங்கினான் அந்த ஆட்டோ ஓட்டுனன். சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆள் அரவமில்லை. நான் அவனைவிட்டு விலகும் பொருட்டு என்னுடைய  பைக்கை வேறு திசையில் திருப்ப முயல்கையில் ஒடிவந்து என்னுடைய மழைக்கோட்டை இறுகப்பிடித்துக்கொண்டான். ‘த்தா..  நா பேசிக்கினே இருக்கேன்.. நீ பாட்டுக்குனு கம்முன்னு போறியே.. போயிடிவியா..’ என்றவனின் கைகளை விலக்க முயன்றேன். திடீரென அவன் என்னை அடிக்க முயல நான் விலக அவனுடைய இரண்டாவது முயற்சியில் அவனுக்கு வெற்றி கிட்டி அவன் என்னை இப்போது அடித்தே விட்டான். விரு விருவென என் தலையின் உச்சிக்கு கோபம் சென்றுகொண்டிருந்தது. ‘த்தா.. கொன்னுறுவேன்’ என கூறியவண்ணம்  அவனுடைய அடுத்த அடி என்மேல் விழுவதற்க்கும் என்னுடைய விரல் அந்த சிவப்பு பொத்தானை அழுத்துவதற்க்கும். . . .

Published in: on ஒக்ரோபர் 4, 2010 at 12:40 பிப  Comments (4)  

வாருங்கள் விரட்டுவோம்…

முதன் முதலாக நன் கடந்த டிசம்பர் மாதம் வலைப்பூ துவங்கியது முதல் வோட்ப்பிரஸ் முகப்புதளம் எனக்கு பரிச்சயம். அதில் இருக்கும் பட்டியலில் என்னுடைய வலைப்பூ வராதா என்ற என்று ஏங்கிய நாள் முதலாய் அது நடக்காமல் போகவே முகப்புத்தளங்களில் உள்ள வலைப்பூக்களை சொடுக்கி அவற்றைப்பார்த்து நானும் அதுபோல என்னுடைய வலைப்பூவிலும எழுதி நானும் பின்னாள் ஒரு முண்ணணி வலைப்பூவனாக ஆகவேண்டும் என்ற ஆசையில் சிறிதுகாலம் எழுதாமல் இருந்து வலைப்பூக்களைப்படிப்பதில் என்னுடைய ஆர்வத்தை செலுத்தினேன். பொதுவாக என்னுடைய வாசிப்பு வரிசையில் நகைச்சுவை படைப்புகள் முதலாவதாக இடம்பெற்றிருக்கும். பின் அனுபவங்கள், பயணக்கட்டுரைகள், பொதுவானவைகள், அரசியல் மற்றும் சமூகம் என்று வரிசைப்படி என் வாசிப்பு அமைந்திருக்கும். வாசிப்பு எவ்வாறாக இருந்தாலும அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களை மேலோட்டமாக மேய்வதோடு சரி. ஆழ்ந்து படிப்பதில்லை. சில சமங்களில் சில வலைப்பூக்கள் அதையும் மீறி என்னுடைய கவனத்தை ஈர்க்கும். அப்படி என்னை ஆட்கொண்ட வலைப்பூக்களில் ஒன்றுதான் கை. அறிவழகன் .

இவருடைய பதிவுகளுக்கு முதன் முதலாக நான் விஜயம் செய்தபோது இவர் சராசரி இளைஞனைப்போலல்லாமல் சமூகத்தின் அவலங்களை தம்முடைய பதிவுகளில் பதித்து சவுக்கடி தந்துகொண்டிருந்தார். முதலில் தயக்கத்தோடுதான் இவருடைய பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். ஏனென்றால் அவருடைய சொல்வீச்சு அப்படி…  அவருடைய அறிமுக பதிவில்..

வறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை, நான் மனிதம் நிரம்பிய மனிதத்தை இவ்வுலகில் நிரப்பிய தமிழன். அது மட்டுமே என் அடையாளம்.

இது ஒரு உதாரணமே.  

இது போன்ற சொல்வீச்சும் தெளிவான சமூக நோக்கும் எனக்கு இல்லை என்பதாலும் எனக்கான ஒரு வலைப்பூவை வெகுஜன பத்திரிகைப்போல் அமைக்கும் நோக்கிலும் நான் இவரை பின்பற்றுவதில்லை என முடிவுசெய்துவிட்டேன்.  பின்னாளில் என் வலைப்பூவுக்கு அகம் புறம் என பெயரிட்டு மற்ற பொழுதுபோக்கு வலைத்தளங்களைப்போல் வடிவமைத்து உலவவிட்டேன்.  இன்று வோர்ட்பிரஸ் முகப்புதளத்தில் முதல் நூறு வலைப்பூக்களுக்குள் என்னை அமரவும் செய்துவிட்டேன்.  ஆனாலும் கை. அறிவழகன் என்னால் வாசிக்காமல் இருக்க முடியவில்லை. சில(பல)சயங்களில் சமூகத்தில் நம் கண்முன்னே நடக்கும்  சமூக அவலங்களை நம்மால் தட்டிக்கேட்க முடியவிட்டாலும் கூட நம் எண்ணங்களில் உருவாகும் நியாயங்ளை நம் மனதிற்க்குள்ளேயே போட்டு  பூட்டிவிட்டு நம் அன்றாட வாழ்க்கையில் மூழ்கிவிடுகிறோம். அதையே ஒருவருடைய எழுத்தில் நாம் காணும்போது நாம் நினைத்ததுபோல், நமக்கு நேர்ந்ததுபோல், நமக்குத்தோன்றியதுபோல் என்று அவருள் அவருடைய எழுத்தினுள் நம்மைநாம் பார்க்கிறோம். அப்படித்தான் அறிவழகனை என்னுள் நான் காண்கிறேன். வாசிக்கிறேன். 

எல்லோரும்  டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவினுடைய திருமணத்தை நம் தேசிய உணர்வோடு ஒப்பிட்டு எழுதுகின்றவேளையிலே சானியாவும் ஒரு பெண்.. அவளுக்கும் மனம் இருக்கிறது.. அவளுக்கும் உணர்வு இருக்கிறது.. என்று  திருமண வாழ்த்துக்கள் “சானியா மிர்சா”.  என்கின்ற அவருடைய உயரிய பார்வைக்கு முதன்முதலில் பின்னூட்டமிட்டேன். அதற்கு பதிலும் இருந்தது.

ஆனாலும் கூட அதன்பின் வரும் பதிவுகளை நான் வாசித்திருநதாலும கூட அவைகளுக்கு பின்னூட்டமிடுவதற்க்கான உண்மையான உணர்வுப்பூர்மான தகுதி நமக்கு இருக்கிறதா என வினவிக்கொண்டு பின்னூட்டமிடாமல் விட்டுவிடுவேன்.  ஆனால் அவருடைய சமீபத்திய பதிவு என்னை மிகவும் பாதித்தது.  தேவசி சாரின் மரணம். என்ற பதிவில் ஒரு தனிமனிதனுடைய உயரிய குணத்தினை அவருடைய அனுபவத்தின்மூலம் அழகாக சொல்லியிருக்கிறார். 

//அறிமுக அட்டையைக் கையில் கொடுக்கும் போது அச்சிடப்பட்டிருந்த “தேவசி தாமஸ்” என்கிற பெயரும், ” சார், தமிழாளோ” என்கிற கொஞ்சலான மலையாளம் கலந்த அவரது தமிழும் அவரை ஒரு மலையாளி என்று சொல்லாமல் சொன்னது.//

//மலையாளிகள் என்றால் கொஞ்சம் சுயநலவாதிகள், வணிக மயமானவர்கள் என்று எனது மூளையின் நினைவுச் செல்களில் வரையப்பட்டிருந்த ஒரு பழைய வரைபடத்தை ஒரு தனிமனிதனாக, அதுவும் ஒரே ஒரு சந்திப்பில் அவர் அழித்து விட்டிருந்தார். “மொழிகளுக்கும், மனிதர்களின் செயல்பாடுகளுக்கும் துளியும் தொடர்பில்லை” என்கிற ஒரு தத்துவத்தை எந்த நூலையும் படிக்காமல் அவரது புன்னகையால் விளக்கி இருந்தார் தேவசி சார்.//

இந்தப்பதிவு என்னை பாதிக்க காரணம் நானும் பிறப்பால் ஒரு மலையாளியானாலும் வளர்ப்பால் மண்ணால் நானும் ஒரு தமிழன்தான்.  சில நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவர் தம்முடைய பதிவில் தமிழகத்தில் மலையாளிகளுடைய ஆதிக்கத்தைப்பற்றி எழுதி அவர்களை விரட்டவேண்டும் என என்னவெல்லாம் அவருக்குத்தோன்றியதோ அவற்றைப்பற்றியெல்லாம் சிலாகித்து எழுதியிருந்தார்.  அந்த நண்பருக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் முதலில் மனிதம் என்றால் என்ன என்பதற்க்கு விடையளித்துவிட்டு மற்றவர்களை விரட்டகூடிய வேலையில் நாம் இறங்குவோம். ஈழத்தில் உள்ள நம் சகோதர்களு நம்மால் என்ன செய்ய முடிந்தது என்று ஒரு முறை சிந்தித்துப்பார்த்துவிட்டு மற்றவர்களை விரட்டக்கூடிய வேலையில் நாம் இறங்குவோம். நண்பரே… நம் நாட்டில் இருந்து  விரட்டப்படவேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளார்கள் சாதி, இனம், மொழி,மதம் சார்ந்த வெறியர்களையும் சேர்த்து…

 

பின் குறிப்பு  :   கை. அறிவழகன் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் அவருடைய பதிவிலிருந்து சிலவற்றை வெட்டி என் பதிவில் ஒட்டியமைக்கு என்னை அறிவழகன் மன்னிப்பாராக.

 

Published in: on ஓகஸ்ட் 6, 2010 at 6:55 முப  Comments (2)  

கத்தியைத்தீட்டாதே…

மாலை நேரம். வண்ணாரப்பேட்டை இரயில் நிலையம் தாண்டி இரயில் வண்டி நின்றுகொண்டிருந்தது. சில  நிமிடங்களுக்குள்ளாகவே சிக்னல் கிடைத்து வண்டி புறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை பத்துநிமிடங்களுக்குமேலாகியும் இரயில் வண்டி ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து ஆவடி மற்றும் திருவள்ளூர் செல்லக்கூடிய இரயில் வண்டிகளில் பயணம் செய்து வருபவர்களை நான் கவனத்திருக்கிறேன். அவர்கள் இதுபோன்ற மாலை நேர காலதாமதத்துக்கெல்லாம் பதட்டமடைவதில்லை. ஏனென்றால் கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து வண்டி புறப்பட்ட உடனேயே இரண்டு சிக்னல்களில் வண்டி நின்றே செல்லும் என்பதும் அவசரமாக செல்ல வேண்டியிருந்தால் சென்ட்ரல் நிலையத்தை தேர்ந்தெடுத்து பயணம் மேற்க்கொள்ளவேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்றாகத்தெரிந்திருக்கிறது. ஆகவே கிடைத்த நேரத்தில் கைப்பேசியிலோ அல்லது வாயிலோ கடலைபோட்டுக்கொண்டு இன்புற்றிருப்பர். விடயம் அறியாத என்னைப்போன்ற சிலபேர் மட்டுமே இரயில் பெட்டியின் வாயிலில் நின்று எத்திநோக்கிக்கொண்டிருப்பர். மழை இலேசாக பட்டும்படாமல் பெய்துகொண்டிருந்தது. பொதுவாக நான் வெண்டார் கோச் என்றழைக்கப்படும் விற்பனையாளர்களுக்கான பெட்டியில் ஏறுவது வழக்கம்.  உண்மையைக்கூறவேண்டுமெனில் அதில்தான் நான் நிறைய சங்கதிகள் நிறைந்த மனிதர்களை பார்க்க முடியும். நான் பெட்டியில் உள்ளவர்களை நோட்டமிட்டேன்.

மூன்று நான்கு இளைஞர்கள் வாயிலுக்கு அருகேயுள்ள இடத்தில் எதிரெதிராக அமர்ந்து வாயில் குட்காவைப்போட்டு குதப்பிக்கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருவன் அடிக்கடி தலையை எத்தி இரயில் பெட்டிக்கு வெளியே துப்பிக்கொண்டிருந்தான். சென்(னை)தமிழ் அவர்களோடு விளையடிக்கொண்டிருந்தது. அருகே குழல்அப்பளம் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டடு அதனருகே பலவகையான நொறுக்கு தீனி சமாச்சாரங்கள் பொதியப்பட்டிருந்தன. உள்ளே உள்ளது எல்லாம் வெளியேத்தெரியும்படியான ஒரு பிளாஸ்டிக் பொதிவு. இதைபிரித்து பல கடைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் போலும். எடை கூடுதலாக இல்லாவிட்டாலும் அவற்றின் பொதிகள் பெரியதாக இருந்தன.  பொதிகள் சாய்ந்துவிடாமல் இருக்க அவற்றை வண்டியின் சுவரை ஒட்டி அடுக்கி அவற்றை பாதுகாத்துக்கொண்டிருந்த ஒரு நபரைப்பார்த்தேன். இளவயது முதலாளி. இந்தமாதிரி நபர்களை பார்க்கும்போது எனக்கு சில சமங்களில் பொறாமையாக இருக்கும். என்னைப்போல் ஒரு நிறுவனத்தின் உயர்தர அடிமையாய் இல்லாமல் சுயமாய் முடிவெடுத்து தொழில்செய்து அவற்றின் மூலமாக தானும் தன் குடும்பமும் முன்னேறவேண்டும் என்கின்ற இலக்கோடு செயல்படும் இவர்கள்தான் உண்மையான தொழிலதிபர்கள். ஹ்ம் என்ற பெருமூச்சுமட்டும்தான் எனக்கான அப்போதைய ஒரே ஆறுதல். எனக்கெதிரே உள்ள இருக்கையின் மூலையில்  ஒருவர் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அவர் இரயில்வேயில் பணிபுரிந்து வருவதை மற்றவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவருடைய மேல்சட்டைப்பையில் வெளியே தெரியும்படி ஏதோ ஒரு இரயில்வே தொழிற்சங்க குறியீட்டு எழுத்துகள் பதித்த அட்டையை வைத்திருந்தார். அந்த சமயத்தில் அவரை நித்திரைக்கொள்ள செய்தது அவர் அருந்திய ஏதோ ஒரு கஷாயம் என்பது மட்டும் அவர் மீது வந்த வாசத்தினால் நான் அறிந்துகொண்டேன். எனக்கெதிரே  தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்திருதார் ஒருவர். அவருக்கருகே சுழலும் சைக்கிள் ரிம்மில் ஒரு நாடா இணைப்பின் மூலமாக இணைக்கப்பட்டு இயங்கும் சாணைபிடிக்கும் ஒரு கருவி.  நிச்சமாக அவருடையதாக்கதான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். வண்டி இப்போது நகரத்தொடங்கியது.

வண்டி நகரத்துவங்கியதும் இரயில்வே ஊழியர் விழித்துக்கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு தாம் இன்னமும் பயணத்தில்தான் உள்ளோம் என்பதை உறுதிசெய்துகொண்டார். பின் மெதுவாக எழுந்து தன் கைப்யையை எடுத்துக்கொண்டு பெட்டியின் வாயிலுக்கு வந்து நின்றார். அதே சமத்தில் சாணைபிடிப்பவரும் எழுந்து தன் கருவியை இறக்குவதற்க்கு வசதியாக வாயிலுக்கு அருகே கொண்டு நிறுத்தினார். இ.ஊ வெளியே பார்த்துவிட்டு சலிப்புடன் ‘சே சனியம்பிடிச்ச மழ.. நேர காலந்தெரியாம பெய்யுது..’ என்று சலித்துக்கொண்டார். அதற்க்கு அவருக்கு எதிரே நின்று கொண்டிருந்த சாணைப்பிடிப்பவர் ‘ஐயா.. மழ பெய்ஞ்சாலும் திட்டுறீங்க.. வெயில காய்ஞ்சாலும் திட்டுறீங்க.. மழ பெய்யுதுன்னு வீட்டிலேயே முடங்கி கெடக்க முடியுமா.. இல்ல வெயில் நல்லாக்காயுதுன்னு வீட்டுக்கே போகாம இருந்துர முடியுமா.. மழயோ வெயிலோ எதுவும் நம்ம கயில இல்ல..  எல்லாம் இயற்க.. எது எப்படி இருந்தாலும் தொழில் செய்யறவனுக்கு மழயும் வெயுலும் ஒண்ணுதான்.. ’ அதற்க்குள்  இ.ஊ இடைமறித்து ‘அப்பா உன் வியாக்கியானத்த நா கேக்கல.. நீ ஒழுங்கா போய் கத்திய தீட்டுற வேலயப்பாரு..’ என்றார். ‘ஐயா நா போய் கத்திய தீட்டறேன்.. நீங்க போய் உங்க புத்திய தீட்டுங்க’ என்று சொல்லிவிட்டு  வியாசர்பாடி நிலையத்தில் நிற்பதற்க்காக ஊர்ந்த இரயில் இருந்து  தன் சாணைபிடிக்கும் கருவியை எடுத்துக்கொண்டு சட்டென இறங்கிக்கொண்டார்.  நான் சன்னல் வழியக எத்தி பார்த்தேன். தூரத்தில் மழையில் நனைந்தபடி சாணைபிடிக்கும் கருவியை தனது தோளில் சுமந்துகொண்டு அவர் நடந்து செல்வது எனக்கு நன்றாகத்தெரிந்தது.  

 

Published in: on ஜூலை 20, 2010 at 1:27 பிப  Comments (2)  

பறவை ஜாதி…

இன்று காலை பெரம்பூர் இரயிலடியிலிருந்து பீச்ஸ்டேஷனை வந்தடைந்தேன். அடுத்து வேளச்சேரி இரயிலுக்கான காத்திருப்பு. வண்டி வர தாமதமாகும் என்று என் உள்மனது சொல்லியதால் ஒரு கப் சூப்வாங்கிக்கொண்டு பிளாட்பாரக்கூரையை தாங்கி பிடித்துக்கொண்டிருந்த ஒரு பில்லரின் தாழ்வாராத்தில் அமர்ந்தேன். வேளச்சேரி இரயில் என்பதால் பிளாட்பாரம் முழுவதும் ஒரே ஐடி பர்சனாலிட்டீஸ்தான். கப்பிலிருந்து எப்படியாவது கடைசி சொட்டு சூப்பையும் எடுத்து ருசித்து(நக்கி)விடவேண்டும் என்ற ஆவலின் காரணமாக அருகில் இருந்த நாய் என்னை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டிருந்தபோதும் (நான் சொன்னது நிஜமான நாய்தாங்க…) நான் அதைபொருட்படுத்தாது கப்பை என் உதடுகளுக்கு நேராக கொண்டு சென்றுகொண்டிருந்தபோது அந்த சத்தம் கேட்டது. மழைக்காலங்களில் தெருமுனையில் உள்ள டிராஸ்பார்மர் வெடிக்கும்போது கேட்க்குமே அந்த சத்தம்.  சட்டென திரும்பிப்பார்த்தேன். நான் எந்த இரயில் வண்டியிலிருந்து வந்திறங்கினேனோ அந்த வண்டியின் இரண்டாவது பெட்டியின் கூரைமேல் அமைந்த மின்சார கம்பியிலிருந்துதான் அந்த சத்தம் கேட்டது. பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைவரது கவனமும் இப்போது சத்தம் வந்த திசையில். பெட்டியின் கூரைமேலிருந்து புகைந்த நிலையில் கருகிய ஏதோ ஒன்று பொத்தென பெட்டியின் அருகே நடைபாதையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு கூட்டமாய் நானும் ஆர்வமாய் அருகில் சென்று பார்த்தேன். அது ஒரு காகம்.

காகம் என்று தெரிந்த உடன் என்னுடைய சுற்றங்கள் சுவாரிசியமற்றவர்களாய் டைம்ஸ் ஆப் இந்தியாவை தொடர்ந்து படிப்பதற்க்கும் (ரூபாய்க்கு ஏதோ ஸிம்பல் வச்சுட்டாங்களாமாமே? நிசமாவா..) மற்றும் மீதிவைத்திருந்த காபியை மிச்சம் வைக்காமல் குடிப்பதற்க்கும் மற்றவர்கள் அருகில் உள்ள சகதோழிகளுடன் கடலை போடுவதற்க்கும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர். இப்போது நான் மற்றும் செத்துப்போன காகம் இருவர் மட்டும். தகுதிக்கு மீறிய சாவு. எவ்வளவு வோல்டேஜ் பாய்ந்தது என்று தெரிய வில்லை. கருமையே கருத்திருந்தது. என்னை தாண்டிச்சென்ற பலபேர் காகத்தைவிட என்னை அதி வினோதமாகப்பார்த்தார்கள். அப்போது அது நடந்தது. 

மழைவானத்திலே கருமேகங்கள் கூட்டமாக திரள்வதுபோல் திடீரென காக்கைகள் கூட்டம் வானத்தில் வட்டமிட்டு பீச்ஸ்டேஷனுடைய பிளாட்பாரங்களை இணைக்கக்கூடிய இரயில் மேம்பால நடைமேடையின் விளிம்பில் இரைச்சலுடன் வந்தமர்ந்தன.  கா கா கா என்று ஒரே சத்தம். மேலும் காக்கை கூட்டங்கள் வரத்துவங்கியிருந்தன.   கா கா கா என்ற ஒலி எங்கும் வியாபித்திருந்தது. அவைகளினுடைய சப்தத்தை யாரும பொருட்படுத்தவில்லை என்றாலும் கூட அவைகள் தொடர்ந்து சப்தமிட்டபடியே இருந்தன. நான் அவைகளை பார்த்தேன். பதட்டம் நிரம்பியக்கூக்குரல். அபயக்குரல் என்பார்களே அது இது தானோ? காக்கை இறந்துவிட்டது என்பது அவைகளுக்குத்தெருயும் என்றாலும் கூட செத்துப்போன அந்த காக்கைக்கு இவ்வளவு சொந்தங்கள் இருக்குமா என்று எனக்குள் வினவிக்கொண்டேன்.

எனக்குப்பின்னால் போலீஸ் சீருடையில் இருந்த ஒரு போலீஸ்காரர் என்னைப்பார்த்து ‘என்ன தம்பி அந்த செத்துப்போன காக்காய அப்படி பாக்குறீங்க’ என்றார். ‘இல்ல சார்.. காக்கா வந்து..பாவம்..’ என்று நான் இழுத்துக்கொண்டிருந்தபோதே அவர் தொடர்ந்தார் ‘அட நீங்க வேற தம்பி.. மனுஷனே இந்தக்கம்பில் அடிப்பட்டு இதே இடத்தில் விழுந்திருக்கான்..’ என்றார்.  ‘அதுக்கில்ல சார்.. அங்க பாருங்க.. ஒரே காக்கா கூட்டம்.. பாவம் என்னம்மா பீல் பண்ணுதுங்க..’ என்றேன்.  ‘தம்பி நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க.. நான் சொன்ன மாதிரி மனுஷனே இங்க அடிப்பட்டு விழுந்து கிடந்தாலும் அவன ஒரு பய வந்து தூக்கமாட்டான்.. சும்மா ஒரு இச்சோட அவனவன் வேலயப்பாக்க கிளம்பிடுவான்.. நீங்க வேளச்சேரிதானே போகணும்.. அதோ பாருங்க உங்க ட்ரெயின் வந்துடுச்சி’ என்றார்.  நம்மவர் கூட்டம் வண்டியை ஆக்கிரமித்துக்கொண்டது.  நான் மெல்ல நடந்து சென்று ஒரு பெட்டியின் வாயிலில் ஏறி நின்றுகொண்டேன்.

நான் காகங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். மனிதர்கள் கூட தன் சொந்தங்களைத்தவிர  மற்ற பொதுவான இறப்புகளுக்கு இப்படி உணர்வுபூர்வமாக கூடுவதில்லை என்பதே உண்மை. காக்கையைப்பொறுத்தவரை இப்படி கூடுவதென்பது இறப்புக்கு மட்டுமல்லாமல் இரைப்பைக்கும் கூட கூடுவது கண்கூடு. மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த இனமான உணர்வு வரமாட்டேன் என்கின்றது?  போலீஸ்காரர் சொன்னதுபோல் காலத்தை கருததில் கொண்டாலும்கூட அந்த காலத்திலேயே பராசக்தி படத்தில் வந்த பாடலில் உடுமலைநாரயணகவி அவர்களின் பாடல் வரிகளில்..

சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா

எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க

பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க

கா..கா..கா..

இரயில் நகரத்துடங்கியது. செத்துப்போன காக்கா இப்போது என்னை விட்டு பின்னோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் காக்கைக்கூட்டத்தின் சத்தம் மட்டும இன்னும் என் காதுகளைவிட்டு அகலவில்லை.

Published in: on ஜூலை 16, 2010 at 1:06 பிப  Comments (4)  

பொழப்பு…

Vodpod videos no longer available.

பொழப்பு…, posted with vodpod

 

Published in: on ஜூலை 12, 2010 at 4:58 முப  Comments (4)  

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்…

தினத்தந்தி செய்தி :  சென்னை சூலை 10 : உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.  மாநாட்டின் நிறைவுநாளில் முதல் அமைச்சர் கருணாநிதி பேசும்போது தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்பது அந்த அறிவிப்புகளில் முக்கியமானது ஆகும். இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானத்தை செயல்படுத்தும் வகையில் தொடக்க கல்வி முதல் தமிழில் படிததவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. சென்னை சாந்தோம் மாவட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக பரிந்துக்கப்பட்டவர்களில் தொடக்க கல்வி முதல் தமிழிலேயே படித்த பொ. பேதுரு என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணியிடத்தில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிநியமன ஆணையை முதல் அமைச்சர் கருணாநிதி நேற்று வழங்கி வாழ்த்து கூறினார்.

—————————————————————————————————————————-

வாசலில் வந்து நின்ற மாடசாமியை ‘என்ன மாடசாமி இவ்வளவு காலையிலேயே…’ என்றேன்.  ஐயா இந்த ஊரு பள்ளிக்கூடத்துக்கு ஐயாதான் எல்லாமேன்னு ஊருக்கே தெரியும்.  எங்க ஊரு புள்ளங்க மாடு மேய்க்கும்போது அதுங்கள  கூட்டிக்கிட்டு போய் பள்ளிக்கூடத்தில உக்காரவச்சி படிப்பு சொல்லி குடுத்து அதுங்க மேல வரணம்னு ஆசப்பட்டதும நீங்கதான்…’ ‘சரி அதுக்கென்ன இப்போ..’ என்றேன் இடைமறித்து. ‘மோசம் பண்ணிட்டிங்களே சாமி. கவருமெண்டு ஒண்ணாவதுல இருந்து தமிழுலயே மட்டும்  படிக்கறவங்களுக்கு முதல்ல வேல தருதாமே.. நீங்க எங்க ஊட்டு புள்ளிங்களுக்கு இங்கலீசும் சேத்து சொல்லித்தரதா நா கேள்விப்பட்டேன். சாமி என்னய மன்னிச்சுங்க.. நாளைக்கு எம்புள்ளங்க நல்லா இருக்கணும்னா நீங்க உங்க பாடத்த எல்லாத்தயும் தமிழிலேயே சொல்லிக்கொடுங்க. இங்கிலீசக்கூட தமிழிலேயே சொல்லிக்கொடுங்க.. கணக்கக்கூட இனிமே 1 2 3 4 5ன்னு சொல்லிக்கொடுக்காம   க உ ௩ ௪ ௫ ன்னு சொல்லிக்கொடுங்க. அப்பதான் எம்புள்ளங்க அரசாங்கத்திலே வேல செய்யமுடியும் சாமி. சாமி.. சாமி..  என்ன சாமி சாய்ஞ்சுட்டீங்க…

Published in: on ஜூலை 10, 2010 at 5:54 முப  Comments (2)  

அர்த்தமுள்ள விளம்பரம்…

வாகனம் ஓட்டும்போது மொபைல்போனை பயன்படுத்தினால் விளைவு என்ன என்பதை அற்புதமாக விளக்கும் ஒரு அர்த்தமுள்ள விளம்பரம் உங்களின் பார்வைக்கு…

Published in: on மே 11, 2010 at 7:20 முப  Comments (8)  

கலாவதியும்.. காலாவதியும்…

செய்தி   :  சென்னையில் கு‌ப்பைக‌ளி‌ல் இரு‌ந்து பொறு‌க்க‌ப்படு‌ம் காலாவதியான மருந்து ம‌ற்று‌ம் மாத்திரைகளை, பு‌திதுபோ‌ல் மா‌ற்‌றி விற்பனை செய்த போலி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சென்னை கொடுங்கையூரில் மாநகராட்சி குப்பை கொட்டும் தளம் உள்ளது. காலாவதியான மருந்து மாத்திரைகளை இங்கு கொண்டு வந்து கொட்டுவார்கள். இதை ஒரு கும்பல் ஆ‌ட்களை வை‌த்து‌ப் பொறு‌க்‌கி வ‌ந்து அத‌ன் லே‌பி‌ள்களை மா‌ற்‌றி புதிய மருந்து மாத்திரைகள் போல் விற்பனை செய்துள்ளது. இதுபோன்ற காலாவதியான மருந்து, மாத்திரைகள் செ‌ன்னை ம‌ட்டு‌ம‌ல்லாம‌ல் தமிழகம் முழுவதும் விற்கப்பட்டு வ‌ந்து‌ள்ளது. ம‌க்க‌ளி‌ன் உ‌யிரோடு ‌விளையாடி‌க் கொ‌ண்டிரு‌ந்த இ‌ந்த மோசடி சுமா‌ர் நா‌ன்கை‌ந்து ஆ‌ண்டுகளாக நட‌ந்து வருவது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————-

மேற்க்கண்ட செய்தியை படித்தவுடன் எனக்கு கலாவதியின் ஞாபகம்தான் வந்தது.  கலாவதி எங்களுடன் படித்தவள்(ர்).  தற்போது மருத்துவராக உள்ளாள் (உள்ளான்னு எழுதும்போது உள்ளாள்ன்னு எழுதலாம் இல்லயா..).  எங்களூரிலேயே அரசு மருத்துவமனையில் மருத்துவராக சேவை செய்கிறாள். கலாவதி அன்பானவள். தன்னலம் கருதாதவள். தெய்வபக்தி மிகுந்தவள். கோவிலில் நான் அவளை அடிக்கடி பார்ப்பதுண்டு. அப்படி பார்த்த ஒரு சந்தர்பத்தில்…..

 என்னைப்பார்த்த உடனே மெல்லிய  புன்னகையோடு ‘எப்படி இருக்கீங்க’ என்று நலம் விசாரித்தாள்.  ‘நல்லாயிருக்கேன்’ என்றேன். சிறிது நேர குடும்ப குசலங்களுக்குப்பிறகு பேச்சு அவரவர் செய்யும் தொழில் பற்றிய திசையில் சென்றது.  ‘டாக்டராயிட்டு நல்லா செட்டிலாயிட்டிங்க’ என நான் ஆரம்பித்தேன். ‘அட போப்பா..’என்றாள் சலிப்போடு. ‘என்ன’ என்றேன். ‘விரும்பித்தான் நா டாக்டருக்கு படிச்சேன்.. ஜனங்களுக்கு சேவை செய்யணம்னு ஆசை.. எங்கப்பா நிலத்த வித்துத்தான் என்ன படிக்க வச்சாரு.. நானும் படிச்சி முடிச்ச உடனே கஷ்டப்பட்டு அரசாங்க வேலையில சேர்ந்தேன்..  நம்ம ஜனங்களுக்கு சேவை செய்யணும்னு விருப்பட்டுதான் நான் நம்ம ஊருக்கே மாற்றலாகி வந்தேன்..ஆனா இப்ப எல்லாம் மாறிப்போச்சசு..’ என்றாள் விரக்தியோடு.   ‘என்ன ஆச்சு’ என்றேன். ‘சொல்கிறேன்’ என சொல்லத்துவங்கினாள்.

 ‘ரெண்டு மாசத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது. பெரியவர் ஒருத்தர் வயித்துவலின்னு என்கிட்ட வந்தார்.. நானும் அவரை செக் செய்து அவருக்கு சாதாரண வயிற்று வலிதான்னு  கண்டுபிடிச்சு மருந்து எழுதிகொடுத்தேன்.  சில நாள்  கழிச்சு அதே பேஷண்ட் திரும்பவும் வயிற்று வலின்னு என் கிட்ட வந்தார். மீண்டும் அவரை நான் செக் செய்தேன். நான் கொடுத்த மருந்தை சரியாக சாப்பிட்டீர்களான்னு நா கேட்டப்ப சரியாத்தான் சாப்பிட்டேன்னு சொன்னார் . இந்தமுறை அவருடைய ரிப்போட் மோசமாக இருந்தது. அதாவது போனமுறை சாதாரண வயிற்று வலின்னு வந்தவர் இந்தமுறை கொஞ்சம் சீரியஸான சிம்டம்ஸோட இருந்தார்.  பேஷன்டினுடைய அப்டாமன் உள்ள ரணமாக இருந்தது.  மருந்தெல்லாம் கரக்டா சாப்பிட்ட பின்னாடியும் இது  எப்படி என யோசனை செஞ்சிகிட்டே அவருடைய மருந்து பட்டியைக்கேட்டேன்.  நல்லவேளையாக கொண்டு வந்திருந்தார்.  பட்டியைப்பார்த்த உடனே எனக்கு ஒரு யோசனை தோணிச்சு.  நான் திரும்பவும் அதே மருந்தை என்னுடைய சீட்டில் எழுதி வேறு ஒருவரை அனுப்பி அதே மெடிக்கல் ஷாப்பிலருந்து வாங்கிவரச்சொன்னேன். மருந்து வந்தது.  நான் நினைச்சது சரிதான்.  காலாவதியான மருந்தை கொடுத்திருகாங்க பாவிங்க.   இதைத்தான் பேஷன்ட் சாப்பிட்டு அவருடைய வயிறு ரணமாகியிருக்குது. நான் நேராக பேஷண்டை கூட்டிக்கிட்டு அந்த மருந்து கடைக்கு போனேன். அது ஒரு உள்ளூர் அரசியல் புள்ளியின் கடைன்னு அவர்களுடைய பேச்சிலேயே தெரிஞ்சது.  ‘மருந்து எழுதிக்கொடுக்கறதோட உன்வேலை முடிஞ்சுடுச்சு.. சும்மா இங்க வந்து சவுண்ட் உடகூடாது’ என அவங்க பாஷையிலேயே பேசினாங்க.  நானும் விடாம ‘மனசாட்சின்னு ஒண்ணு உங்ளுக்கு கிடையாதா?  இத சாப்பிட்டு இந்த பெரியவர் செத்துப்போயிருந்தா என்ன ஆகியிருக்கும்’ என சத்தம் போட்டேன்.  செத்தா நாங்க பாத்துக்கறம்.. இப்ப நீ கிளம்பு என பதில் வந்தது.  பளார்ன்னு விட்டேன் ஒரு அறை.

‘அப்புறம்’ என்றேன் சற்று ஆவலாக…

‘அப்புறமா.. நா அவன அடிச்சுட்டேன்னு கேஸ் கொடுத்துட்டான்.. நா எந்த பேஷண்டுக்காக வாதாடப்போனேனோ அந்த பேஷன்டே அந்த மருந்துகடையில நான் மருந்து வாங்கலன்னு கோர்ட்டுல சொல்லிட்டான்.. மருந்துகடைக்காரன் எனக்கு மாமூல் தராததாலேதான் நா அவன அடைச்சேன்னும்.. அரசு மருத்துவர் என்ற காரணத்திற்க்காக என்ன ஜெயில்ல போடாம ஆறு மாத சஸ்பேன்ஷன் மட்டும் என  தீர்ப்பும் சொல்லிட்டாங்க..’ என்றாள் கண்கள் கலங்க. 

 

Published in: on மார்ச் 27, 2010 at 10:05 முப  Comments (6)  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...