பொட்டு

 

நெற்றியில் இடப்படும் திலகத்தை பொட்டு என்று கூறுவர் (எப்பேர்பட்ட கண்டுபிடிப்பு). அழகுக்கும், நாகரிகத்திற்கும் தக்கபடி நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். பொட்டு வைத்துக்கொள்வதென்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. பல வகையான வண்ணங்களில் பல வகையான வடிவங்களில் நெற்றிப்பொட்டுகளை வைத்துக்கொள்கிறார்கள். வெவ்வேறான நெற்றி அமைப்பை உடையவர்கள் எவ்வாறான பொட்டுக்களை தேர்ந்தெடுக்கலாம் என கூறுகிறோம். 

  • விசாலமான நெற்றியைக் கொண்ட பெண்கள் பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறந்தது போல் அழகாகத் தெரியும். 
  •  நெற்றி அகலம் குறைந்தவர்கள் இரண்டு புருவங்களுக்கு இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாக தெரியும். 
  •  சதுர வடிவிலான முக அமைப்பு கொண்டவர்கள் சற்றுப் பெரிய வட்ட வடிவிலான பொட்டு வைக்க வேண்டும். 
  •  வட்ட வடிவிலான முக அமைப்பைக் கொண்டவர்கள் சிறிய,பெரிய, முக்கோணம், வளைவு வடிவம் போன்ற பொட்டுக்களை வைக்கலாம். 

—————————————————————————————————————————-

பின் குறிப்பு :  ஜீன்ஸ், டாப்ஸ், ஸ்கர்ட், மிடி போன்றவற்றை அணியும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதும் தனி அழகுதான்.  என்ன நான் சொல்றது சரிதானே…

Published in: on ஜூலை 10, 2010 at 10:52 முப  Comments (3)  

அழகு…

உங்களுடைய அழகைப்பற்றி மறந்துகூட பிறருடைய அபிப்பிராயத்தை குறிப்பாக பெண்களின் கருத்தை வாய்விட்டு கேட்காதீர்கள். அந்த வினாவுக்கு கிடைக்கக்கூடிய பதில் சில சமயம் உங்கள் மனதை பலவீனப்படுத்திவிடக்கூடும். பலவீனமான மனம் அழகை நிலைகுலையச்செய்துவிடும்.

 பெண்களின் உடல் உறுப்புக்களை அவரவர் உடல்வாகுக்கு ஏற்றவாறு கடவுள் அமைத்திருக்கிறார்.  அகன்ற கண்கள் சில பெண்களுக்குத்தான் அழகாக இருக்கும்… குறுகிய உள்ளடங்கிய குறுகிய கண்கள்தான் சிலருக்கு அழகு சேர்க்கும். சிலருக்கு எடுப்பான நாசியும் சிலருக்கு அடங்கிய மூக்கும் அழகின் சின்னங்களாக அமையக்கூடும்.  உயரமான சில பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் குள்ளமான பெண்களில் கட்டழகி கிடையாதா.. உங்களுக்கு அமைந்திருக்கும் உடல்வாகு உண்மையில் உங்களுக்கு அழகினைத்தான் உண்டாக்குகிறது என்ற உண்மையை உணருங்கள்.

 கவர்ச்சியான உடல் தோற்றம் அழகின் ஓர் அம்சம் என்பது சரி.  அப்படிப்பட்ட உடல் கவர்ச்சி உங்களிடம் இல்லையே என்பதாலேயே நீங்கள் அழகியல்ல என்ற முடிவுக்கு வரவேண்டாம்.  இனிய குரல் அழகின் ஓர் அம்சம். உங்கள் குரல் அழகே பிறரை கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றிருக்கும். உங்களிடம் குரல் வளம் அமைந்திருந்தால் அதை செம்மைப்படுத்த முயலுங்கள். முறையான இசைப்பயிற்ச்சியினால் உங்கள் குரல் பல்லாயிரக்கணக்கான மக்களை மயக்கச்செய்துவிடும். 

 பகட்டான மேனியழகு இல்லாத பல பெண்களுக்கு கட்டான உடல் அமைந்திருக்கும். இந்த உடற்க்கட்டும் ஓர் அழகு என அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்கள் உடற்க்கட்டை காப்பாற்றி வைத்திருப்பதே ஒரு சிறப்புத்தான்.

 உங்களின் நிறம் சிவப்பாக இருப்பது மட்டுமே அழகு என எண்ணவேண்டாம். கறுப்பான உடல் நிறத்துக்கும் ஒருவித கவர்ச்சி உண்டு. கருப்பு நிறம் என்பதற்க்காக எந்த பெண்ணும் கலக்கமடையத்தேவையில்லை.

 புற அழகு ஏதுமில்லாத சில பெண்களின் அக அழகு அந்த குறைபாட்டை போக்கிவிடும். நல்ல குணம்,  இனிய உரையாடல், உயர்ந்த பண்பு, பிறருக்கு உதவும் சுபாவம், விருந்தோம்பல் ஆகிய இந்த அக அழகிற்க்கு புற அழகு சமானமே ஆகாது. புற அழகைவிட அக அழகே உயந்து நிற்க்கும்.

 

பின் குறிப்பு :  சத்தியமாக இந்த பதிவு பெண்களின் நலனுக்காகவே. நீங்கள் நினைப்பது மாதிரி  மேலே உள்ள  அம்மணியின் புகைப்படத்தை என் வலைப்பூவில் இடுவதற்க்காக  எழுதப்பட்டவை அல்ல.  (அப்பாடா.. எப்படியோ சமாளிச்சுட்டேன்…)

 

Published in: on மே 12, 2010 at 4:25 முப  Comments (6)  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...