காசி.. ஒரு அனுபவம்… 2

படித்துறையில் இறங்கினோம். படித்துறையே பரவி நீண்டு பனி புகையினுள் எல்லையில்லாமல் எங்கோ சென்றுகொண்டிருந்தது. கதிரவன் மெல்ல சோம்பல்முறித்துக்கொண்டிருக்க இக்கரையில் இருந்து அக்கரைக்கு படகில் செல்ல ஆயத்தமானோம். அக்கரையில்தான் நன்னீர் உளது..  அங்கு குளித்து பாவவிமோசனமடையலாம்(?) என நண்பன் கூறவும் ஆறு  மாதங்களுக்கு முன்னர்தான் இராமேஸ்வரம் சமுத்திரத்தில் என் பாவங்களை களைந்துவிட்டமையால் மிகுதியுள்ள  ஒரு ஆறு மாத பாவங்களை கங்கையில் களைய புறப்பட்டேன். படகோட்டி (சரிதானே?..) இந்தியில் நண்பனுடன் கதைத்துக்கொண்டிருக்க நானோ காசியின் படித்துறை அழகை என் கண்களால் பருகிக்கொண்டிருந்தேன். கங்கையின் வெள்ளப்பெருக்கின்போது இந்த படித்துறைகளின் கீழுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுவிடும் எனவும் அதனாலேயே இங்குள்ள படித்துறைகள் உயரமாக எழுப்பபட்டுள்ளன எனவும் அறிந்துகொண்டேன். படித்துறையை ஒட்டி அழ(ழுக்)கான பல வண்ண கட்டிடங்கள். ஒவ்வொரு படித்துறையும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. படகோட்டி நண்பன் ஒவ்வொரு படித்துறை பகுதிகளின் அருகாமையில் படகினை செலுத்தி அதன் தலவரலாறுகளை விளக்க நான் விளங்கிக்கொண்டேன்(?). ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சிறப்பினைப்பெற்றதாய் இருந்தது. கங்ககைக்கு நிதமும் கங்கா ஆர்த்தி செய்யும் இடம்  வண்ணமயமாய் காட்சியளித்தது (இங்குதான் நான் சொன்ன குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாம்…) அரிச்சந்திரா கட் மற்றும் முருகன் கோவில் இருந்த படித்துறையும் அருகில் சென்று பார்த்தோம். கங்கையின் மடியில் அடி சாய்ந்திருந்த ஒரு ஆலயத்தினையும் கண்டோம். அழகாய் இருந்தது பைசா சாய் கோபுரத்தினைப்போல.

அடுத்து மயான காண்டம். காசிக்கு நான் வந்த நோக்கமே இந்த மாயானத்தை தரிக்கத்தான் என்றால் மிகையாகாது (நன்றி : நான் கடவுள்). ஆடி அடங்கிய வாழ்க்கையின் எச்சங்கள் ஆங்காங்கே ஆவியாகிக்கொண்டிருந்தது. அதிலும ஒரு அழகு. எரியூட்டத்தேவைப்படும் விறகுள் விற்பனைக்கு அங்குள்ள படகுகளில் அழகாய் அடுக்கிவைக்கப்பட்டு மிதந்துகொண்டிருந்தன. அக்கணப்பொழுதில் எரியும் தீக்கங்குகளில் குறைந்தது நான்கந்துபேர் மோட்சம் அடைந்துகொண்டிருந்தார்கள். பின்னர்தான் தெரிந்தது நான் கண்டுகொண்டிருப்பது கீழ்தளமென்று. மேல்தளத்தில் இன்னும் பல பேர் தீக்குள் உறங்கிக்கொண்டிருப்பார்கள் எனவும் இன்றும் பல பேர் வரிசைகிராமமாய் தீக்குள் இறங்க ஆயத்தமாய் இருப்பார்கள் எனவும் அறிந்துகொண்டேன். நேரமிருப்பின் அருகில் சென்று காணலாம் என முடிவுசெய்தேன். சிலர் இங்கு வந்து மோட்சமமைய காத்துகொண்டிருக்கிறார்கள் என்று என் நண்பன் சொன்னபோது காலையில் நான் படித்துறையில் கால்வைக்கும்போது நிறைய வயோதிகர்கள் படித்துறையில் உறங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. உடல் பொருள் இங்கே ஆவியாகிக்கொண்டிருந்தது. படகிலிருந்தபடியே கண்மூடி ஒரு நிமிடம் வாழ்க்கையின் உச்சத்தினை காணநினைத்தபோது என் மனைவியின் உருவம் என் கண்முன்னே வந்ததால் தியானத்தை கலைத்துவிட்டு கங்கையின் மறுபுறம் நோக்கினேன்.

படகு மெல்ல அக்கரையை அடைந்தது. படகைவிட்டு இறங்கினோம். பள்ளிக்குக்போகாச்சிறுவர்கள்  சிலர் அழகிய சாவிக்கோர்ப்பான்களை (எப்படி..) விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவற்றைவாங்குவதில் நாட்டமில்லாததால் நான் கங்கையில் நீராட ஆயத்தமானேன். நீராடுவதற்க்கென்றே அமைக்கப்பட்ட தடுப்பின் எல்லையைத்தாண்டாமல் அதற்க்கே உரிய இடத்தில் நின்று வான் தொழுது கங்கையில் மூழ்கினேன். குளிர்ந்த நீர் உடலில்பட்டு உடல் சிலிர்த்து எழுந்தேன். இமயமலையிலிருந்து இப்போதுதான் வந்ததோ என்று நினைக்கவைக்கும் பனிநீர். பேருவகையாய்  கங்கையில் இறங்கும் ஆவலுடன் கரையில் வீற்றிருந்த என் நண்பர்களை பார்த்து மனதிற்க்குள் சிரித்துக்கொண்டேன்.

வருவேன்…

Published in: on ஜனவரி 20, 2011 at 11:46 முப  Comments (7)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2011/01/20/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e2%80%a6-2/trackback/

RSS feed for comments on this post.

7 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. //படகிலிருந்தபடியே கண்மூடி ஒரு நிமிடம் வாழ்க்கையின் உச்சத்தினை காணநினைத்தபோது என் மனைவியின் உருவம் என் கண்முன்னே வந்ததால் தியானத்தை கலைத்துவிட்டு கங்கையின் மறுபுறம் நோக்கினேன்.//

    இப்படிதான் நான் கண்மூடி வாழ்க்கையின் உச்சத்தினை காணநினைத்தால் நமீதா உருவம் வந்து விடுகிறது ….
    இல்லை என்றால் நான் கடவுள் ஆகி இருப்பேன்…..ம் ….எல்லாம் உங்கள் நல்ல காலம் …என் கஷ்ட காலம் :)

    • தம்பி உன் வயசுக்கு நமீதா வர்ராங்க… கொடுத்துவச்சவன்… இத சொல்லி என்னை வெறுப்பேத்தறதுல ஒரு இன்பம் உனக்கு.. இரு மகனே.. அடுத்த முற காசிக்கு போகும்போது உன்னையும் கூட்டிக்கிட்டு போறேன்.. அப்ப பாக்கலாம் நமீதா வர்ராங்களான்னு…

  2. வழக்கம் போல அருமையான பதிவு சார்

    • நன்றி ஆறுமுகம். அடிக்கடி வாங்க…

  3. அருமையான பதிவு. இருமுறை காசி சென்று வந்துள்ளேன். செட்டியார் சத்திரம் அங்கு போய் கிடைத்ததா? இல்லை முன்பதிவு அவசியமா?

    • அமுதாகிருஷ்ணா அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி. கூட்டமாக அதாவது சுற்றுலா போல சென்றால் முன்பதிவு அவசியம் என்று நினைக்கிறேன். எதற்க்கும் செட்டியார் சத்திரத்தின் தொலைபேசி எண்ணைத்தருகிறேன். அது தங்களுக்கு மிக உதவியாக இருக்கும். தொலைபேசி எண் 05422 451804.

  4. ஃபோன் நம்பர் தந்தமைக்கு நன்றி ..


பின்னூட்டமொன்றை இடுக

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...