பழங்கள் – பயன்கள்

Published in: on திசெம்பர் 29, 2019 at 2:27 பிப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

உன் கண் உன்னை……

0000da7f_medium

படத்தை கிளிக்கி ரயில் நகரும் திசையை சற்று நேரம் உற்று நோக்குங்கள். இப்போது ரயில் வந்து கொண்டிருக்கிறதா அல்லது போய்கொண்டிருக்கிறதா?

உங்கள் கண் உங்களை ஏமாற்றினால்…

Published in: on செப்ரெம்பர் 20, 2013 at 8:10 முப  Comments (1)  

வல்லவனுக்கு…

Published in: on மார்ச் 22, 2011 at 5:13 முப  Comments (4)  

தடாக மலையும்… தாடகை மலையும்…

கிரகம் சுத்திச்சுத்தியடிக்கும் என்பார்கள். எனக்கும் அப்படித்தான் நடந்தது. புத்தக கண்காட்சிக்கு செல்ல ஆசை. ஆனால் அதற்க்கு  ஒதுக்கப்பட்ட நேரம் ஒரு மணிநேரமென்றால் நீங்களாய் இருந்தால் ஒத்துக்கொள்வீர்களா. ஆனால் நான் ஒத்துக்கொண்டேன். சகதர்மினியோடு (தமிழ் சரிதானே?..) ஒரு ஷாப்பிங் போகவேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது ‘அப்படியே புக் ஃபேர் போயிட்டு வரலாமா?.’ என்றேன்.  ‘முதல் ஷாப்பிங் போவோம்.. அப்புறம் டைம் இருந்திச்சுன்னா போகலாம்’ என்றாள். ‘இல்ல நாளையோடு புக் ஃபேர் முடியுதாம்.. அதனால ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்.. ’ என்ற என் ஆதங்கத்தை புரிந்தவளாய்.. ‘சரி.. சரி.. ஒரு ஒரு மணி நேரம்னா நானும் வரேன்..’ என்றவளிடம் பதிலேதும் பேசாமல் புறப்பட்டேன். வாங்கியதென்னவோ இரு பொருள்கள் என்றாலும் அதற்க்கே ஒரு மணிநேரமானது. பின் விரைவாக புக் ஃபேர் விரைந்தோம். வண்டியில் அமர்ந்தபடியே புக் ஃபேருக்கான ஒரு திட்டம் வகுத்தேன். நேராக உயிர்மை ஸ்டால்.. அப்புறம் கிழக்கு.. அப்புறம் ஆண்டவன் விட்ட வழி என முடிவுசெய்தேன். என் சகதர்மினியின் (மீண்டும் கேட்கிறேன் என் தமிழ் சரிதானே?…) இலக்கிய ஆர்வத்தினை தூண்டும் விதமாக ‘நீ எந்த மாதிரியான புத்தகங்களை வாங்க விரும்புவாய்? என்றேன் அன்பாக. ‘அது கிடக்கட்டும்..  போனமோ வந்தமோன்னு இருக்கணும்… வீட்டுல சின்னவ அழ ஆரம்பிச்சுட்டா அவ்வளவுதான்..’ என்று என் இலக்கிய ஆர்வத்தில் கல்லெறிந்தாள். புத்தகத்திருவிழா நடக்கும் அரங்க வாயிலை அடைந்தோம்.  பொங்கல் விடுமுறையாதலால் நல்ல கூட்டம். வண்டியை நிறுத்திவிட்டு நுழைவுச்சீட்டு வாங்கி அரங்கினுள் நுழைந்தோம்.

திக்குத்தெரியாமல் நின்றுகொண்டிருந்த எங்களுக்கு ஒருவர் உதவினார்.  ‘என்ன புத்தகம் வாங்க போறீங்க’ என்றவளுக்கு ‘இன்னும் முடிவு செய்யல’ என்றபடி அவளையும் இழுத்துக்கொண்டு உயிர்மையைநோக்கி ஓடினேன். உள் நுழைய முடியாதபடி கூட்டம். என்னவள் வெளியிலே நிற்க நான் சிரமப்ட்டு உள் நுழைந்து சாருவையும், மனுஷ்ய புத்திரனையும் தேடினேன். அவர்களுடைய நல்ல நேரமோ என்னமோ தெரிய வில்லை அவர்கள் அங்கில்லை. என்னுடைய தேடல் சாருவின் புத்தகங்களில் இருந்து துவங்கியது. தேடினேன்… தேடினேன்… தேகத்தை தேடினேன்… ‘இன்னும் முடியலையா’ இது என் மனைவி. ‘வந்துட்டேன்’ என்று வெறும் கையுடன் திரும்பினேன். அடுத்தது கிழக்கு பதிப்பகம். நிறைய புத்தகங்கள். என் மனைவியும் ஆவலாய் புத்தகங்களை பார்வையிட்டாள். நான் ராகவன் சார் அங்கில்லை என்றதும் வெளியே வந்துவிட்டேன். அதற்க்குள் என் மனைவி மூன்று சமையல் சம்பந்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்துவிட்டு பில் போடுவதற்க்கும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். ‘சரி வாங்க போகலாம்’ என்றாள். எனக்கு அழுகையாக வந்தது. புத்தக கண்காட்சியில் சில பல எழுத்தாளர்களை பார்க்கலாம் பேசலாம் என்று வந்தால் அது நிறைவேறாது போலும என்று என்னை நான் நொந்தபடி என் மனையாளின் பின் நடந்தேன். திடீரென்று ஒரு தரிசனம்.  ஆம் அவரேதான். சாகித்ய அகாதமி விருதுபெற்ற திரு. நாஞ்கில் நாடன் அமைதியாய் தமிழினி ஸ்டாலின் முன் அமர்ந்திருந்தார். முதலில் நான் அவரை பார்த்துவிட்டு கடந்தும் விட்டேன். பின் என்ன தோன்றியதோ என் மனைவியை அழைத்துக்கொண்டு அவரருகே சென்றேன். என்னைப்பார்த்து புன்னகைத்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்.   பின் அவருக்கு சாகித்ய அகாதமி விருதினை பெற்றுத்தந்த படைப்பான ‘சூடிய பூ சூடற்க’ புத்தகத்தினை வாங்கி அவரின் கையெழுத்திற்காக அவரிடம் நீட்டினேன். ‘நட்புடன் நாஞ்சில் நாடன்’ என கையொப்பமிட்டு அன்ற தேதியையும் அதில் குறிப்பிட்டார்.  என் மனைவி யார் இவர் என வினவ.. என்னுடைய இலக்கிய அறிவை அவளுக்கு தெரிவிக்கும் விதமாய் அவளுக்கு பதிலேதும் சொல்லாமல்..(இரண்டு இலக்கியவாதிகள் பேசும்போது குறுக்கே.. ம்..)  நாஞ்சில் அவர்களைப்பார்த்து ‘ சார் உங்களை திரு. ஜெயமோகன் அவர்களுடைய வலைத்தளத்தின் மூலமாய் அறிந்து கொண்டேன். அவர் உங்களைப்பற்றி நகைச்சுவை கலந்து ‘தடாக மலையடிவார்த்தில் ஒருவர்’ என எழுதியுள்ளதை நான் பலமுறை படித்திருக்கிறேன்’ என்றேன் மிக பெருமிதத்தோடு. நாஞ்சிலார் மெல்ல புன்னகைத்து விட்டு ‘அது தடாக மலையில்லை.. தாடகைமலை..’ என்றார்.

வரும் வழியெல்லாம் என் மனையாள் அடிக்கடி சத்தமாய் சிரித்துக்கொண்டே வந்தாள். ஏனென்று தெரிய வில்லை. வீடு வரை நான் எதுவும் பேசவில்லை.  வீட்டிற்க்கு வந்த உடன் ‘சூடிய பூ சூடற்க’ புத்தகத்தை எடுத்து என் மேசையின் மேல் வைத்தேன். இப்போது நாஞ்சில் நாடனும் என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.

Published in: on ஜனவரி 18, 2011 at 12:00 பிப  Comments (6)  

மனித கடிகாரம்…

அற்புதமான கடிகாரம். கடிகாரத்தின் உள் சொடுக்கி பாருங்கள்…

http://lovedbdb.com/ nudemenClock

Published in: on ஜனவரி 13, 2011 at 5:05 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

இயந்திரன்… ஒரு பார்வை…

மனிதனைப் போன்ற உருவ அமைப்புடைய ரொபாட் அறிவியல் புனைகதைகளிலும் அறிவியல் திரைப்படங்களிலும் அதிகம் இடம் பெற்று வந்துள்ளது. ஜப்பானில் கார்ட்டூனில் ரொபாட்டைச் சித்தரிக்கையில் நட்பைக் காட்டும் பெரிய கண்களுடனும், அடர்த்தியான முடியுடனும் சித்தரிக்கின்றனர். ஆனால் அமெரிக்காவிலோ டெர்மினேட்டர் பாணியில் மழுங்க மொட்டை அடித்த தலையுடனும் பயத்தை ஏற்படுத்தும் புருவமில்லாக் கண்களுடனும் காண்பிப்பது வழக்கம்.ஆனால் இந்த நூற்றாண்டில் இன்னும் இருபது வருடங்களில் மனித ரொபாட்டை அதாவது இயந்திரனை உருவாக்கி விடுவோம் என்கின்றனர் விஞ்ஞானிகள்!இப்படி ஒரு ரொபாட்டை உருவாக்குவது பெரிய சவால்தான் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை! ரொபாட் என்ற வார்த்தை உருவானது எப்படி?

1923ம் வருடம் காரல் கேபக் என்ற செக்கோஸ்லேவேக்கிய எழுத்தாளர் பிரசித்தி பெற்ற பயங்கரமான ஒரு நாடகத்தை எழுதினார். ஆர்.யு.ஆர் என்று அதற்குப் பெயர். செக் மொழியில் உள்ள ரொபாடா (வேலை) என்பதிலிருந்து பிறந்ததே ரொபாட்! இந்த நாவலில் வேலைக்காரர்கள் அதாவது ரொபாட்டுகள் இயந்திர ராட்சஸர்கள். மனித உருவிலான இவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு எதிராகத் திரும்பி விடுகின்றனர். இந்த நாவலிலிருந்து பிறந்த இயந்திர மனிதனே ரொபாட்! மனிதனைப் போலவே அனைத்து வேலைகளையும் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டுமானால் மனிதஅமைப்புடையதாகவே ரொபாட்டை , இயந்திரனை வடிவமைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். இந்தத் துறையில் மிகவும் பிரசித்தி பெற்று ஏற்கனவே அதிரடிச் சோதனைகளை நிகழ்த்தி விட்ட சைபர்னெடிக்ஸ் துறைப் பேராசிரியர் கெவின் வார்விக், “”மனிதனைப் போலவே இருக்கும் ரொபாட் சீக்கிரமே அனைவரிடமும் பிரசித்தி பெற்று விடுவான்” என்கிறார்.ஏற்கனவே பல்வேறு விரல்களையுடைய ரொபாட் வடிவமைக்கப்பட்டுப் புழக்கத்திற்கு வந்து விட்டது. நளினமான விரல் அசைவுகளுடன் செயற்கைத் தசைகளுடன் உருவாக்கப்பட்ட இந்த ரொபாட்டுகளில் தொடு உணர்வுக்கான சென்ஸர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பல வருடங்களாகக் கடினமாக உழைத்ததன் பலனே இந்த ரொபாட் என்கிறார் வார்விக்.ஆனால் மனித மூளையைப் போலவே இயந்திரனுக்கும் ஒரு மூளை அமைக்கப்பட வேண்டும். செயற்கை அறிவு ஊட்டப்பட வேண்டும்!இது சாத்தியம்தான் என்பதை 1997ல் நடந்த நிகழ்ச்சி ஒன்று நிரூபித்து விட்டது! உலகின் பிரபல முன்னணி செஸ் மாஸ்டரான கேரி கேஸ்பரோவுடன் விளையாட ஐ.பி.எம். நிறுவனம் வடிவமைத்த “டீப் ப்ளூ’ என்ற ரொபாட் தானாகச் சிந்தித்து ஒரு காயை நகர்த்தி விட்டது. விஞ்ஞானிகள் சொல்லாத இந்தச் செயலை டீப் ப்ளூ செய்ததால் உலகமே பரபரப்புக்குள்ளாகி விட்டது.

ஆனால் இந்த “காக்’ இரண்டு வயதுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியைக் கூட இன்னும் அடைந்தபாடில்லை.சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் இன்னொரு முறையைக் கையாண்டு ஜான் ஹாலந்த் என்பவர் ரொபாட்டை உருவாக்க ஆரம்பித்தார். டார்வினின் பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் இரண்டு குரோமோசோம்கள் போன்ற கணிணிகளில் புரோகிராமை உருவாக்கினார். இவை இரண்டும் இணைந்து புதிய குழந்தையாக ஒரு புரோகிராமை உருவாக்க, இப்படிப் படிப்படியாக ரொபாட் கற்க வேண்டியதைத் தானாகவே கற்று விடும் என்று அவர் தனது கொள்கையை உருவாக்கினார்.

1984ல் டக்ளஸ் லெனட் என்னும் விஞ்ஞானி ரொபாட்டிடம் பொது அறிவை ஏற்படுத்தப் புதுமையான முயற்சி ஒன்றைச் செய்தார். அதாவது தர்க்க ரீதியிலான அடிப்படை உண்மைகளைத் தொகுத்து அவற்றை அவர் ரொபாட்டிற்குக் கற்பிக்க முனைந்தார். உதாரணமாக, “ஒரு பொருள் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது,’ “மழை பெய்யும் போது நின்றால் நனைய வேண்டியதுதான்’ இப்படி சுமார் நூறு லட்சம் சாமான்ய அறிவுத் தொகுப்பை அவர் தொகுத்தார். இதற்குப் பல கோடி “பிட்ஸ்’ கணிணியில் தேவைப்படுகிறது. இன்னும் பத்துக் கோடி உண்மைகளை அவர் தொகுத்து வருகிறார்!

ஆனால் சிக்கலான மனித மூளை கோடானு கோடி நியூரான் இணைப்புகளை உடையதாக இருக்கிறது! ஒரு நியூரானுடன் இன்னொரு நியூரானுக்குச் சராசரியாகக் குறைந்த பட்சம் சுமார் ஆயிரம் தொடர்புகள் உள்ளன. கோடானு கோடி நியூரான்களிடையே எத்தனை கோடி இணைப்புகள் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியாது!

பிரம்மாண்டமான ரொபாட் ஒன்று அமைக்கப்படுமானால் ஒரு வினாடிக்கு நூறு கோடி தகவல்களை அது அலசிப் பார்க்க முடியுமென்று வைத்துக் கொண்டால் மனித மூளை இதை விட ஆயிரம் மடங்கு அதிக வேகத்துடன் செயல்படுகிறது!

இந்த அளவு வேகம் உடைய ரொபாட்டை 2020ம் ஆண்டு வாக்கில் உருவாக்க முடியும் என்கிறார் செயற்கை அறிவுத் துறையில் வல்லுநரான ரேகர்ஞூவெய்ல் என்னும் விஞ்ஞானி.சரி, மனிதனுக்கு உள்ளது போன்ற பிரக்ஞையையும் உணர்ச்சிகளையும் ரொபாட்டிடம் உருவாக்குவது எப்படி? “”மனித மூளையைப் போலவே அமைக்கப்பட்டால்தான் மனித பிரக்ஞை மற்றும் உணர்ச்சிகளை ரொபாட்டிடம் உருவாக்குவது சாத்தியம்” என்கிறார் வார்விக்.

ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ள பொம்மை ரொபாட்டுகள் சிரிக்கின்றன; அழுகின்றன!ஆனால் தனது லட்சியங்களைப் பிரக்ஞை மூலம் நிர்ணயிக்க மனிதனால் முடியும். சுற்றுப் புறச் சூழ்நிலைக்கு ஏற்ப அவனது உணர்ச்சிகள் மாறுபடுகின்றன. இவற்றை ரொபாட்டிடம் உருவாக்குவது மிகவும் கடினம் என்றாலும் 2050ம் ஆண்டு வாக்கில் அப்படி ஒரு முயற்சி வெற்றி பெறும் என்கிறார் வார்விக்.

பதினெட்டு ஆண்டுகளாக டெட்சுவன் அடோமு என்ற ரொபாட் ஜப்பானில் காமிக்ஸ் புத்தகங்களில் சித்தரிக்கப் பட்டுப் பெரும் வரவேற்பையும் புகழையும் பெற்று விட்டது. இது மனித குலத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு ராட்சஸர்கள், கொடியோரிடமிருந்து மனித குலத்தைக் காப்பாற்றி அமைதியை நிலை நாட்ட உதவும் கற்பனைக் கதாபாத்திரம்.

இதைப் போலவே மனித குலத்திற்கு நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் இப்போதுள்ள மின் விசிறி, மின் சலவைப் பெட்டி, மைக்ரோ அடுப்பு போல ரொபாட்டும் உதவும் நாள் வெகு தூரத்தில் இல்லை! மனிதனுடன் உறவாடி அவன் இடும் கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயலாற்றும் இயந்திரன் உருவாகி வீட்டில் வளைய வரும் போது மனித குலத்தில் ஒரு புதிய பரிமாணம் உருவாகி விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்!

அந்த நாளை உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!

—————————————————————————————————————————-

  • ஒரு மாதம் கழித்து படம்பார்த்துவிட்டு வந்து  விமரிசனம் எழுதினால் பதிவுலகில் கும்மி விடுவார்கள் என்று தம்பி தனிக்காட்டு ராஜா ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார் என்பதை நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்…
  • ஆமா.. தெரியாமத்தான் கேக்கிறேன்.. எந்திரன் என்ற தமிழ் சொல் சரியா அல்லது இயந்திரன் என்ற தமிழ் சொல் சரியா?… (இரண்டு வரிக்கு மிகாமல் விடையை பின்னூட்டமிடுக)
  • காதல் அணுக்கள் பாட்டு இப்போ சூப்பர் ஹிட் என்று என் நண்பன் ரஜினிராஜ் கூறியது முற்றிலும் சரியே..(படம் ரிலீசுக்கு முன்ன கேட்டதவிட.. இப்போ கேட்கும்போது நல்லாத்தானே இருக்கு.. உண்மைய சொல்லுங்க..)
  • இதே ரோபோ மேட்ர வச்சி என் நண்பன் கிட்ட நா ஒரு கதய சொன்னேன்.. அப்ப ஓடினவன்தான் இன்னும் ஊரு திரும்பல.. (நண்பேன்டா…)
  • சொந்த சரக்கு இல்லீங்கோ.. நன்றி  :  http://sify.com/cities/mumbai/fullstory.php?id=13564014
Published in: on ஒக்ரோபர் 28, 2010 at 11:12 முப  Comments (8)  

வாழ்க்கை வளம்பெற…

உங்களைவிட மேம்பட்ட நிலையில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஏனெனில் அவ்வாறு ஓப்பிட்டு பார்க்கையில் உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையும், போதாமை குணமும் ஏற்படும்.

—————————————————————————————————————————- உங்களுடைய செயல்களில் நீங்களே குற்றம் காணாதீர்கள்.

—————————————————————————————————————————- தற்போது நீங்கள் பெற்றிருக்கும் நிலைமையை எண்ணி மிகவும் பெருமை கொள்ளுங்கள். இது உங்கள் எண்ணங்களில் இருந்து முரண்பட்டதாக தெரிந்தாலும் இந்த எண்ணமே உங்களை மேம்படுத்த முதற்படியாக விளங்கும்.

—————————————————————————————————————————- உங்களிடம் உள்ள நல்ல குணங்களை பட்டியலிடுங்கள். உங்களை நீங்களே மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- உங்களுடைய எண்ணங்களில் உண்மையாக இருங்கள். உங்களுடைய எண்ணங்கள் தகுதியில்லாததாக தோன்றினால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- உஙகளுடைய முன்னேற்றத்தில் தாமதம் ஏற்படுவது இயற்கை. அவற்றிலிருந்து உங்கள் குறைகளை அறியுங்கள். அது அடுத்த கட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

—————————————————————————————————————————- வெற்றி, தோல்வி இரண்டையும் மனஅமைதியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- வாழுங்கள், மற்றவரை வாழ விடுங்கள்.

—————————————————————————————————————————- ஒருவர் மற்றவரை விட தாழ்ந்தவரும இல்லை, மேம்பட்டவரும இல்லை என்ற எண்ணத்தை மனதில் பதிய வையுங்கள். ஒவ்வொரு மனிதனும் தங்களுக்கென்று தனித்துவம் பெற்றிருபபர்.

—————————————————————————————————————————- அதிகாரத்தைக்கொண்டு கலகம் செய்யாதீர்கள். நட்பானவராக திகழுங்கள்.

—————————————————————————————————————————- அளவான பொறுமை கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- நீங்கள் செய்த குற்றங்களையும் தவறுகளையும் அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள்.

—————————————————————————————————————————- மற்றவர்களை இழிவுபடுத்தாதீர்கள்.

—————————————————————————————————————————- அவசியமான செயல்களுக்கு மட்டும் திட்டமிட்டு செயல்படுங்கள்.

—————————————————————————————————————————- வாக்குவாதத்தினால் ஒரு செயலில் வெற்றி காண இயலாது. மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு செவி கொடுங்கள். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————-வெளித்தோற்றத்தின் அடிப்படையில் மற்றவர்களை எடை போடாதீர்கள்.

—————————————————————————————————————————-

மேற் கூறியவற்றை பின்பற்ற இயலாது என நீங்கள் நினைக்கும் பட்சத்தில் இதுபோன்ற  மொக்கைகளை படிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். (யாருப்பா அது… இந்த ப்ளாக்கையே  நிறுத்தச்சொல்லுறது…)

Published in: on ஒக்ரோபர் 20, 2010 at 5:40 முப  Comments (2)  

தண்ணியிலே செஸ் விளையாடுவது எப்படி…

யார் எந்தெந்த காய்களை(கோப்பையை) வீழ்த்துகிறார்களோ அவர்களே அந்தந்த கோப்பையை காலி செய்யலாம்..  எப்படி என் கண்டுபிடிப்பு..   என்ன ஒரு ரவுண்டு வர்ரீங்களா.. 

 

பின் குறிப்பு :  ஆனந்த் அண்ணே மன்னிச்சுடுங்க.. பின்ன என்ன இழவுக்கு இதெல்லாம்ன்னு நீங்க கேட்டீங்கன்னா… எல்லாம் ஒரு  கிக்குக்காகத்தான்.. ஹி..ஹி..

Published in: on ஜூலை 26, 2010 at 11:25 முப  Comments (6)  

ரயிலு ரயிலுதான்…

பிரிட்டனின் புதியதொழில்நுட்பத்துடன் கூடிய அதிவேக இரயிலின் வடிவமைப்பு உங்களின் பார்வைக்காக.  ஒரு மணி நேரத்தில் சுமார் 225 மைல்களை கடந்துவிடக்கூடிய அதிவேகமும் பயணிகளைக்கவரக்கூடிய அதிநவீன உள்கட்டமைப்பும் கூடிய இந்த இரயிலைப்பார்க்கும்போது அதில் பயணம் செய்ய ஆசையாய் இருக்கிறது அல்லவா.

 

—————————————————————————————————————————-

 

 —————————————————————————————————————————-

 

—————————————————————————————————————————-

படங்களை பெரிய அளவில் பார்கக படத்தின் மீது சொடுக்கவும்.

Published in: on ஜூலை 21, 2010 at 5:06 முப  Comments (4)  

குளிக்க வாங்க…

தலைப்பைப்த்துட்டு என்னை தப்பா நினைக்காதீங்க.  நம்முடைய அன்றாட நிகழ்வுகளில் குளியல் என்ற நிகழ்வு ஒரு பிரதான இடத்தை வகிக்கிறது. (ஆமா ஊருக்கு தெரியாத அதிமுக்கியமான விஷயத்தை சொல்லிட்ட.. அது சரி அன்றா நிகழ்வுகளில் குளியலும் ஒன்றா.. ஆகா நீ சென்னைப்பக்கம் வெயிலுக்குக்கூட ஒதுங்கனதில்லைன்னு தெரியுது… என்று நீங்கள் பின்னூட்டமிட தயாராவது எனக்குத்தெரிந்தாலும்) உங்களுடைய அகம் மற்றும் புறத்தூய்மையின்பால் உள்ள  அக்கறையால்  இதுவரை நீங்கள் எப்படி குளித்திருந்தாலும் எனக்கு கவலையில்லை.  ஆனால் இப்படித்தான் குளிக்கவேண்டும் என்று நம்மை நல்வழிபடுத்துகின்ற இந்த  கட்டுரையை படித்து பயனுறுக.

Published in: on ஜூன் 30, 2010 at 11:24 முப  Comments (1)  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...