தூத்துக்குடி…6

தூத்துக்குடியின் வீதிகளில் நடந்தோம். எங்களுடன் சில நண்பர்கள்.   பொதுவாக இது போல வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அந்தந்த இடங்களுடைய சிறப்பை அறிய அந்தந்த இடங்களை சுற்றிப்பார்த்து தெரிந்து கொள்வது எனக்குப்பிடிக்கும்.  நம்மைச்சுற்றி நடக்கின்ற விஷங்களின் மூலமாக சில சிறப்பான தகவல்களை பெறலாம். அவ்வாறு எனக்கு கிடைத்த சில தகவல்கள் 1) தூத்துக்குடி மாநகராட்சியாக சமீபத்தில்தான் மாற்றப்பட்டது 2) பொரித்த புரோட்டா கிடைக்கும் 3) மக்கள் பெரும்பாலும் கிருத்துவ மதத்தை சார்ந்திருப்வர்கள் 4)  ஆசியாவிலே மிகச்சிறந்த உப்பு இங்கிருந்துதாதன் ஏற்றுமதியாகிறது 5) ஸ்பிக் உரத்தொழிற்ச்சாலை மிகபெரிய அளவில் இங்குதான் உள்ளது 6) துறைமுகநகரமானதால் வேலையில்லை என்பது இங்கு இல்லை 7) பழமையான தேவாலயங்களை கொண்ட நகரம். 

பகலில் நாங்கள் பார்க்காத கூட்டதை இரவில் நாங்கள் பார்க்கநேரிட்டது. கூட்ட நெரிசலில்லாமல் நடக்கமுடிந்தது.  மாநகராட்சி என்றாலும் மற்ற மாநகராட்சிகள் போல பெரிய விளம்பரமேதுமில்லை. நண்பர்கள் ஓரிடத்தில் நின்றார்கள். நான் நினைத்தது சரிதான். டாஸ்மாக் பார்தான்.   நண்பன் என்னைப்பார்த்து ‘ என்னப்பா பாக்கிற.. வா உள்ளே போலாம் என்றான்’. போனேன். வெட்ட வெளியில் அமைந்திருந்தது.  பாருக்குள்ளே நல்ல நாடு. மங்கலான் வெளிச்சத்தில் ஆங்காங்கே சில  மேசைகள். மேசைகளை சுற்றி நாற்காலிகள். கூட்டமதிகமில்லை. ஒரு மேசையை தேர்வு செய்து அமர்ந்தோம்.  ஒரு பையன் அருகில் வந்து ‘என்ன சார் சொல்லியிருக்கீங்க’ என்றான். நண்பன் அவனை தனியாக அழைத்து ஒரு பட்டியலையே தந்தான்.  கூட வந்திருந்த நண்பர்களின் குசல விசாரிப்புகள் முடிவடைந்ததும் பையனும் அவனுடைய உதவிக்கென்று மற்றொருவனும் வந்து மைசையை  நிரப்பினார்கள்.  கச்சேரி ஆரம்மானது.

அரைமணிக்குள் பாதிகிணறு தாண்டிவிட்டிருந்தோம். அமிலம் வயிற்றை அரிக்க ஆரம்பித்தது.  நான் மெதுவாக நண்பனிடம் ‘பாஸ் சாப்பிடவேண்டாமா’ என்றேன் கனிவாக. அவனோ ‘2ரவுண்டுதான் முடிஞ்சிருக்கு.. அதுக்குள்ளயா’ என்றான்.  ‘நா வேணும்னா வெளியில போய் பாத்துட்டு வரட்டா’ என்றேன். ‘ஒண்ணும் வேண்டாம்… இந்தா இந்த முறுக்கை சாப்பிடு’ என்றான்.  யானைப்பசிக்கு சோளப்பொறியா என நினைத்தபடி முறுக்கை கடித்தேன். அதற்க்குள் அடுத்த ரவுண்ட் ரெடியாகிவிட்டிருந்தது.  நான் என்னுடைய பங்கை முடித்துக்கொண்டு எழுந்தேன்.  சற்றே உலாவுவது போல மெல்ல நடந்து வெளியே வந்துவிட்டேன்.  எதிரிலே வரிசையாக இரவு உணவகங்கள்.  எல்லா கடைகளிலும் பரோட்டாவே  பிரதான உணவாக  இருந்ததது.  நான் அருகில் சென்று பார்த்தேன். பரோட்டா போடுவது என்பது  தனிக்கலை.  பள்ளிப்பருவத்தில்  ரோட்டோர புரோட்டா கடைகளில் மாஸ்டர்கள் மாவை சவ்வுபோல் இழுத்து அதை பரப்பி மேலே எறிந்து செய்யும்  சாகசங்களை வேடிக்கை பார்த்தது நினைவுக்கு வந்தது.  ஒரு முறை விருதுநகர் பயணத்தின் போது மூன்று நாட்களும் புரோட்டாவையே உணவாக உண்டு அதற்க்கு அடிமையானது நினைவுக்கு வந்தது.  முடிவெடுத்தேன் இன்று புரோட்டாவை விடுவதில்லை என.  வேகமாக நண்பர்கள் இருக்கும் இடம்  நோக்கி போனேன்.   அங்கு அவர்களை காணவில்லை… 

….. பயணம் தொடரும்

Published in: on பிப்ரவரி 13, 2010 at 10:37 முப  Comments (5)  

The URI to TrackBack this entry is: https://ksurendran.wordpress.com/2010/02/13/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-6/trackback/

RSS feed for comments on this post.

5 பின்னூட்டங்கள்பின்னூட்டமொன்றை இடுக

  1. //ஒரு முறை விருதுநகர் பயணத்தின் போது மூன்று நாட்களும் புரோட்டாவையே உணவாக உண்டு அதற்க்கு அடிமையானது நினைவுக்கு வந்தது. முடிவெடுத்தேன் இன்று புரோட்டாவை விடுவதில்லை என. //

    ஏங்க சுரேந்திரன், இது உங்களுக்கே அநியாயமா தெரியல? அதாங்க, இந்த பொரிச்ச பரோட்டா, கோழிக்குழம்பு இதையெல்லாம் போட்டு ஊருக்கு வர்ற ஆசையை கெளப்பி விட்டுட்டீங்களே….ம்ம்ம்?

  2. ஏங்க சுரேந்திரன், இது உங்களுக்கே அநியாயமா தெரியல? அதாங்க, இந்த பொரிச்ச பரோட்டா, கோழிக்குழம்பு இதையெல்லாம் போட்டு ஊருக்கு வர்ற ஆசையை கெளப்பி விட்டுட்டீங்களே….ம்ம்ம்?

    – Naanum ithaye sollren.
    http://eluthuvathukarthick.wordpress.com/

  3. என் நோக்கம் நிறைவேறிடுத்து…

  4. // ஒரு முறை விருதுநகர் பயணத்தின் போது மூன்று நாட்களும் புரோட்டாவையே உணவாக உண்டு அதற்க்கு அடிமையானது நினைவுக்கு வந்தது //

    என்னையும் ஊருக்கு அனுப்பணும்னு முடிவு பண்ணியே இதெல்லாம்…….

    ம்… நடக்கட்டும்.

  5. வெயிலான் அவர்களின் வருகைக்கு நன்றி.


பின்னூட்டமொன்றை இடுக

Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...